January 11, 2013

ஜ்வல்யா





'நா(ன்) தான் இப்போ
அப்பாவாக்கும்’
ஜ்வல்யாவால்
சுலபமாய்
அப்பாவாக முடிகிறது..
என்னால் முடியவில்லை
ஜ்வல்யாவாக.

22 comments:

ராமலக்ஷ்மி said...

அழகு:)!

G.M Balasubramaniam said...

ஜ்வல்யாவை அப்பாவாக ரசிக்க முடியும். உங்களை ஜ்வல்யாவாக......?வித்தியாசமான(?) கற்பனையில் ஒரு சிறுகதை என் வலையில்...

rajamelaiyur said...

குழந்தையின் சேட்டைகளை ரசிப்பதே பெரிய பொழுதுபோக்கு தான் ..

நிலாமகள் said...

ஹைய்யோ...!

வெங்கட் நாகராஜ் said...

அசத்துகிறாள் ஜ்வல்யா..... :)

கவியாழி said...

இன்னொருமுறையும் நீங்கள்அப்பாவானால்?

மனோ சாமிநாதன் said...

ஆசைப்பட்டாலும் அந்தக் குழந்தைப்பருவம் திரும்பி வரப்போவதில்லை! அந்தக் குழந்தை மிக அழகு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்பாவாக மாறிய ஜ்வல்யா சூப்பர்.
ஜ்வல்யாவாக முடியாத அப்பா பாவம்.
நல்லா இருக்கு ;)

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

ezhil said...

அருமை....

கோமதி அரசு said...

'நா(ன்) தான் இப்போ
அப்பாவாக்கும்’//

அருமை, அருமை.
மழலை வாழ்க வளர்க!

ADHI VENKAT said...

ஜ்வல்யா படமும், பெயரும் அழகு...

சட்டென அப்பாவாக முடிகிறதே!

கே. பி. ஜனா... said...

அப்பாவின் ஏக்கம் புரிகிறது!

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

Ranjani Narayanan said...

அப்பாவாக மாறிய ஜ்வல்யாவிற்கும் ஜ்வல்யாவாக மாறமுடியாத ரிஷபன் அப்பாவிற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

manichudar blogspot.com said...

பேராசை உங்களுக்கு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

மிக அழகு படமும் பதிவும்.

மாதேவி said...

ஆகா! அழகு.

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

vasan said...

குழ‌ந்தைக‌ள் மாட்டிக் கொள்ளும் க‌ல‌ர்ஸ் எல்லாம் க‌ல‌டாஸ்கோப்.
நாம் போடும் க‌ல‌ர்ஸ் எல்லாம் வெள்ளெழுத்து க‌ண்ணாடி!

vasan said...

த‌ளிர் குருத்து (முளை) கிளைகளாகலாம்,
கிளைக‌ள் குருத்துக்க‌ளாக‌விய‌ல‌து.
(புதிய‌ குருத்துக்க‌ள் அரும்ப‌லாம் அதில்)

சீனு said...

வணக்கம் சார் இன்றுஉங்களைப் பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி

http://blogintamil.blogspot.in/2013/01/tamil-bloggers-2.html

vimalanperali said...

குட்டிக்கவிதை.க்யூட் கவிதை.நன்றாக யிருக்கிறது வாழ்த்துக்கள்.