November 08, 2009

பயணங்கள்

ஏதேனும் ஒரு அவசியம்
எப்போதும் நேர்ந்து விடுகிறது..
அல்லது..
வயிற்றுப்

பிழைப்பிற்க்காகவாவது..
மனசுக்குள் இடம்
கிட்டாதபோது தான்
வெளியேறுதல்கள்
நடக்கின்றன ..
வண்டிக்குள்ளும் இடம் மறுக்கப்பட்டால்
என்ன..
ஒண்டிக்கொள்ள
இந்த இடம் போதாதா ?
உயிர் பணயம் வைத்து
ஒரு உயிர் பயணம் !
யார் காலடியிலாவது
எப்போதும் இருக்க
தலையெழுத்தா என்ன ?
இவள் சாதிப்பாள் என்று
சரித்திரம் பின்பு சொல்லுமோ என்னவோ ..
இவள் தரித்திரம் ஒழிந்து
வாழ்க்கையில் நல்ல இடம் கிடைத்து
அமர்ந்தால் போதும்!
இதைப் பார்த்து அதிர்ந்த இதயம்
இன்பமாகி வாழ்த்தும் அப்போது !
போய் வா பெண்ணே பத்திரமாய் !

2 comments:

Rekha raghavan said...

நல்ல சிந்தனை
நல்ல வேண்டுதல்
நல்ல வரிகள்
மொத்தத்தில்
நல்ல கவிதை.
ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

ரயிலோட்டத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கவிதையோட்டம் மனதில் தடதடவென்று மகா இரைச்சலுடன்!