இன்று ஏனோ என் மனம்
காலையில் இருந்தே
எனக்குப் பிடித்த பாடலை
முணுமுணுக்கிறது
என் மேல் உரசிப் போனவரைக் கூட
'பார்த்துப் போ' என்று
சொல்லத் தூண்டுகிறது..
பேருந்தில் சில்லரையாய்க் கொடுத்து
பயணச் சீட்டு எடுக்கிறேன்..
இன்னொரு மிகப் பெரிய வேலையும்
என் மீது சுமத்தப் படுவதை
மகிழ்ச்சியாய் ஏற்கிறேன்..
என்னைக் குறை சொன்னவரிடம்
நிதானமாய் என் தரப்பை
சொல்லிப் பார்க்கிறேன்..
எதிர்ப்பட்ட எவரிடமும்
என் புன்னகையே முதல் பேச்சாய் ..
நேற்றைய கனவில்
'நாளை உனது கடைசி நாள் ..' என்று
யாரோ ஒருவர்
என் தலை வருடி
சொல்லிப் போனார்..
கனவு பொய்யோ நிஜமோ ..
இன்றொரு நாள்
'இப்படித்தான் இருக்கலாமே '
என்று யோசித்தேன்..
எதுவும் நிகழாமல்
மீண்டும் விழித்தபோது
உள்ளே குரல் கேட்டது..
'இப்படியே இருந்து விடலாமே'
25 comments:
ஓ அப்படியே இருந்து விடலாமே
நன்றாக உள்ளதே
கலக்கலாவும் கலக்கமாவும் இருக்கு .
அதுவும் நல்லாத்தான் இருக்கு
aaha! i luv this sir:) great.
சிலசமயங்களில் மனம் இப்படித்தான் படபடவென சந்தோஷமாய் பறந்தபடி.ஏதாவது விபரீதம் இல்லாமல் இருக்கவேணும்!
நல்லா இருக்குங்க ரிஷபன்
எல்லாருக்கும் இதே மதிரி குரல் கேட்டு, அதன் படி நடக்கவும் எல்லாரும் மனசு வெச்சா....ஹ்ம்ம்...நினைக்கத்தான் முடியுது...என்ன செய்ய...ஆனா...கவிதை ரொம்ப இயல்பா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!!
மனதில் ஆழமாய் பதித்துக் கொள்ள வேண்டிய விஷயம். அருமை, ரிஷபன் சார்.
எல்லா நாளும் இது போல இனிமையாகவே இருந்துவிட்டால்.... எண்ணும்போதே இனிப்பாக இருக்கு சார்.
ரொம்பச் சரி!
இப்படியே இருந்துடுவோமே!
எல்லாரும்!!!
// 'இப்படியே இருந்து விடலாமே' //
நிச்சயமாக......!
நாளைதானே கடைசி நாள், இன்றள்ளவே.
நாளையென்றும் நாளை தான்,
இன்றாவதில்லை என்றும்.
'இப்படியே இருந்து விடலாம்'
என்றென்றும்......
ரொம்ப நல்லாருக்கு ரிஷபன்.
இறுதி நாளில் இந்த பக்குவம் வந்துவிட்டால் ஏது ரணம்? அருமை ரிஷபன்.
தங்களின் ”மாற்றம்” நிச்சயமாக படிப்பவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற என் கருத்தில் மாற்றம் ஏதும் இல்லை. பாராட்டுக்கள்.
இப்படி இருக்கத்தான் எல்லோருக்கும் ஆசை... இடையில் அவ்வப்பொழுது பேய்குணம் வருகிறதே.. என்ன செய்வது...
நல்ல கவிதைங்க ரிஷபன்..இயல்பான உருவில்...
இப்படியே இருக்கலாமே ரிஷபன்.
ஆம்..இப்படியே இருக்கலாம் ரிஷபன்!!
அன்பின் ரிஷபன்
அருமை அருமை - சிந்தனை அருமை - ஏன் இப்படியே இருந்து விடக்கூடாது...இருக்க முயல்வோம் - நன்று நன்று
நல்வாழ்த்துகள் ரிஷபன்
நட்புடன் சீனா
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_12.html
:-)
இப்படியும் இருக்க முடியுமோ?
அருமை!
'இப்படியே இருந்து விடலாமே'//
அட சூப்பர் ரிஷபன்..:))
ரொம்ப நல்லா இருக்கு ரிஷபன்.
வாழ்த்துக்கள் ..
சூப்பர் . வாழ்த்துக்கள்
வரிகள் அத்தனையும் அருமை! கிரேட்!என்னவென்று சொல்ல? எனக்கு தெரியவில்லை!!!!!!!அனைத்தும் அருமை!
ரிஷபன்...
நாம் படுத்துறங்கும்போது அருகே வந்த தன மழலை மொழியில்பேசி பிஞ்சு விரல்களால் தடவி உறக்கம் கலைந்தாலும் அதன் முகம் பார்த்ததும் கிடைக்கும் ஈடுசெய்ய முடியாத சுகத்தைப்போலவே இந்தக் கவிதையில் ஒரு இழைந்த சுகத்தை அனுபவித்தேன். சுகம். ரிஷபன். அன்புடன் உறரணி.
Post a Comment