விழித்துக் கொண்டு
சூரியனைத் தேடினேன்
அது நள்ளிரவு என்று
புரியாமல்.
என் வீட்டிலும்
அக்கம் பக்கத்திலும்
அனைவருமே
ஆழ்ந்த உறக்கத்தில்.
கனவுகளற்ற தூக்கம்
இனி வராதென்று
ஓசை எழுப்பாமல்
வெளியே வந்தேன்..
கழுத்து சலங்கை மணி குலுங்க
எதிர் வீட்டு பசு
மெல்ல அசை போட்டுக்
கொண்டிருந்தது..
எங்கள் தெரு வழியே
அன்றைய இரவு
போய்க் கொண்டிருந்ததைப்
பார்த்தோம்
நானும் ,
அந்த காராம் பசுவும்!
17 comments:
மெல்லிய தென்றல் போல மனதை மெள்ள..மெள்ள..வருடி விட்டுச் சென்றது, கவிதை!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
//கனவுகளற்ற தூக்கம்//
கவிதை எழுதவைத்த கனவுகளற்ற தூக்கத்துக்கு நன்றி..
//அன்றைய இரவு
போய்க் கொண்டிருந்ததைப்
பார்த்தோம்
நானும் ,
அந்த காராம் பசுவும்! //
அட்டகாசம். ;-)
நள்ளிரவு கவிதையை காலையில் ரசிக்க வைத்துவிட்டீர்கள். அருமை.
ரேகா ராகவன்.
தூக்கத்தைத் தொலைத்து ஒரு அருமையான கவிதை படைத்து விட்டீர்களே! அதில் காராம் பசுவுக்கும் ஒரு பங்கு! அழகிய கவிதை.
சுகமான கவிதையனுபவம்.
மிக அழகான மிக இனிதான கவிதை!
இரவுகளின் சுவடுகளைக் கண்டுகொண்டது காராம்பசுவும் கவிதை மனமும்.ரொம்பத் த்ருப்தியான கவிதை ரிஷபன்.
காராம்பசுவின் அசைபோடுதலோடு போய்க்கொண்டிருந்த நள்ளிரவைப் பற்றிய கவிதை இதமானது. வாழ்த்துக்கள் ரிஷபன். தொடருங்கள். கவிஞர் ரிஷபனைத் தொடருங்கள்.
Theensittu@blogspot.com என்ற இன்னொரு வலைப்பூவு தொடங்கியிருக்கிறேன். இது முழுக்கமுழுக்க ஹைகூக் கவிதைகளுக்காக மட்டும். அன்புடன் உறரணி.
NIGHT still for who is in the slumber but for COW & RISHABAN (BULL) it is a dawn.
நல்ல கவிதை நண்பரே... ஏதாவது பொருத்தமான படத்தை இணைத்திருக்கலாமே...
உங்கள் கவிதை வழி நாங்களும் கண்டுகொண்டோம் அந்த இரவின் நகர்தலை...
ரிஷபன் என்ன ஒரு அழகு கவிதை?
இரவு போய்கொண்டிருந்தது ...காலத்தில் பயணிக்கிறது கவிதை ..
அருமை
கடைசி வரிகள் அற்புதம்!
அருமை ரிஷபன்!
அருமை ரிஷபன்.. காலத்தோடு பயணிக்க ஆரம்பித்து விட்டீர்கள்..
Post a Comment