ஒவ்வொருவராய் வந்து
பார்த்துப் போனார்கள்..
மாதக் கணக்கு..
நாள் கணக்கு..
மணிக் கணக்கு..
எல்லாம் மறந்து
நெஞ்சுக்
கூட்டில் உயிர்த்துடிப்பை ..
செயலற்று பார்வைகள்..
யார் மனசோ .. அல்லது
எல்லோருமோ ..
'எதுக்கு இந்த அவஸ்தை..'
மூடிய கண்கள்
படித்து விட்டதோ..
மறுநாள் கேட்டது
அழுகை ...
18 comments:
ரொம்ப நல்லாருக்கு ரிஷபன்.
எக்ஸலண்ட்!
மனதை உருக்கும் கவிதை .....
ஓசைப்படாமல் உள்ளே புகுந்து நெஞ்சை உலுக்கி விட்டது! அருமையிலும் அருமை!
நெகிழ்வு ரிஷபன் .
போய்கொண்டு இருப்பவரை விட இருப்போருக்கு வலி நிறைய
ஹ்ம்ம்ம். ஜெம்:)
அருமை ரிஷபன்.
Fine,ennattha solla?
நல்லாருக்கு ரிஷபன்
உலுக்கிவிட்டது.
ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)
ஒரு சிறிய கவிதையில் சுருக்கென்று உறைக்கும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
நல்ல கவிதை. நெஞ்சினை தைத்து விட்ட உண்மை.
வெங்கட் நாகராஜ்
இந்த மாதிரி நிலைமையில் பார்க்கும் நம் மனதும் கனத்துப் போகும் ரிஷபன்,,,அருமையா வடிச்சி இருக்கீங்க
கவிதை கலக்கல் . அருமையான சிந்தனை
கவிதை ரொம்ப கலக்கல் ஸார்
\\மூடிய கண்கள்
படித்து விட்டதோ..\\
:-((
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
Post a Comment