January 06, 2011

பயணத்தில்..

தார்ச் சாலையில்
பரப்பப் பட்டிருக்கும்
தானியங்களை
காரில் கடக்கும் போது
கூசிப் போகின்றன
உள்ளிருக்கும்
கால்களும் .




24 comments:

Rekha raghavan said...

நல்ல சிந்தனை. அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமை!

கே. பி. ஜனா... said...

படிக்கும்போதே அந்தக் கூச்சத்தை உணர முடிகிறது! அருமை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை!!!!!!!!!!!!!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உண்மைதான்....

vasu balaji said...

சுப்பர்ப்

test said...

Nice! :-)

Chitra said...

very nice.

vasan said...

ஆகா, அருமை. அப்ப‌டியான ப‌ல‌‌ நேர‌ங்க‌ளில்,ஆக்ஸிலேட்ட‌ரிலிருந்து த‌ன்னையாறியால் கால் நழுவியிருக்கிற‌து, தானாய்.

மதுரை சரவணன் said...

நல்ல கற்பனை . அருமை.வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

ஆகா. அருமை. ஒருமுறை தானியம் (கம்பு) பரப்பியிருந்தது தெரியாமல் பைக்கை ஏற்றிவிட்டேன். விழுந்து அடிபட்டு, கோபம் தலைக்கேறி, முதுமையின் எச்சமாய் பரிவுடன் என்னை ஏறிட்ட அந்தக் கிழவியின் முன்னே பறந்து போனது கோபம்.

Anonymous said...

வழியில்லாமல் கடக்கிறோம் என்றாலும் சுருக்கென்று தைக்கிறது தவறு..

Anonymous said...

:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆமாம்.
இயல்பாகவே ஏற்படும் ஒரு வித குற்ற உணர்வு தான்.
தானியங்களைக் காயப் போடவோ, நாம் மாற்றுப் பாதையில் செல்லவோ வேறு வழி எதுவும் இருப்பதில்லையே!

வெங்கட் நாகராஜ் said...

அழகிய சிந்தனை. பஸ்ஸில் பயணப்படும்போது அந்த தானியங்களுக்கு வலிக்குமோ என பல சமயம் நினைத்திருக்கிறேன்...

ADHI VENKAT said...

படிக்கும் போதே அந்த உணர்வை உணர முடிகிறது. அருமை சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸ்லேட்டில் ஆணியால் கீறுவது போல்- நகத்தால் துணியைத் தேய்ப்பது போல் இப்படியும் ஆகிவிடுகின்றன சில தருணங்கள்.

கூசவைக்கும் உணர்வூட்டிய கவிதை.

ஆனாலும் இது ரொம்ப நாள் முன்னாடிக் கவிதையோ?

தார்ச்சாலையில் தானியங்கள் பரப்ப அனுமதிக்கப்படுகின்றனவா இப்போதெல்லாம் ரிஷபன்?

Madumitha said...

இந்தக் கவிதை உங்களின் மெல்லிய மனசைச் சொல்கிறது ரிஷ்பன்.

middleclassmadhavi said...

ஆரம்பத்தில் காவிரித் தாயைக் கடக்கும்போதும் இது மாதிரி நான் உணர்ந்திருக்கிறேன். பின்னர் பழகி விட்டது
அருமை சார்

மாதவராஜ் said...

மிகச்சின்ன கவிதையில் எவ்வளவு நுட்பமான விஷயம். உங்கள் கரம் பற்றிக் கொள்கிறேன் ரிஷபன்.

arasan said...

நச்

க.பாலாசி said...

ரொம்ப நல்ல கவிதைங்க ரிஷபன், உண்மையும்கூட..

சமுத்ரா said...

ஆகா. அருமை.

புபேஷ் said...

arumai arumai