பூமிக்குள்தான்
இத்தனை சண்டை ..
வானத்தைப்
பங்கிட்டு கொள்ளலாம் ..
அத்தனை பேருக்கும்
கொடுத்தபின்னும்
மிஞ்சும் வானம்!
பார்வை எட்டும் தூரம் வரை
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..
இனி தலை கவிழ்ந்து
பூமி பார்க்கும் இச்சை விட்டு
தலை நிமிர்ந்து
விண்ணைத் தொடும்
புத்தியில் நடப்போம் ..
22 comments:
//தலை நிமிர்ந்து
விண்ணைத் தொடும்
புத்தியில் நடப்போம் ..//
நம்பிக்கையுடன்...
நல்ல கவிதைங்க ரிஷபன்...
// பார்வை எட்டும் தூரம் வரை
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை//
சிந்திக்க வைக்கும் வரிகள். அருமையான கவிதை .
ரேகா ராகவன்.
(now at Chicago)
தலை நிமிர்ந்து நடப்போம். அருமை பாஸ்.
\\அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..\\
அழகான வரிகள்.
அத்தனை பேருக்கும்
கொடுத்தபின்னும்
மிஞ்சும் வானம்!
பார்வை எட்டும் தூரம் வரை
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை.
என்ன சத்தியமான வார்த்தை !!!!!!!!!!!!!
mm. ஆஹா
வானம் தொட்ட பின்
பூமி அழகாய்டுமோ?
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..
.... :-)
கவிதை சிந்தனை அழகாயிருக்கு ரிஷபன்.ஆனா இந்த மனுஷங்க பூமியில இருந்தபடியே வானத்தை நோண்டி வைக்கிறாங்க.அங்கேயே குடியிருக்க விட்டா பூமியின் அழகைக் கெடுத்தமாதிரி அங்கேயும் !
அந்த மிஞ்சுற வானில் எனக்கும் கொஞ்சம் ...
புத்தியில் நடப்போம்....... நல்ல பிரயோகம்
அருமை.வாழ்த்துக்கள்
நல்லா யோசிக்கிறீங்க! :)
அருமை
விண்ணை
மட்டும்,
பார்த்து,
நடந்தால்,
விழுந்து விட
மாட்டோமா,
கார்ப்பரேஷன் குழிகளில்!!!
ஆஹா அழகு!
ரிஷபன்,
(மாயாவதிக்கு பட்டா போட்டது
சந்திரன்ல மட்டுந்தானே?)
அப்பச் சரி.
நான் நிமிர்ந்து பார்த்தால்,
வானில்,
யாரே விட்ட சாட்டிலைட்டு,
'எண்ணை' தேடியா? இல்லை.
இடம் தேடும் என்னைத் தேடியா?
நல்ல தன்னம்பிக்கை கவிதை ரிஷபன்.
நேரம் கிடைச்சா நம்ம கடைக்கும் வந்துட்டு போங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
'ஆம் நடப்போம்!' என்று ஆமோதிக்க வைக்கிற கவிதை!
எல்லோரையும் தலை நிமிர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள்.
அருமையானதொரு படைப்பு. பாராட்டுக்கள்
////பூமி பார்க்கும் இச்சை விட்டு
தலை நிமிர்ந்து
விண்ணைத் தொடும்
புத்தியில் நடப்போம் ..////
இதுவும் சரிதான் நண்பரே அருமையான சிந்தனை பகிர்வுக்கு நன்றி
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை//
அட அருமை பாஸ்..
Post a Comment