April 30, 2010

நடைபாதை ஜீவன்கள்


எப்போது பார்த்தாலும்

தெருவில்தான்

இருக்கிறார்கள்..

எப்படி சாப்பாடு கிடைக்கும்..

இரவுத் தூக்கம்

எங்கு வாய்க்கும்..

குளியல்.. பிற செயல்கள்

எந்த இடத்தில்..

கேள்விகளால் மனசு

நிரம்பி போகும் ..

அவர்களோடு

யாராவது

பேசுவார்களா..

அதுவும் தெரியவில்லை..

உடை கூட கிழிவது ..

மாற்றுடை பற்றி அக்கறை

ஏதுமற்று..

எதற்கென்று புரியாமல்

அவர்களின் முகத்தில்

எப்போதாவது தென்படும்

புன்னகையோ .. சிரிப்போ சொல்லாமல்

சொல்கிறது..

'என்னைப் போல

அவர்களும்

மனுஷங்கதான்.. '


18 comments:

Rekha raghavan said...

//உடை கூட கிழிவது ..
மாற்றுடை பற்றி அக்கறை
ஏதுமற்று..//

//'என்னைப் போல

அவர்களும்
மனுஷங்கதான்.. '//

இந்த வரிகளில் மனிதம் தெரிகிறது. பாராட்டுகள்.
ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

Madumitha said...

நடைபாதை ஜீவன்களை
நினைத்துப் பார்க்கவும்
ஒரு ஜீவன் இருப்பது
சற்று ஆறுதல்தான்.

அம்பிகா said...

கவிதையில் உங்கள் மனிதாபிமானம் தெரிகிறது.

vasu balaji said...

/சொல்லாமல்
சொல்கிறது..
'என்னைப் போல
அவர்களும்
மனுஷங்கதான்.. '/

அடேங்கப்பா! சொடக்கு!

vasan said...

எதுப‌ற்றியும் அக்க‌றையும்,
அநாவ‌சிய‌ தேவைக‌ளுமற்றிருப்ப‌தால் தான்,
அவ‌ர்க‌ளால் எப்போதாவ‌தேனும் புன்ன‌கைக்க‌
முடிகிற‌தோ?
ந‌ம்மில் எத்த‌னை பேரிட‌ம் அந்த‌ ப்ரிய‌ புன்ன‌கை(யை)
புரிய‌ முடிகிறது ரிஷ்ப‌ன்?

சாந்தி மாரியப்பன் said...

//என்னைப் போல

அவர்களும்

மனுஷங்கதான்..//

எத்தனை பேருக்கு இப்படி நினைக்கிற மனப்பக்குவம் வாய்க்கும்!!! பாராட்டுக்கள்.

settaikkaran said...

எதார்த்த மனிதர்களைப் பற்றி எளிய நடையில் ஒரு அழகுக்கவிதை!

Chitra said...

எதற்கென்று புரியாமல்

அவர்களின் முகத்தில்

எப்போதாவது தென்படும்

புன்னகையோ .. சிரிப்போ சொல்லாமல்

சொல்கிறது..

'என்னைப் போல

அவர்களும்

மனுஷங்கதான்.. '



....... very touching lines..... நல்லா எழுதி இருக்கீங்க!

வசந்தமுல்லை said...

அடேங்கப்பா !!!!!!!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அவர்களெல்லாம் ‘சாலை ஓர சித்தர்கள்’ ஸார்!!

சுந்தர்ஜி said...

பேசுவதற்கு யாருமற்ற நிலை யாருக்கும் வரக்கூடாது.மிகக் கொடிய தண்டனை அது.நல்ல பதிவு ரிஷபன்.

SPGR. said...

அருமை...

Matangi Mawley said...

brilliant.. angey manithargal mattum illathu, sila mahaathmaakkalayum kandathundu endra murayil.. migavum nalla ezhuththu endru koorikkolla virumbukiraen!

கே. பி. ஜனா... said...

நல்லாருக்கு!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு நண்பரே

சிவாஜி சங்கர் said...

Touching.... :)

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதை. அவர்களைப் பற்றியும் நினைத்துப்பார்க்க வைத்தது.

வெங்கட் நாகராஜ்

பத்மா said...

பார்க்கும் போதெல்லாம் தோணுவது..... .இப்போது கவிதையாய் கிடைக்கையில் கண் பனிக்கிறது