July 13, 2010

சிரிப்பு

அது ஒன்றுமே இல்லாத விஷயம். எனக்கும் சற்று கோரோஜனைக்குரல்.
(புரியாதவர்களுக்காக இந்த விளக்கம். குழந்தைக்கு நாட்டு மருந்து கடையில் கோரோஜனைஎன்கிற மருந்தை வாங்கி தேனில் குழைத்து கொடுப்பார்கள். பேச்சு வந்ததும் குரல் கணீரென்று இருக்க )
என் முகம் கடுகடுவென்று இருக்க.. வந்தவரும் அதே பாதிப்பில் சற்று சவுண்ட்விட சூழலின் அமைதி குலைந்து சுற்றி நின்றவர்கள் எங்களை வேடிக்கை பார்த்தார்கள்.
வந்தவர் போய் விட்டார். என் சகா அருகில் வந்து 'தண்ணி குடி' என்றான்.
'நீயே பாரேன்' என்று ஏதோ சொல்ல முனைந்தபோது என்னைத் தடுத்தான்.
'முதல்ல தண்ணி குடி'
குடித்தேன்.
'அவருக்கு பதிலா என்னை நினைச்சுக்க.. நாதான் அந்த ஆளுன்னு.. இப்படித்தான் பேசி இருப்பியா'
மாட்டேன்.
'சரி. அதுதான் போகட்டும். ஏன் உன் குரல் இப்படி மைக்கை முழுங்கின மாதிரி உச்ச ஸ்தாயில இருக்கு.. உன் மறுப்பை சொல்ல வரும் போது ?'
வாஸ்தவம்தான்.
'ஒரு சிரிப்போட அவர் கேட்டதுல இருக்கிற சங்கடத்தை சொல்லி இருந்தா வேறு வழி ரெண்டு பேரும் யோசிச்சு இருக்கலாமே'
அட.. ஆமா..
'இப்ப நிதானமாயிட்டியா '
'ம்'
'அவர்ட்ட போ .. படியேறி போ.. லிப்ட் வேணாம்.. சொல்லு .. ஆனா ஒரு சிரிப்போட.. நேச்சுரலா..புரியுதா '
அவர் என்னைப் பார்த்ததும் முதலில் மிரண்டு போனார். துரத்தி வந்து சண்டை போடுகிறேன் என்று.
நிஜமாகவே நட்புடன் சிரித்தேன்.
'சாரி பாலா.. ' என்றேன் அவர் கையைப் பிடித்து.
பக்கத்தில் ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். அவர் கேட்டதில் இருந்த சிரமங்களை சொன்னேன்.
இப்போது என் குரலில் தணிவு. கூடவே ஒரு நட்பின் புன்னகை.
என்ன அதிசயம். அவர் மேலாளர் அவரிடம் இதை சொன்னபோது , நான் என்னென்ன காரணங்களால் தருவது சிரமம் என்றேனோ அதையேதான் சொல்லி இருக்கிறார் . ஆனால் மேலாளர் வற்புறுத்தவே வேறு வழியின்றி என்னிடம் வந்திருக்கிறார்.
இரண்டு பேரும் வேறு வகையில் கொஞ்சம் கஷ்டப் பட்டு அந்த வேலையை முடித்தது தனிக்கதை .
சின்னதாய் ஒரு சிரிப்பு மட்டும் கூடவே இருந்தால்.. எத்தனை விஷயங்கள்
சுலபமாகி விடுகின்றன..
இந்தக் குழந்தையின் சிரிப்பைப் போல !!!!



15 comments:

Rekha raghavan said...

//சின்னதாய் ஒரு சிரிப்பு மட்டும் கூடவே இருந்தால்.. எத்தனை விஷயங்கள் சுலபமாகி விடுகின்றன//

உண்மை. கோபத்தை அடக்கினால் வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். பதிவு அருமை.


ரேகா ராகவன்.
(now from Chicago)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிரிப்பு ஒரு இனிப்பு! கசப்பான விஷயங்களைக் கூட ஒரு சிரிப்பினால் நேர் செய்து விடலாம் என்பதை உங்கள் பதிவு சுட்டி காட்டுகிறது,அந்த குழந்தையின் சிரிப்பின் மூலம்..அது சரி..அந்த குழந்தை யார்? உங்க கொள்ளுப் பேத்தியா?

