January 07, 2010

மண்ணில் சொர்க்கம்..

தெருவுல போகும்போது தனக்குத் தானே பேசிகிட்டு போகற ஆட்களை நீங்க பார்த்து இருக்கீங்களா..

ஆண் .. பெண் இரு பாலருமே..

என்ன கஷ்டமோ என்று மனசு முதலில் சங்கடப்பட்டது.

மனசு விட்டு பேச சரியான நண்பர் வட்டம் இல்லாத குறை.. உணர்வுகளைப் பகிர ஆட்கள் இல்லாத தனிமை..

ரொம்ப பேர் பாருங்க.. நாம என்ன சொல்ல வரோம்னே கேட்காம தீர்வு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க.. அப்பவும் இதே சிரமம் தான்..

தவறிப் போய் யாராச்சும் நாம சொல்றத முழுசா கேட்டாங்கன்னா.. ஏதோ ஒரு உள் குத்து இருக்குன்னு அர்த்தம்..

அரைமணி நம்ம பேச்சை கேட்டப்புறம் "கை மாத்தா ரூபா தரியா.. புழைச்சுக் கிடந்தா இந்த ஜன்மத்துல வசூல் பண்ணிக்க.." என்று கை நீட்டி விடுவார்கள். தர இயலாமையைச் சொன்னால்.. நாம பேசாததை எல்லாம் பேசினதா போட்டு விட்டுருவாங்க.

இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இப்படி தனியா பேசிகிட்டு போகற மெதட் கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு கூட தோணிச்சு.

'அரை மணி தியானம் பண்ணு தெனம்.. மனசு அமைதியாயிரும்..'

உட்கார்ந்து பார்த்தா.. அப்பதான் ஊர் விவகாரம் முழுக்க மனசுல சீரியல் ரேஞ்சுல ஓடுது.

'அட.. ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப் போக செட்டிலாயிரும்' இப்படி சொல்லி உசுப்பேத்தி விட்டாங்க.

'உட்கார்ந்து தூங்க நல்ல வழி கண்டு பிடிச்சுட்டான்னு' கெட்ட பேர் வந்திச்சு. (தூங்கினதும் உண்மைதான்!)

இன்னொருத்தர் என்னை கூப்பிட்டு நானும் அவருமா பிராக்டிஸ் பண்ணலாம்னு எதிரும் புதிருமா உட்கார்ந்தோம்.அரை மணி ஓடிச்சு. (அவங்க வீட்டு டிபன் நல்லா இருக்கும்)

என்னவோ தெரியல.. முடிச்சுக்கிற நேரத்துல நீல கலர்ல ஒரு பெரிய உருண்டை சைஸ்ல.. பலூன் மாதிரி கண்ணுக்கு முன்னாடி வந்து வெடிச்ச மாதிரி ஒரு பீலிங் ..

கண்ணத் தொறந்தா அவரும் அதே தான் சொன்னாரு.. என்ன ஒத்துமை.. தியானம் பண்ணறச்ச இப்படி நீலக் கலர் வந்தா அதுல முன்னேற்றம்னு ஒரு நண்பர் சொன்னாரு..

கூடவே இதுவும் சொன்னாரு.. இப்படி ஆராய்ச்சி பண்ணாம எதுவும் எதிர்பார்க்காம தியானம் பண்ணுங்க.. எது கிடைக்குதோ இல்லியோ மனசு அமைதி ஆகும்.. அனாவசியமா யாரையும் காயப் படுத்த மாட்டீங்க.. மத்தவங்க உங்களைக் குறை சொன்னாலும் பெருசா பாதிப்பு இருக்காது மனசுலன்னாரு. அந்த வார்த்தைகள் புடிச்சிருந்தது..

இப்பல்லாம் தினசரி தியானம் பண்ணமுடியல..

ஆனா.. மனசுல அந்த வார்த்தைகள் ஒரு மாயாஜாலம் பண்ணிருச்சு. மத்தவங்களை எப்பவும் நேசிக்கணும்னு ஒரு உறுதி வந்திச்சு.

