May 19, 2012

பிரிவு


என் பயங்களை
முதலில்
உன்னிடம்தான்
பகிர்ந்தேன்..
எனக்கான ஆறுதலும்
மகிழ்ச்சியும்..
ஏன்..
என் சில நேர
துக்கங்களும் கூட
உன்னிடம்தான்
இருந்தன..
நீ முகந்திருப்பிப்
போனதை
வாழ்வின் இறுதியாய்
உணர்ந்த அழுகை..
உன் அருகாமையில்
கரைந்து உலர்ந்தது..
எப்போதேனும்
உன்னைத் தவிர்த்து
என்னை நான்
யோசித்ததே இல்லை..
தற்செயலாய்
அடுத்த வீட்டில்
குடியேறிய
தேவதை நீ..
இப்போது சொல்..
எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்..


16 comments:

இராஜராஜேஸ்வரி said...

எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்.. ஏன் ??

கலங்கவைக்கும் பிரிவு !

தமிழ் மீரான் said...

துயரம் வேண்டாம் நண்பரே!
பிரியமானோரின் பிரிவு
பிரியத்தை வலுவூட்டும்!
நல்ல கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எப்போதேனும்
உன்னைத் தவிர்த்து
என்னை நான்
யோசித்ததே இல்லை..//

பிரியம் வைத்துவிட்ட பிறகு, பிரிவு ஏற்படுவது மிகவும் கொடுமையானதே.

உணர்வுகளை வெகு அழகாகக் கேள்வியாகத் தொடுத்துள்ளது, அழகோ அழகு.

பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்.//.


இதனை மட்டும் நாம்தான் கற்றுக் கொள்ளவேண்டுமோ ?
மனம் கவர்ந்த அருமையானபதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

Rekha raghavan said...

அருமை.

ராமலக்ஷ்மி said...

/நீ முகந்திருப்பிப்
போனதை
வாழ்வின் இறுதியாய்
உணர்ந்த அழுகை../

உணர்வின் வெளிப்பாடு அருமை.

நல்ல கவிதை.

rajamelaiyur said...

அருமையான கவிதை .. அழகான வார்த்தை பிரயோகங்கள்

rajamelaiyur said...

தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ள மாணவர்களே பெற்றோர்களே உங்களுக்காக

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

vimalanperali said...

பிரிவுகளும் தனிமையும் கலக்கத்தை விதைத்து விட்டே செல்கின்றன.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பிரிவு ஏக்கத்தை உருவாக்கி, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்த முடிவில் மனசு கனத்துப் போவதுதான் மிச்சம் !

சிவகுமாரன் said...

\\\உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்.. ஏன் ??///


இயலாமல் போனால் தான் அது காதல்

அருமையான கவிதை.

manichudar blogspot.com said...

பழகிய பரிச்சியமான பிரியமான பிரிவு பித்தாக்கிவிடுகிறது எவரையும்.! அருமை.

கே. பி. ஜனா... said...

//எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்.//
சபாஷ் சரியான கேள்வி!

ஹ ர ணி said...

அப்படியிருந்துவிட்டால் அப்புறம் அதற்கு மரியாதை இல்லை..இருப்பினும் கனிவான ரசனையான கவிதை அதன் பொறுமையின் இறுக்கத்தையும் மீறி.

ஸ்ரீராம். said...

//எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்.//

"அதையும் கற்றுக் கொடுக்க இன்னும் கொஞ்ச காலம் என்னிடமிருந்து பிரியாமல் இரேன்" என்று வேண்டுகோள் வைக்கலாமோ...!