தஞ்சை பெரிய கோவில் உள்ளே போகும்படியான ஒரு வாய்ப்பு.
ரொம்ப நாளைக்கு அப்புறம் போவதால் - நினைவடுக்குகளின் மேல் எதுவுமின்றி - முதல் முறை பார்க்கிற ஆர்வம்.
ரொம்ப ஒழுங்காய் கட்டப்பட்ட - யாரும் என்னை அடிக்காதீங்க - கோவில் மாதிரி ஒரு இடம்னு தோன்றியது.
சாந்நித்தியம் என்று சொல்வோமே.. தஞ்சை பக்கம் பல கோவில்களில் கிட்டுகிற ஒரு உணர்வு.. அது எனக்கு மிஸ் ஆச்சு.
ஒரு வேளை நான் பரபரப்பாய் போய் வந்ததாலோ என்னவோ.
அதன் அழகை ரசித்தேன். உண்மை. ரசனைக்கு உரிய இடம் என்றுதான் மனசில் பதிந்ததே தவிர, உள்ளே எனக்கு மணி ஒலிக்கவில்லை.
வரிசையா வந்து என்னை அடிங்க !
24 comments:
தஞ்சாவூர் பெரிய கோவிலை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதில் ஒருபிரமிப்பு எனக்குள் எழும். சுற்று வட்டாரத்தில் எந்த மலைப் பகுதியும் இல்லாத அந்த (அத்துவான ?)இடத்தில் இவ்வளவு பெரிய கற்கோவில் எப்பொழுதும் ஆச்சரியமூட்டும் விஷயம். மற்றபடி இந்த சாந்நியத்த விவகாரத்தில் நான் என் முதுகையும் காட்டுகிறேன்.
பார்க்கப்பார்க்க பிரமிப்பு அகலாத கோயிலாக/
நன்றி GMB ஸார்..
எனக்கும் பிரமிப்பு..
ஆனால் கோவில் என்ற நினைப்பில் போனால்.. அதைத்தான் சொன்னேன்.
திருச்சிக்கு அருகே திருவாசி என்று ஒரு கோவில். அம்பாளைப் பார்த்தால்.. சன்னிதி விட்டு வெளியே வர மனசு வராது. பேசும் தெய்வம். ஆள் நடமாட்டமே அவ்வளவாய் இராத கோவில்.
பெரிய கோவில் தமிழகத்தின் அடையாளங்களில் முக்கியமானது.
அதைப் போல மீண்டும் ஒரு கோவில் கட்டுவதற்கு வாய்ப்பில்லை..
சாந்நித்தியத்தை விடுங்கள்..
கலையாகவே பார்ப்போம்..
கோவில் என்பதைவிட சரித்திர புகழ் பெற்ற இடம் என்று நாம் நினைத்திருப்பதால் இருக்கலாம்.
பார்க்கப் பார்க்க பிரமிப்பு - எப்பவும்.
சில கோவில்களில் உள்ளுக்குள்ளே மணி அடிக்கும்... ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
திருவண்ணாமலை கோவில் எனக்கு அப்படி - எத்தனை முறை சென்றாலும், கோவில் வாசலில் கால் வைத்தவுடனே உடல் முழுவதும் ஒரு அதிர்வு....
//அதன் அழகை ரசித்தேன். உண்மை. ரசனைக்கு உரிய இடம் என்றுதான் மனசில் பதிந்ததே தவிர, உள்ளே எனக்கு மணி ஒலிக்கவில்லை.//
உங்கள் பார்வையில் உள்ள உண்மை என்ற மணி ஒலித்ததை நான் என் காதால் இப்போது கேட்கமுடிகிறது.
அவரவர் உணர்வுகள் அவரவர்களுக்கு.
அதை பலரும் சொல்லத்தயங்கலாம். ஆனால் தாங்கள் வித்யாசமானவர்
என்பதால் சொல்லிவிட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
உள்ளே போனதேயில்லை. பார்த்ததேயில்லை. இருந்தாலும் வரிசைலே சேந்துக்குறேன் :)
கலையின் பிரம்மாண்டம் மட்டுமே. ஒரு சில புராதன கோவில்களில் கிட்டும் உணர்வு இங்கு கிடைக்காது . இது ஆகம் விதிப்படி கட்டப் படவில்லை என்று சொல்வோர் உண்டு
எல்லா நேரமும் நம் மனநிலை ஒரே மாதிரி இருக்காது அல்லவா? ரசிக்கவும் ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவை. அது எல்லா நேரமும் அமைய பெறாது
எனக்கும் ஒரு ம்யூஸியத்தைப் பார்த்த உணர்வு தான்!
ஒவ்வொரு முறையும் பிரமிப்பு அதிகமாகிறது..
அங்கே வரும் கூட்டமும் கைடுகளும் பக்தியை இரண்டாம் பட்சமாகுகிறார்களோ என்று தோன்றுவதுண்டு..
வாராஹி கோவிலில் சிரத்தையான வழிபாடுகளைக் கண்டேன்.
ஒரு பிரம்மாண்டத்தை ரசித்த திருப்தியும், ராஜராஜன் எப்படி அந்நாளில் முயன்று இதைக் கட்டினாரோ என்கிற பிரமிப்பும் உள்ளத்தில் எழுகின்ற காரணத்தால்தான் இறை பக்தி சற்றே பின்னுக்குப் போய்விடுகிறது என்று நான் உணர்ந்திருக்கிறேன். உங்கள் அனுபவமும் இப்படித்தான் என்று உணர்கிறேன். நன்று!