அதனாலதான் இந்தப் பதிவின் முன்வரியில தனக்குத்தானே பேசிகிட்டு போன ரெண்டு மூணு பேரை புன்னகையோட நிறுத்தி பார் சாக்லேட் கொடுத்து 'எனக்கு இன்னிக்கு பர்த் டே.. பிளீஸ் வாழ்த்துங்கன்னேன்' நம்பமாட்டீங்க..

அவங்க என் மேல கோபப்படல. அவங்க சிரிப்பு .. கொஞ்சம் வெட்கம் கலந்து.. இப்பவும் கண்ணுல நிக்குது..

இதுவரை பழகாத நபர்களை சினேகம் பண்ணிக்கற மனசிருந்தா போதும்.. சொர்க்கம் வேற எங்கேயும் இல்லை..

12 comments:

Chitra said...

மனசுல அந்த வார்த்தைகள் ஒரு மாயாஜாலம் பண்ணிருச்சு. மத்தவங்களை எப்பவும் நேசிக்கணும்னு ஒரு உறுதி வந்திச்சு. ............ இப்படி எல்லோருக்கும் வந்துட்டுனா, உலகம் எவ்வளவு நல்லா இருக்கும்.

வசந்தமுல்லை said...

உள்ளுணர்வை புரிந்துக்கொள்ள, ஒரு அருமையான பதிவு.அதென்ன உங்களுக்கு மட்டும் பொருத்தமான படங்கள் எப்படி கிடைக்கிறதோ!! ஹாட்ஸ் ஆப் !!!!!

பலா பட்டறை said...

கலக்கறீங்க ரிஷபன் ... :))

மோகன் குமார் said...

நல்ல பகிர்வு. தியானம் நானும் கற்க நினைக்கிறேன். தள்ளி போய்க்கிட்டே இருக்கு

என் நடை பாதையில்(ராம்) said...

நான் தனிமையில் பேசுவதை தவிர்க்கத்தான் பதிவெழுதவே ஆரம்பித்தேன். நல்ல பதிவு ரிஷபன்.

பிரபாகர் said...

//இதுவரை பழகாத நபர்களை சினேகம் பண்ணிக்கற மனசிருந்தா போதும்.. சொர்க்கம் வேற எங்கேயும் இல்லை..//

சரிதாங்க. பழகினவங்க கொடுக்கிற பிரச்சினையையே சமாளிக்க சரியா இருக்கும்போது, பழகாத...

பிரபாகர்.

thenammailakshmanan said...

//'உட்கார்ந்து தூங்க நல்ல வழி கண்டு பிடிச்சுட்டான்னு' கெட்ட பேர் வந்திச்சு. (தூங்கினதும் உண்மைதான்!) //

Rishaban excellent unmaiyai sonnathukku ...hahaha

thenammailakshmanan said...

//அவங்க சிரிப்பு .. கொஞ்சம் வெட்கம் கலந்து.. இப்பவும் கண்ணுல நிக்குது.. இதுவரை பழகாத நபர்களை சினேகம் பண்ணிக்கற மனசிருந்தா போதும்.. சொர்க்கம் வேற எங்கேயும் இல்லை..//

உண்மை உண்மை உண்மை நண்பரே

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நானும் இந்த மாதிரி ரோடுல பேசிட்டுத்தான்
போனேன். யாரும் சாக்லட் பார் தரலே.
மாறாக என்னை வித்யாசமாகப் பார்த்துக்
கொண்டு சென்றார்கள்!

அண்ணாமலை..!! said...

ரிஷபன் இதைப் படிக்காம விட்டதுக்கு மன்னிச்சுக்குங்க!
அருமை!

துரோகி said...
This comment has been removed by the author.
துரோகி said...

// நான் தனிமையில் பேசுவதை தவிர்க்கத்தான் பதிவெழுதவே ஆரம்பித்தேன்.// அதே! அதே!