அம்மா ..
நான் வெளியே வராமல்
இருக்க இயலாதா ?
எதையும் பார்க்கும் / ஏற்கும் மனசு
எனக்கில்லை அம்மா..
உன்னுடன் கர்ப்பவாசம்
உகப்பாய் இருக்கிறது எனக்கு ..
மனிதர்கள் எத்தனையோ
கண்டு பிடிக்கிறார்களாமே..
நான் வெளியே வராமல்
உள்ளிருக்க உபாயம்
சொல்லக்கூடுமோ அவர்களால்..
இல்லாவிட்டால்
ஓர் உறுதிமொழியாவது
தரட்டும் எனக்கு..
என்னைப் போல ஜனனம்
எத்தனை சிரமம் என்று அறிந்தும்
உயிர்களை வெட்டிச் சாய்ப்பதில்
சூரர்களாய்
பவனி வருவதை
நிறுத்தி விடுவோம் என்று!
5 comments:
என்ன ஸார் கவிதை இது ?
கர்ப்ப வாச சிசு பேசுவது
போல் இருக்கிறது .....
arumaiyaana, vanmuRaiyai veerarukkum, samooga sinthanaiyulla, karppappaiyil uLLa kuzhanthaiyin kuralil oru kaRpanaik kavithai. PaaraattukkaL.
vai Gopalakrishnan
நல்ல கவிதை. சூரர்கள் காதில் விழுமா?
Tamilish ல் வாக்களித்த அன்பர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி
அருமை
Post a Comment