April 03, 2013

ஜ்வல்யா

கண்டு பிடிப்பதற்காகவே 
ஒளிகிறாள் ஜ்வல்யா.

கண்டுபிடிக்கக் கூடாது என்றே
என் தேடல்கள்.

கண்டுபிடித்து விடுகிறோம்
ஒவ்வொரு முறையும்
எங்களை !



தன் கனவுகளில்
வருவதை எல்லாம்
பட்டியலிட்டுக் கொண்டிருந்தாள்
ஜ்வல்யா.
எதிர் வீட்டு குட்டி நாய்..
அடுத்த தெரு தாத்தா.. பாட்டி..
எப்போதோ பெய்த மழை..
ஜானு பொம்மை..

‘அப்பா வரலியா ஒரு தடவை கூட’
என்றேன் குரல் பிசிர.

என் கன்னம் தாங்கி
சொல்கிறாள்..
‘நீ நிஜம் பா”

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

கண்டுபிடித்து விடுகிறோம்
ஒவ்வொரு முறையும்
எங்களை !
‘நீ நிஜம் பா”

ராமலக்ஷ்மி said...

நெகிழ வைக்கிறாள் ஜ்வல்யா!

திண்டுக்கல் தனபாலன் said...

"நீ நிஜம் பா” நெகிழ்ச்சியுடன்...

அருமை...

பால கணேஷ் said...

ரசனையின் மறுபெயர் ஜ்வல்யா! ஜொலிக்கிறாள் மனதில்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. கனவல்ல ”நீ நிஜம் பா” ;)

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
கடைசி வரிகள் குழந்தையின் குரலில்
என்னுள் இன்னமும் ஒலித்துக் கொண்டே உள்ளது
வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

என் கன்னம் தாங்கி
சொல்கிறாள்..
‘நீ நிஜம் பா”//

தந்தையை நெகிழ வைத்த ஜ்வல்யா.
அற்புதமான தந்தை, மகள் பாசம்.

வெங்கட் நாகராஜ் said...

முகப் புத்தகத்தில் ரசித்ததை மீண்டும் ரசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி ரிஷபன் சார்.

நீ நிஜம் பா.... டச்சிங்!

Ranjani Narayanan said...

எத்தனை நன்றாகப் பேசுகிறாள் ஜ்வல்யா!

அப்பாவும் ஜ்வல்யாவும் எங்களை ரொம்பவும் மயக்குகிறார்கள். அப்பா ஜ்வல்யாவாகவும், ஜ்வல்யா அப்பாவாகவும் மாறும் இந்தக் கவிதைகள் ரொம்ப அருமை!

கே. பி. ஜனா... said...

ஜ்வலிக்கிறாள் ஜ்வால்யா!நிஜம்!

நிலாமகள் said...

என்ன தவம் செய்தனையோ ஜ்வல்யா அப்பா?!

ADHI VENKAT said...

//‘அப்பா வரலியா ஒரு தடவை கூட’
என்றேன் குரல் பிசிர.

என் கன்னம் தாங்கி
சொல்கிறாள்..
‘நீ நிஜம் பா”//

உணர்வுப்பூர்வமான வரிகள். ஜ்வல்யா ஜொலிக்கிறாள்.

அப்பாதுரை said...

joy for ever.

ஹ ர ணி said...

அன்பு ரிஷபன்...

இந்தக் கவிதையில் என்னை மறந்தேன். என்னைப் புதைத்துக்கொணடேன். நீ நிஜம்பா...திக்குமுக்காடிப்போகிறேன் பரவசத்தில்...

கீதமஞ்சரி said...

ஜ்வல்யாவுடன் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டும் சரி, வார்த்தை விளையாட்டும் சரி, சொக்க வைக்கின்றன. பாராட்டுகள் ரிஷபன் சார்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஷைலஜா said...

கவிதையை இனிமை என்பதா
புதுமை என்பதா?
ஒரு கவிதை இங்கு கவிதையாய்...

வாழ்த்துகள் ரி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5204.html) சென்று பார்க்கவும்... நன்றி...