January 02, 2011

அசல்



என் பிம்பங்களில்

உனக்குப் பிடித்திருந்த

ஒன்றைத்

தேர்ந்தெடுக்கச் சொன்னேன்

உன்னிடம்.

நிராகரித்தவை போக

உனக்குப் பிடித்ததாய்

ஓரிரண்டைச் சொன்னாய்.

அதெல்லாம் நான் உன்னிடம்

உண்மை பேசியபோது

பதிவான

என் அசல்கள்.


20 comments:

Anonymous said...

சரியான தேர்வு தான்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமையான கவிதை!!
நல்லாயிருக்கு !!!

பத்மா said...

wareh wah ..appo ella padamum pidichu irukanume !!!!

test said...

அருமை! :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அசல் தான் என்றும் உண்மையைப் பிரதிபலிக்கும்!
அதனால் தான் அவை தேர்வாகியுள்ளன.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை…. அசலுக்குத் தானே என்றுமே மதிப்பு!

Anonymous said...

உண்மையே நிலைக்கும்! :)

Unknown said...

nice one

அன்பரசன் said...

//உண்மை பேசியபோது

பதிவான

என் அசல்கள். //

நல்லா இருக்குங்க..

கே. பி. ஜனா... said...

அசலான கவிதை! அசத்தலானதும்!

க ரா said...

அற்புதம் ரிஷ்பன் !

vasan said...

அவ‌ர் ஒரு "லை டிட‌க்ட‌ராய் (Lie Detector) இருக்க‌லாம் அல்ல‌து, நிச்ச‌ய‌மாய் ம‌ணைவி தான்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஆமாம்... உண்மை பேசும் முகம் எப்போதும் மிக அழகாயிருக்கும்...

ஹ ர ணி said...

சத்தியம் நெருப்புபோலத்தான் தகதகவென்று ஒளி சிதறியடிக்கும். அதுதான் நிலைக்கும். நிற்கும் யுகங்கள்தோறும். கவிதையின் கவிதையிது.

Madumitha said...

ஆம் ரிஷபன்.
அசலும், நகலும்
கலந்ததுதான்
மனித வாழ்வு .

ADHI VENKAT said...

அசத்தலான கவிதை.

ஹேமா said...

ஆழமான உண்மை !

குட்டிப்பையா|Kutipaiya said...

எவ்வளவு உண்மை!!பிடித்த பிம்பமாக நம்மை ஆக்கிக்கொள்ள அது தானே வழி!

Thenammai Lakshmanan said...

உண்மை பேசியபோது

பதிவான

என் அசல்கள்.


// அசலா.. பிம்பமா.. :))

சிவகுமாரன் said...

சத்தியம் பேசும் கவிதை.
அருமை அற்புதம் ஆகா