நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
December 03, 2009
மனசுக்குள் ஒரு பாடல்
மனசுக்குள் ஒரு இசை
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
கேட்டிருக்கிறீர்களா..
அதன் வரி வடிவம் தான்
சில நேரங்களில்
கவிதையாய் .. கதையாய்
படைப்புகளாய் ..
இசை நம்முள் ஒலிக்காத
தருணங்களில்
மனிதத் தன்மை
தொலைந்து போகிறது..
"கீப் த மியுசிக் ஆல்வேஸ் "
அடுத்தவர் மீது நம் நேசம்
ஒரு பெருமழையாய் வர்ஷிக்க
இடைவிடாமல் இசை
ஒலிக்கட்டும் நம் இதயத்துள்..
மனதின் பாடலை விட
இனிமை வேறெதில் உண்டு..?!
பதிவாகாத பல பாடல்களை
தன்னுள் சுமந்து என் மனம்
இசைத்துக் கொண்டிருக்கும்
காலம் வரை
என் உதடுகளில் புன்னகை மின்னும்
பிறருக்காக..
பிறரின் கைகள் நீளும்
என் கரம் பற்றிக் கொள்ள..
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள
அனைவருக்கும் தேவை
அவரவருக்கான
மனதின் இசை !
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அடுத்தவர் மீது நம் நேசம்
ஒரு பெருமழையாய் வர்ஷிக்க
இடைவிடாமல் இசை
ஒலிக்கட்டும் நம் இதயத்துள்..//
ரசிக்கும்படியான வரிகள்..
கவிதை அருமை
உங்கள் மனதின் இசை கவிதையில் கேட்கிறது...
நன்றி அகல்விளக்கு.. (உங்கள் பிளாக்ஸ் இரண்டுமே அருமை..) ஜனா சார்.. என் மனசு உங்களுக்குத் தான் புரியுமே ஈசியா
//பதிவாகாத பல பாடல்களை
தன்னுள் சுமந்து என் மனம்
இசைத்துக் கொண்டிருக்கும்
காலம் வரை
என் உதடுகளில் புன்னகை மின்னும்
பிறருக்காக..//
உங்களது கவிதை வரிகள் நிஜத்தை பிரதிபலிக்கிறது, மிகவும் அருமை.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
உண்மை நிறைந்த வரிகள்...
ரொம்ப நல்ல இருக்கு..
Post a Comment