இதுவரை தனியாகத்தான்
பயணிப்பதாய் நினைத்தேன் ..
அந்த நினைப்பின் துணிச்சலில்
செய்ய நினைத்ததெல்லாம்
செய்து கொண்டு..
மரங்களில் ஆடி..
பூக்களை முகர்ந்து..
நீர் வாரி இறைத்து..
கர்ண கடூரக் குரலில்
பாட்டும் இசைத்து..
எல்லாம் முடித்து
திரும்பிப் பார்க்கையில்..
பாதையின் ஒரு எல்லையில்
என்னைக் கடந்து போனார்கள்
அவர்கள்
புன்முறுவலுடன்.,.
வெட்கத்துடன்
திரும்பிப் பார்த்ததில்
நடந்து வந்த வழி எங்கும்
சிதறிக் கிடந்தன
என்னுள் ஒளிந்திருந்த
என் இயல்புகள்!
17 comments:
பிரம்மாதம்.:). நானும் திரும்பிப் பார்த்தேன்.
தனிமை' தன்னாட்டமாய் தழும்பியது,
திண்டாட்டமாகியது திரும்பிப் பார்க்கையில்.
பின்தொடர்ந்து ரசித்து புன்னகைத்த
சிலரில் நானும் ஒருவன்
சிதறிக் கிடந்த இயல்புகளில் கொஞ்சம் பொறுக்கிக் கொண்டேன் நானும் இயல்பாக. சபாஷ் ரிஷபன்.
Excellent..
சபாஷ் ரிஷபன்..ஒவ்வொரு இடுகையிலும் மெருகு ஏறிக்கொண்டே செல்கிறது..வாழ்த்துக்கள்.
யாருமே இல்லேன்னா எவ்ளோ அழகா இயல்பா இருப்போம் இல்லை? இருக்கும் பொது என் முகமூடி போடறோம் ?
என சிந்திக்க வைத்தது கவிதை
நல்லா இருக்குது ரிஷபன், வாழ்த்துகள்!
'தனிமை' இனிமை!
ஆஹா...உங்க கவிதைய படிச்சவுடனே நானும் அந்த பாதையை அதேபோல விளையாட்டாய் கடந்து போன மாதிரி ஒரு குதூகலம். ரெம்ப நல்லா எழுதறீங்க!! இன்னும் எழுதுங்ண்ணா..!
தனிமை அருமை எளிமை இனிமை. வாழ்த்துக்கள்
யாரையும் கவனிக்க வேண்டாம்.
எங்கள் இயல்போடு நடந்துகொண்டேயிருப்போம்.
ஆனால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் !
இதுவரை தனியாகத்தான்
பயணிப்பதாய் நினைத்தேன் ..//
இனி இல்லை!!
fine nice to see the back
தனிமைதான் நிறைய விஷயங்களுக்கு
ஆதாரம்.
இனிமையான தனிமை.
”தனிமை” இனிமையாக இருந்தது.
தனிமை போகும்போது நம் இயல்பும் மறைந்து, கூச்சம் ஏற்பட்டு, நடிக்கத்தான் வேண்டியுள்ளது. என்ன செய்வது?
ரிஷபன்..
நாம் எப்போதும் தனிமையில் இல்லை என்பதுதான் உண்மை. எல்லா இடங்களில் நம்மையறிந்தும், நம்மையறியாமலும் விட்டுவிட்டுத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க்கை பாதையில். அன்புடன் உறரணி.
Post a Comment