April 25, 2010

ரகசியங்கள்


'சொல்லு .. சொல்லு '
என்று அரித்தெடுத்தார்கள்
என் தயக்கம்
அவர்களுக்கு
வேடிக்கையாய் ...
'அவ்வளவுதான்
நம்ம பழக்கமா ?'
என்று உரிமையாய் பேச்சு..
என் கூச்சம் உதறி
மனசிலிருந்ததைப்பகிர
தொடர்ந்த வற்புறுத்தல்கள் ..
'சொல்லலன்னா இனி என்னோட
பேச வேண்டாம் '
என்று முகம் திருப்பியபோது
சொல்லாமல் இருக்க முடியவில்லை..
சொல்லி முடித்ததும்
என் ரகசியங்கள்
அம்பலமாயின..
அவர்கள் பிறகு
என்னைத் தவிர்க்க
ஆரம்பித்தார்கள்..
என்னோடு எனக்குள் இருந்ததை
எனக்கு சொந்தமில்லாமல் ஆக்கி
அவர்களும் விலகிப் போனதில்
மறுபடி சேகரிக்க
வேண்டியதாயிருக்கிறது
எனக்கான ரகசியங்கள் !

6 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம். ரகசியங்கள் ரகசியங்களாகத் தான் இருக்க வேண்டும்!

மதுரை சரவணன் said...

//என்னோடு எனக்குள் இருந்ததை
எனக்கு சொந்தமில்லாமல் ஆக்கி
அவர்களும் விலகிப் போனதில்
மறுபடி சேகரிக்க
வேண்டியதாயிருக்கிறது
எனக்கான ரகசியங்கள் !//

ரகசியம் என்பதே பிறரிடம் கூறாமல் இருப்பது தான்...பாவம் நீங்கள்.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்

குட்டிப்பையா|Kutipaiya said...

யதார்த்தம் ...

ஹேமா said...

உண்மைதான் ரிஷபன்.

Santhini said...

I love this one.
ரகசியங்களை சேகரிப்பது, மீண்டும் ரகசியம் கேட்கும் மனிதரை சேகரிக்கவா?
அதை விடவும் ரகசியங்களையும், கூடவே மனிதர்களையும் சேகரிப்பதை நிறுத்திவிடலாமே.
அவை விலகிப்போவது என்பது நடவாது இருக்குமே.
விலகிபோகிற வலியை விடவும் சேகரிக்கும் சுகம் அதிகமோ?

vasan said...

நைங்...னைங்...என‌ ரீங்கார‌மிட்டு வ‌ண்டு
தேடும், முட்டும், மோதும் ம‌ல‌ரும் மெட்டினை,
இத‌ழ்க‌ள் திற‌ந்த‌து செய்தித் தேன் கிடைத்த‌தும்,
வ‌யிறு நிர‌ப்பி பின் நீங்குத‌ல் அத‌ன் குண‌ம் தானே.