மாரி போய்க் கொண்டிருக்கிறான் என்று.
என்னை விட வயதில் பெரியவன். நிச்சயமாய் அவனை ‘அவன்’ என்று சொல்லக் கூடாது.
என் சிறு வயதில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் தெருவின் பிரதான அடையாளம் ‘செங்கமா முனீஸ்வரர் கோவில்’
செங்கண்மால் ஈஸ்வரன் தான் ‘செங்கமா’ ஆகிவிட்டது என்று என் கணிப்பு.
கோவில் முன்பு கொஞ்சம் பயம் கொஞ்சம் பக்திக்கு சொந்தமாய் இருந்தது. இரவு வேளைகளில் வீட்டின் பின் புறம் போகப் பயப்படுவோம்.
90 அடி நீளம் உள்ள வீடுகள் தான் தெருவில். அதன் பின் வீடு சைசுக்கு வெற்றிடம்.
கிணறு.. தோட்டம்.. கடைக் கோடியில் கழிப்பறை. இருட்டுவதற்குள் சுச்சா.. கக்கா வேலைகள் எல்லாம் முடித்துக் கொண்டு விட வேண்டும். பன்றிகள் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த காலம்.
கழிப்பறைக்குப் பின்னால் ஆறடிச் சந்து என்கிற பெயரில் பொதுச் சாக்கடைப் பிரதேசம் மதிலை ஒட்டி.
ஸ்ரீரங்கம் சுற்று மதில்களால் சூழப்பட்ட பிரதேசம். சுஜாதா ஒரு கதையில் சொல்லி இருப்பார். ஏதாவது ஒரு வீட்டு மாடியில் ஏறினால் போதும். தாவித்தாவி கடைசி வீடு வரை அந்தரத்திலேயே பயணம் செய்யலாம்!
இந்த மதிலில் தான் முனீஸ்வரர் இரவு வேளையில் பவனி வருவதாய் ஒரு தகவல் எல்லா அம்மாக்களாலும் பரப்பப்பட்டு முரட்டுப் பிள்ளைகளை வழிக்குக் கொண்டு வரும் உபாயமாய் இருந்தது.
அந்த நாட்களில் அறிமுகமான இன்னொரு பயம் ‘மாரி’
வாய் கொள்ளாத பற்கள் துருத்திக் கொண்டிருந்த அவனைக் காட்டி மிரட்டுவார்கள். படிக்கிற காலத்தில் அறிமுகமான அவனைப் பல வருடங்கள் கழித்து பார்த்தபோது சொந்த வீடு வாங்கி அதே பகுதியில் வந்தபோது பெரிதாய் வளர்ந்திருந்தான். இப்போதும் பயமுறுத்துகிற மாதிரி.
அடுத்த வீட்டுப் பெண்மணியை பால் கேனுடன் சைக்கிளில் அனாயசமாய் டபுள்ஸ் அடித்துப் போகும் அழகிலாகட்டும்.. தெருப் பையன்களின் கலாட்டாவிற்கு அடி பணிந்து அவர்கள் மகிழ்ச்சியைக் கூட்டுவதிலாகட்டும்.. மாரி ஒரு சூப்பர் பிகர்.
இந்தத் தெருவில் அவதானித்தபோது தெரிய வந்த விஷயம் வீட்டிற்கு ஒருவராவது மன வளர்ச்சி குன்றியவர்களாய் இருப்பது. அதாவது மாரியைப் போலவே.
யாருடைய சாபம்.. அல்லது ஏன் இப்படி இந்தத் தெருவிற்கு மட்டும்.. புரியவில்லை.
ஸ்ரீரங்கம் நிறைய கதைகளுடன் எழுதுபவருக்காகக் காத்திருக்கிறது.. இன்னொரு சுஜாதா வந்தால்தான் பூர்த்தி ஆகும் போல!
25 comments:
/ஸ்ரீரங்கம் நிறைய கதைகளுடன் எழுதுபவருக்காகக் காத்திருக்கிறது.. இன்னொரு சுஜாதா வந்தால்தான் பூர்த்தி ஆகும் போல!/
:). நைஸ்
நீங்கள் குறிப்பிட்டது எந்த தெருவை?
நல்லதோர் ஆராய்ச்சிக்கான களம் ஆயிற்றே....இன்னொரு சுஜாதாவிற்காக wait பண்ணாமல் உடனே ஆய்வைத் தொடங்கவும்.
மாரி…. இன்னமும் நமது தெருக்களில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்… அவரை நிறைய பேர் வேலைகளும் வாங்கிக் கொண்டு மனநிலை சரியாதவர் என கிண்டல் செய்பதற்கும் குறைவில்லை.
//வீட்டிற்கு ஒருவராவது மன வளர்ச்சி குன்றியவர்களாய் இருப்பது. அதாவது மாரியைப் போலவே.
யாருடைய சாபம்.. அல்லது ஏன் இப்படி இந்தத் தெருவிற்கு மட்டும்.. புரியவில்லை.
எப்போதாவது ஸ்ரீரங்கம் வரும்போது இவர்களைப் பார்க்கும் போது எனக்கும் இது தோன்றியது…
படத் தேர்வு அமர்க்களம். மாரி போலவே இருந்தது சார்!
ரிஷப சுஜாதாவா நீங்களே அவதாரம் எடுத்துடலாமே! ;-))
நீங்க தான் எழுதணும்..இப்ப நம்மூர் சுஜாதா நீங்க தானுங்களே?
