”ஹலோ.. அக்கவுண்ட்ஸ்ங்களா”
“ஆமா..”
“மெடிகல் கிளைய்ம்ல ஒரு டவுட்டு”
“அது வேற செக்ஷன்.. நம்பர் சொல்லவா”
“அது எனக்குத் தெரியும்.. நான் டவுட் கேக்கறது உங்ககிட்டதான்”
“கேளுங்க”
“ஒரே ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகி.. சிசேரியன் .. ஆச்சு.. ரெண்டு பேருக்கு.. ஆனா பில் செட்டில் பண்ணதுல பணம் கூடக் குறைய இருக்குதுங்களே”
”அப்படியா.. “
”ஒரே நாள்.. ஒரே மாதிரி சிசேரியன்.. அரை மணி இடைவெளில.. 1500 ரூபா குறைச்சு கொடுத்திருக்காங்க ஒருத்தருக்கு..”
(இதையே பத்து நிமிஷம் விடாமல் கேட்டார்)
“ரெண்டும் என்ன குழந்தைங்க”
“ரெண்டுமே ஆண் குழந்தைங்கதான்”
“ஓ.. அப்போ அதுலயும் வித்தியாசம் இல்ல.. ம்ம்”
எதிர்முனையில் வெற்றிக் களிப்பு.
“அதாங்க சொல்றென்.. எப்படி குறைக்கலாம்”
“ஆங்.. குழந்தை என்ன வெயிட்”
“ம்ம்.. என் குழந்தை 2.9 இன்னொன்னு 3.2”
“அதானே பார்த்தேன்.. வித்தியாசம் இருக்குல்ல.. அதான் குறைச்சு பாஸ் பண்ணி இருக்காங்க “
“ஓ.. அப்படியா.. அக்கவுண்ட்ஸ்ல தப்பு பண்ண மாட்டாங்கன்னு அப்பவே சொன்னேன் அவகிட்ட.. இப்ப புரிஞ்சிருச்சு.. நன்றி ஸார் “
(ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா.. கண்ணைக் கட்டுதே.. )
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து இருக்கைக்காரர்களுக்கு சிரிப்பு.
உண்மையில் என்னவென்றால்.. ஒரு டெலிவரிக்கு கூடுதலாய் ஊசி.. மருந்து தேவைப்பட்டிருந்தது.. அதான் அந்த தொகை வித்தியாசம். விசாரித்த நபர் என்னிடமும் பதினோராவது ஆளாய்க் கேட்டார். வேறு வழியின்றி இப்படிப் பேசி அக்கவுண்ட்ஸ் மானத்தைக் காப்பாத்தினேன்.
15 comments:
நல்ல வித்தியாசத்தைக் கண்டு சொன்னீர்கள்:)!
சூப்பர்... கில்லி படத்தில விஜய் சொல்ற மாதிரி எல்லாமே நம்ம அப்பா வாங்கிக் கொடுத்தது தானே...
நல்ல நகைச்சுவையாக உள்ளது.
எப்படியெல்லாம் பேசி அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் மானத்தைக் காப்பாத்த வேண்டியுள்ளது .... பாருங்கோ. ;)
சட் என்று எடையைக் காரணம்
காட்டி கணக்காய் காப்பாற்றியதற்குப் பாராட்டுக்கள்..!
சரியான தகவல் சொல்லி விளங்க வைப்பது பிரச்சனையா.?
வணக்கம் GMB அய்யா
இது சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப் பட்டது.
ஆனால் உண்மையிலேயே ஒரு அவதியும் உண்டு..
என்ன விளக்கம் சொன்னாலும் பணம் குறைவாகப் பெற்றவர்கள் அந்த இழப்பினைத் தாங்க முடியாமல் கணக்குப்பிரிவை குறை சொல்லிப் போவது இயல்பு.
அவர்களை அவர்கள் வழியிலேயே போய் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதைத்தான் இப்படி சொல்லி இருக்கிறேன். அவரிடம் உண்மையான விளக்கத்தைச் சொன்னதால்தான் அதைக் கீழே காட்டி இருக்கிறேன்.
நன்றி.
சில சமயங்களில் அதிகம் பொறுமைத் தேவைப்படும். சில சமயங்களில் பொறுமையினைச் சோதிக்கும் கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
:) good one.. especially the photograph! nice choice..
நல்லாதான் காரணத்தை கண்டுப்பிடிச்சு சொல்லி இருக்கீங்க!! ஒரு நாள் அவருக்கு உண்மை தெரிஞ்சா உங்களுக்கு இருக்கு தீபாவளி!
வலியும் அவஸ்தையும் அவதிப்படுவோரிடம் கேட்டால் மட்டுமே தெரியும் என்பது போல.. நாம் என்னத்தான் நல்லதா எடுத்துச்சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இல்லாதவரிடம் என்ன சொன்னாலும் உண்மையை சொன்னாலும் எடுத்துக்கொள்வாரில்லை... அப்ப என்ன செய்யனும்? சமயோஜிதமாக செயல்படவேண்டும்... எத்தனை வருட அனுபவம் இருந்தால் இத்தனை கவனமாக பார்த்து அவர் மனமும் புண்படாதமாதிரி அதே சமயம் அவருக்கான காரணத்தையும் அவர் விரும்பியதாகவே அளித்திருக்க இயலும்... உங்க பொறுமையான பதிலும் பண்பட்ட வார்த்தைகளும் தான் அவர்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளது.... ஹாட்ஸ் ஆஃப் பா ரிஷபா...
எப்படிங்க இப்படியெல்லாம்..!செம காமெடியா இருந்தாலும் அந்த ஆளை நினைச்சா பாவமா இருக்கு..
அன்பு ரிஷபன்
அசத்தல். அருமை. அசத்தல்.
வழக்கமான ஒன்றையே எதோ புதியதாக கேட்கும் போது வரும் கோபத்திற்கு அளவே இருக்காது. அனால் பொறுமையாக பதில் சொல்லவேண்டும். நம் பொறுமை சோதிக்கப்படும் நேரம். திறமையை காட்டும் கதை. நன்றாக உள்ளது.
நல்ல சமாளிப்பு! இவர் சரின்னுட்டுப் போயிட்டார். அவரோட 'அவ'?
வெகு சமயோஜிதம்.
இடைநிலையில் வேறு எப்படிச் சமாளிப்பது!!
இரட்டைக் குழந்தைகள் படம் நெகிழ்வாக இருக்கிறது.
Post a Comment