ஒரு ஞாயிறு குறுஞ்செய்தியாளர்கள் சந்திப்பில் அவரைப் பார்த்தேன்.
அறிமுகம் செய்து கொண்டோம். எல்லோரும் எல்லோரிடமும்.
மாலை ஒவ்வொருவராய்க் கிளம்பிப் போக நானும் வெளியே வந்தேன்.. அன்றைய நிகழ்வுகள் முடிந்து.
கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி..
‘அங்கே தஞ்சை கமருதீன்னு ஒருத்தர் வந்திருப்பார். அவரோட கண்ணாடி வீடுகள் தொகுப்பு வாங்கிக்குங்க.. அசத்தலான கவிதைகள்..’
அடடா.. அவர் கிளம்பிப் போய் அரை மணி ஆச்சே.. என்று பொருமினேன்.
பிறகு அவர் கவிதை ஒன்று கைபேசியில் வர, வாசித்து வாழ்த்தியதும், கூடவே என் ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினேன்.
‘உங்க விலாசம் அனுப்புங்க.. புத்தகம் அனுப்பறேன்’
இதுதான் கமருதீன்.
வளர்த்தல் இல்லை. சுணக்கம் இல்லை. நேரடி த்வனி.
அவர் கவிதைகளும் அப்படியே.
தாத்தாவைப் புதைத்து விட்டுக்
குளித்த நதி
தொலைந்து போயிருந்தது
அம்மாவைப் புதைத்து விட்டுத்
திரும்பும்போது
(குங்குமம் இதழில் வைரமுத்து அவர்களிடம் தங்கம் வென்ற கவிதை)
குழந்தை
மரணித்த வீட்டின்
ஒரு மூலையில்
காயாமல் கிடந்தது
கடவுளின்
கண்ணீர்த் துளி !
ஒரு கவிதையிலோ
மழைத் தூறலிலோ
பூத்த பூக்களிலோ
பனித் துளிகளிலோ
எங்கு நுகர்ந்தாலும்
வரவேயில்லை
பச்சைக் குழந்தையின்
நறுமணம் !
கசக்குமா
இனிக்குமா
புளிக்குமா
துவர்க்குமா
கள்ளிப் பால்...
யாருக்குத் தெரியும்
இறந்து போன
பெண் குழந்தைகளைத் தவிர !
வாசிக்க வாசிக்க தமது எழுத்தால் கட்டிபோட்டு மிரட்டும் தஞ்சை கமருதீன்
தொகுப்பில் அத்தனை கவிதைகளையும் இப்படியே பதிவில் போட்டு விடுவதை விட நீங்கள் வாங்கி வாசிக்க..
தஞ்சை கமருதீன்
எண் 10/7 பாலா நகர்
ரெட்டிப்பாளையம் சாலை
தஞ்சாவூர் 613 004
கை பேசி 9940781914
17 comments:
நல்லதொரு அறிமுகம்!! நான்கு கவிதைகளிலுமே கமருதீன் அவர்களின் வீச்சு தெரிகிறது. குப்பையாய் வரும் ஆயிரமாயிரம் கவிதைப் புத்தகங்களுக்கு நடுவே இப்படியான ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும் பாராட்டும். 'சுருக்'கமான தங்கள் பாணி எப்போதும் போல் வியப்பை அதிகரித்தபடி...
சிறப்பான அறிமுகம் ரிஷபன் . நன்றி....
நல்லதோர் அறிமுகம். ”கள்ளிப்பால் எப்படி இருக்கும்....” கவிதை அப்படியே ஆட்டி விட்டது மனதை.
ஒரு பானை சோற்றுக்குள் நான்கு சோறுகள் சுவைக்கத் தந்துவிட்டீர்கள்.அருமை !
நல்லதோர் அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார். முதல் கவிதையும் நான்காவது கவிதையும் எனக்கு மிகவும் பிடிச்சுருக்கு சார். நன்றி, நன்றி, நன்றி.
தஞ்சை கமருதீன் பற்றிய அறிமுகம் அருமை சகோ,
கவிதைகள் அனைத்தும் சிறிய வரிகளினூடாக, ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தஞ்சை கமருதீன் பற்றி எமக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி,
கவிஞர் தஞ்சை கமருதீனுக்கு வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு.
அப்படியே அச்சு அசல் அனுபவம் கவிதையாக மாறி இருக்கிறது (என்று நினைக்கிறேன்).
useful introduction
nanri rishaban.
நல்லதோர் அறிமுகம்.
மனதை தைக்கும் கவிதைகள் ... கமருதீன் நல்ல அறிமுகம்
வடித்த சோறு போல
வண்ண மலர் போல
படித்த மன மேறும்
பரவச நிலை தேறும்
குடத்து விளக் கெடுத்து
குன்றின் மேலிட் டீர்
எடுத்து பதி விட்டீர்
இதயம் தனைத் தொட்டூர்
பலவர் சா இராமாநுசம்
கள்ளிப்பால் படிக்கும்போதே திகைக்க வைத்தது.
நல்லதோர் அறிமுகம் சார். ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது.
நல்லதோர் அறிமுகம். I liked this. Thank you.- vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
நதி குறித்த முதல் கவிதையே அவரின் ஆளுமையை காட்டுகிறது. நாலும் அருமையான கவிதைகள். அறிமுகத்திற்கு நன்றி.
Post a Comment