சற்றே கனக்கிறது மனது , சில நேரங்களில் உங்களின் சிறுகதைகள் படிக்கும் போதும் ..அப்படியே
padaththirkkum maarikkum sambantham undaa.. nice..sujaatha meendum varuvaaraa..?
மாரி ஒரு சூப்பர் பிகர்...பிறகென்ன !
எதோ ஒரு சாபம் அல்லது தவறான செயல் ??
ஆங்காங்கே எல்லா ஊர்களிலும் இது போன்ற மாரிகளுக்குப் பஞ்சமில்லை.
அவர்களைப்பற்றி எண்ணவோ கவலைப்படவோ யாருக்கும் தோன்றுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்குமே சங்கடங்கள் தெரியும். ஸ்ரீரங்கத்து தேவதைகள் பற்றி அந்த சுஜாதா எழுதியாச்சு.
//ஸ்ரீரங்கம் நிறைய கதைகளுடன் எழுதுபவருக்காகக் காத்திருக்கிறது.. இன்னொரு சுஜாதா வந்தால்தான் பூர்த்தி ஆகும் போல!//
இதுபோன்ற சாதாரண ‘மாரிகள்’ பற்றி, இன்றைய சுஜாதாவாகிய தாங்கள் தான் எழுத வேண்டும்.
ஆரம்பித்து விட்டீர்கள். தொடருங்கள்.
அன்புடன் vgk
nallayirukka
valththukkal.............
உங்களால் முடியாததா. ஆர் வீ எஸ்ஸை நான் வழி மொழிகிறேன். நிறைய எழுதுங்கள்.
ஆர்விஎஸ்-ஆர்.ஆர்.ஆர்-வை.கோ-வித்யா-சுந்தர்ஜி.
மாரியை பார்த்திருப்பேன். இவர் போலவே சிவப்பு கலர் ஒன்பது கஜ புடவை கட்டிய மாமி மண்ணை தூற்றிக் கொண்டே போவார்.
இவர்களின் பின்னால் ஏதாவது சோகம் இருக்கும்.
நீங்களே தொடரலாமே சார்.
உண்மைதான் நானும் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன் . ஏன் இந்த மாதிரி மனவளர்ச்சி குன்றியோர் அதிகமா இருக்காங்கன்னு. ஒரு வேளை ஜெனடிக்கல் ரீசனா இருக்கலாம்.
நீங்களே எழுத ஆரம்பித்து விடலாமே அந்தக் கதைகளை!
நானும் வழிமொழிகிறேன் சார்!
நீங்களே ஆரம்பிக்கவேண்டியதுதானே?
வழி மொழிகிறேன்(கொஞ்சம் லேட்டா வந்துட்டா அதுக்குள்ள
நாம சொல்ல வேண்டிய டயலாக்கை சொல்ல முடியாம போயிடுதே)
சுஜாதாவின் வழித்தோன்றலான எழுத்துநடை. பாராட்டுக்கள்.
மாரின்னா மழை! மகிழ்ச்சி தரும் விஷயம் மாரி! ஆனா இந்த மாரி... மனசு பாரமா இருக்குங்ணா!
சாரி! லேட்டு! அதென்ன சுஜாதா திரும்ப வருவது ?. நீர் எதற்கு இருக்கிறீர்.!
ஸ்ரீரங்கம் உமது அரங்கம்.. இனி மாசம் ஒரு கதையாவது ஸ்ரீரங்கத்து சிந்தனையோடு இருக்கணும் .. சொல்லிட்டேன்!
அவரவர் ஊர் மாரியை நினைவூட்டிய பதிவு. மாரிகள் உருவான கதைகளும் அவர்களின் வாழ்வியல் சுமைகளும் கேட்கவும் சொல்லவும் மனசைப் பாரமாக்குபவை. மனிதர்களிடம் இன்னும் எஞ்சிய ஜீவகாருண்யமே அவர்களின் உயிர்த்தண்ணீர். தெரியவருவதை உங்கள் நடையில் தெரியப்படுத்துங்களேன். படிப்பினையாக, கருணையூற்றாக, எச்சரிக்கையாக இருந்துவிட்டுப் போகட்டும். மனித மனதின் புதிர்முடிச்சு அவிழ்க்க அவிழ்க்க இறுகியபடியே...
நண்பர்கள் இல்லங்களில், நெருங்கிய உறவினர் இல்லத்தில் இப்படி எத்தனையோ மாரிகள் உலவி வருகிறார்கள். இது யாருடைய சாபம் என்ற யோசனை மனதை கனமாக்கும் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம். அத்தனை வலிகளையும் வேதனைகளையும் ஞாபகத்திற்குக் கொன்டு வந்து விட்டது உங்களின் அருமையான பதிவு!
படத்தேர்வு அபாரம்!
//ஏன் இப்படி இந்தத் தெருவிற்கு மட்டும்.. புரியவில்லை. //ஒரு ’’மாஞ்சு’’ படித்தே தாங்கமுடியவில்லை..இந்த நிலை மாற அரங்கன் அருள் புரிய வேண்டும்.....
ஸ்ரீ .தே மாதிரி தாவணிக்கதைகளை ஜீனியர் சுஜாதாவி
டமும் எதிர்பார்க்கிறோம்.....
Post a Comment