பத்மா said...

ஹ்ம்ம் நல்லா இருக்கு ...குழந்தை செம அழகு
சிலசமயம் கத்தி முடிந்த பிறகு தான் உணருகிறோம் .முடிந்த வரை கத்துவதில்லை என்று resolution வைத்திருக்கிறேன் ..

vasu balaji said...

வாஸ்தவம்தான். கும்பலாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஏதோ பிரச்சனைக்கு வருகையில், சாரிங்க, உங்களை அமரச்செய்யக்கூட இடமில்லை என்று எழுந்து நின்றுவிடுவேன். சிரித்தபடி பொருமையாகக் கேட்கத் தொடங்குவதிலே பாதி வெற்றி. இயலாமையை வருத்தத்துடன் சொல்கையில் மீதி. செய்யக்கூடியதென்றால் வாக்குறுதி போதும். ஹி ஹி. வீட்டில்தான் கத்தி நொந்து போறதாயிருக்கு சில நேரம்.:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு சிறிய புன்னைகை முகத்துடன் பேசுவதால் இவ்வளவு நன்மைகளா?
ஆஹா! இதைப்பற்றி யோசிக்காமல் பெருமபாலும், முகத்தை சீரியஸாகவே வைத்துக்கொண்டு, பணி ஓய்வும் பெற்று விட்டேனே! இந்த நிமிடம் முதல் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமோ !
சந்தேகமே. சிரித்த முகத்துட்ன் இதை டைப் செய்யும் போது, என் பின்னால் நின்று என் வீட்டிலுள்ளவர்கள் என்னை ஒரு மாதிரியாகப்பார்ப்பது போலத் தோன்றுகிறது எனக்கு.

பனித்துளி சங்கர் said...

//சின்னதாய் ஒரு சிரிப்பு மட்டும் கூடவே இருந்தால்.. எத்தனை விஷயங்கள் சுலபமாகி விடுகின்றன//


மறுக்கமுடியாத உண்மைதான் . அருமை பகிர்வுக்கு நன்றி

நிலாமதி said...

உண்மை தானுங்கோ. சிரிப்பை பற்றி பதிவிட்டு கடைசியில் சிரிக்கும் குழந்தை. அருமையாய் இருக்கிறது உங்கள் பதிவு.்

ஹேமா said...

உண்மைதான் ஒரு சிறு புன்னகை சாதிக்கும் எவ்வளவோ விஷயங்களை.அதையும் கள்ளச் சிரிப்பு,பசப்புச் சிரிப்பு என்றில்லாமல் கவனமாக உண்மையாகச் சிரிக்கவேணும் ரிஷபன் !

அண்ணாமலை..!! said...

அது என்ன வேலைக்கான சண்டை என்று கோடி காட்டியிருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருக்கும்!
:)

அன்புடன் கூடிய சிரிப்பு மந்திரம் போல வேலை செய்யும்!

VELU.G said...

அருமை நண்பரே சிரிப்பே மிகப்பெரும் மருந்து

விக்னேஷ்வரி said...

உண்மை தான். ஒரு சிறு புன்னகையால் உலகையே வெல்லலாம். அழகாகத் தொடங்குகிறது குழந்தையின் சிரிப்பு.

நாடோடிப் பையன் said...

Nice lesson that I still need to learn.
Did you thank your friend too?

Matangi Mawley said...

enakku oru vazhakkam! yaara paarthaalum oru chinna smile pannuvaen! sila paer enna seivaanga- naan sirichchaa- enna aetho oru vetru graha vaasiya paakkaratha pola paappaanka! innum sila paer- namla paaththu sirikkalangara maathiri engayo paaththukondu povaanga! but namma gunam athu! how can i cange it? oru sila neraththula irrityation-a irukkum! kovamaa varum! sirichcha enna? nu poi sanda pidikkanum pola thonum! enna panna? intha ennangalayum oru sirippula adakkikondu irunthuduvaen!

nice post! :)

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பதிவு. நம்மில் பலர் இந்த இயந்திர வாழ்க்கையில் சிரிப்பு என்ற அருமருந்தை இழந்து வருகிறோம் என்பது வருந்தத்தக்கது. குழந்தையின் சிரிப்பு மயக்கியது.

Priya said...

உண்மைதான் ரிஷபன்... அழகான பதிவு!