முகமற்று அலைகின்றன
நம் முந்தைய நேசங்கள்..
அவற்றின்
கழற்றி விடப்பட்ட
முகங்களைச்
சுமந்தபடியே
வெவ்வேறு திசைகளில்
நீயும் நானும்!
அத்தனை சொற்களையும்
பொட்டலமாய்க் கட்டி
எடுத்து வரும்போது
தடுக்கி விழுந்தேன்..
சிதறிப் பறந்தவைகள் போக
எஞ்சியதை
அள்ளிப் பார்த்தேன்..
ஒரு கவிதை
உயிர்த்திருந்தது.
நள்ளிரவில் எழுப்பி
வானக் கரும்பலகையில்
நேசம் எழுதிக் காட்டினாய்..
இப்போதெல்லாம்
என் நகங்கள்
விரல்களுக்கு உட்புறமாகவே
வளர்கின்றன..
கீறல்களுக்கு
துணை போக மறுத்து.
17 comments:
சார்! படமும் அந்த மொத பீஸும் ஆளைப் பீஸ் பீஸாய் ஆக்கிடுச்சு.
அற்புதம். ;-)
\\என் நகங்கள்
விரல்களுக்கு உட்புறமாகவே
வளர்கின்றன..
கீறல்களுக்கு
துணை போக மறுத்து.\\
சூப்பர்.
முதல் பாடலும் சூப்பர்.
எப்படி சொல்ல? மூன்று முத்துக்களுடன் அழகிய கவிதை மாலை... அல்லது இப்படியும் சொல்லலாம்:
மாலை ஒன்று, மலர் மூன்று!
இப்போதெல்லாம்
என் நகங்கள்
விரல்களுக்கு உட்புறமாகவே
வளர்கின்றன..
கீறல்களுக்கு
துணை போக மறுத்து.
ஆஹா
என்னை மறந்து என் வாயிலிருந்த சப்தமாக வந்த வார்த்தைகள்
ஆஹா
என்னை மெய்சிலிர்க்க வைக்க வைத்த வசீகர வரிகள் , அற்புதம் சார்
எஞ்சியதை
அள்ளிப் பார்த்தேன்..
ஒரு கவிதை
உயிர்த்திருந்தது.
...SUPER!!!
சிந்திக்கவைத்த வரிகள் ஒவ்வொன்றும்..
மிகவும் அருமை ரிஷபன்.....
அன்பு வாழ்த்துகள்...
ஒன்றும், மூன்றும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - என்ன, சுழன்று கொண்டே இருக்கிறது அந்த நாணயம் வாழ்க்கையில். ஒன்று - கூர்மையான கோடுகளின் சித்திரமாகவும் , மூன்று - மன வண்ணங்களின் சித்திர வெளிப்பாடாகவும் உள்ளன. இரண்டாவது இயல்பின் அழகையும், உயிர்ப்பையும் புகைப்படமாக்குகிறது. அருமை திரு.ரிஷபன்.
"சில விவாதங்களுக்குப் பின்
முகமற்று அலைகின்றன
நம் முந்தைய நேசங்கள்..
அவற்றின்
கழற்றி விடப்பட்ட
முகங்களைச்
சுமந்தபடியே
வெவ்வேறு திசைகளில்
நீயும் நானும்!"
அருமையான வரிகள்!
அழகிய கவிதைகள்!
சூப்பர் sir!
சார் மூன்றும் வெவ்வேறு சுவை கொண்டது ...
மிகவும் ரசித்தேன் ..
மூன்று கவிதைகளுமே அற்புதமான வரிகளுடன் அமைந்து விட்டது.... படமும் சரியான செல்கஷன்.....
அருமையான வரிகள் சார். படமும் நன்றாக இருந்தது.
மிகவும் இதமாக,சுருக்கமாக,சிறப்பான முறையில் சொல்லியிருக்கிறீர்கள்.
மூன்றாவது மிகப் பிடித்தது. :)
மூன்று சிந்தனைகளும் அருமை என்றாலும் மூன்றாவது சிறப்பு !
//படமும் அந்த மொத பீஸும் ஆளைப் பீஸ் பீஸாய் ஆக்கிடுச்சு./
repeattikkiren sir
atheethathil
http://atheetham.com/story/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87
நேசத்தின் அடர்த்தியை நீர்த்துப் போகச் செய்கின்றன விவாதங்கள்.
காயம்பட்ட மனசை கவிதையெழுதி ஆற்றவேண்டியிருக்கிறது.
தேய்ந்து வளரும் பிறையாய் மறுபடியும் உயிர்ப்பதும் நேசத்தின் உன்னதம்தான்!
நல்லாயிருக்கு சார் கவிதை! கழற்றிய முகமூடியை வீசியெறியாமல் மறுபடி அணிய ஏதுவாய் வைத்திருக்கும் படம் நல்ல தேர்வு!!
Post a Comment