எந்த வேஷமும்
அத்தனை
இயல்பாய்
பொருந்துவதில்லை
வாழ்வில்..
கோமாளித்தனங்கள்
செய்வதில்
ஒருவரை ஒருவர்
மிஞ்சிக் கொண்டு..
என்றேனும்
வேஷம் கலைத்து
ப்ரியம் காட்டினால்
சிரித்து விட்டுப் போகவே
கூட்டம்..
எதற்கும் தேவைப்படலாம் என
கைவசமே இருக்கிறது
கையுறையும்
பபூனின் முகமூடியும்
11 comments:
உண்மை தான் ரிஷபன்.. முகமுடி அணிந்தால் தான் பலருக்கு பிடிக்கிறது. நல்ல கவிதை. :)
சிரிக்கவைப்பதிலும் கோமாளியின் பங்கு உள்ளதே
நிதர்ஸனம்! முகமூடிகளற்று எவருடனும் பழக முடிவதில்லை என்பது வருத்தமான உண்மையல்லவா! அருமைங்க!
சொல்லவேண்டியதை
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்ல வேண்டியவரிடம்
சொல்ல இயலாத போது
கோமாளி ஒருவன்
கை கொடுக்கிறான்.
சுப்பு தாத்தா.
எதற்கும் தேவைப்படலாம் என
கைவசமே இருக்கிறது
கையுறையும்
பபூனின் முகமூடியும்..//
மிகவும் அத்தியாவசியமானவை தான் ..
வேஷம் போட்டால் தான் இங்கு வாழ முடிகிறது....
//என்றேனும்
வேஷம் கலைத்து
ப்ரியம் காட்டினால்
சிரித்து விட்டுப் போகவே
கூட்டம்..//
உண்மைதான் சார்.
சிறப்பாக இருக்கு.
நிதர்சனம். மிக நன்று.
எல்லாருக்குள்ளும் இருக்கிற கோமாளி...ஸோ அதை ரசிக்கத் தவறுவதில்லை மற்றவர்களிடமும்!
ப்ரியம் காட்டினால் சிரித்து விட்டுப் போகவே...
வரிகளின் அடியாழத்தில் தெறிக்கும் ஆதங்கம் கனக்கிறது.
மனம் கொலை வெறியில்...
Post a Comment