நானும் அதே கட்சி தான்! நுழைவில் பார்க் அமைப்பும், அங்கு சாயங்கால பொழுதைப் போக்க வரும் கூட்டமும், அந்த ப்ரம்மாண்டமும் திறந்த அமைப்பும் கோவில் என்பதைவிட கலை சிறப்பான இடம் என்று தோன்றுவது வியப்பில்லை. - ஜெ.
கிரமமாக பூஜை புனஸ்காரங்கள் நடந்து,பக்தர்களும் பக்தி உணர்வுடன் வந்தால் தான் சான்னித்த்யம் ஏற்படும்.வேடிக்கை பார்க்க வருகிற கூட்டத்தால் ஏற்படாது அது மாதிரி நடக்கிறதா என்று தெரியாது. .
அடிக்கிறதாவது, பிச்சு உதறலாம்!
பெரிய கோவில்- ன்னாலே என் மனசு சிலிர்க்கும். கோவையில் இருந்து
என் பைக்-லயே (கிட்டத்தட்ட 300 கிமீ) நானும், என் தம்பியும் போய்
நாள் முழுக்க அங்கேயே இருந்து, தரிசனம் பார்த்து, அந்த அனுபவங்களையெல்லாம்
காமிராவின் கங்களுக்கு ரசிக்கக்கொடுத்துகிட்டதெல்லாம், அடடா! போங்க ரிஷபன் ஜி,
மிஸ் பண்ணிட்டீங்க!
பகிர்வுக்கு நன்றிங்க சார்
உண்மை ரிஷபன். பெரிய கோயில் உண்மையில் கோயிலுக்கான ஆகமங்களுடன் கட்டப்பெறவில்லை. தவிரவும் அது படைக்கொட்டிலாகவே பயன்படுத்தப்பட்டமையும் வரலாற்றில் உள்ளது. ஒரு கலைப்படைபபாக அனுபவிக்கலாம். நீங்கள் சொல்வது போல நான் சிறுவயதிலிருந்து என்னுடைய அம்மா தவறாமல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அழைத்துக்கொண்டு போவார்கள். அன்று தொடங்கி இன்றுவரை தாங்கள் சொல்வதுபோல எந்தவொரு அதிர்வும் எனக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதன் கலையமைப்பைக் கண்டு அதிர்வுகளும் பிரமிப்பும் உண்டு.
உணர்வுகள் பொய் சொல்லுவது இல்லை.
உங்கள் உணர்வுகளை சொல்லிவிட்டீர்கள்.
முன்பைவிட இப்போது மக்கள் கூட்டம் கூடுவதால், கோவில் என்ற உணர்வு ஏற்படுகிறது, இல்லையென்றால் அது ஒரு கலைக் கோயில் தான்.
சில கோயில்கள் வெகு சிறிதாக இருந்தாலும், ஒரு சிலிர்ப்பு ஏற்படும். விவரிக்க முடியாத பரவச உணர்வு வியாபிக்கும் மனசெல்லாம். சிலவற்றில்... நமக்கும் அதற்கும் அலைவரிசை ஒத்துப் போகலைன்னு மனசை சமாதானப் படுத்திக்க வேண்டியது தான்.
சென்ற முறை ஊருக்கு வந்த போது தான் பெரிய கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது...
மாலை நேரத்தில் அதன் அழகையும், கலையம்சத்தையும் கண்டு வந்தேன்....
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை இன்று முழுவதும் விட்டாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்...
உங்க கருத்தை நானும் ஒப்பு கொள்கிறேன்... சில சமயம் ஒரு இடத்தை பத்தியோ ஒரு விசயத்தை பத்தியோ நெறைய கேட்டு படிச்சு ரெம்ப எதிபார்ப்பு வளந்துடும் மனசுல, அதன் காரணமாவே அதை நேர்ல பாக்கறப்ப சுவாரஷ்யம் கம்மி ஆய்டும்... Expectation reduces the joy னு சொல்றதில்லையா, அது போலனு நினைக்கிறேன்... இதுக்கு சிறந்த உதாரணம் நம்ம சினிமாக்கள்...ஓவர் பில்ட் அப் செஞ்சு பெட்டிக்கு போய்டும் சில சமயம் :)
பிரகதீஸ்வரியின் அழகும், பிள்ளையார் சன்னதியின் அருகில் யானையை விழுங்கும் பாம்பு ( Anakonda ) சிலையின் தத்ருபமும், முருகன் கோயிலின் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடும் இன்னும் பல பிரமிக்கவைக்கும் பல அம்சங்கள் நிறைந்ததாலோ என்னவோ தெய்வீக அம்சம் தோன்றாமல் போகிறது என்று சொல்லலாம்.
ஹா ஹா ரிஷபன். யாரும் உங்களை அடிக்க வரமாட்டார்கள் என்கிற தைரியம் தானே.
எதிர்பாராமல் வருவதுதான் உணர்வு. காதலால் கசிந்து உருகி கண்ணீர் மல்கி. சும்மாவா பாடி வைச்சாங்க.
Post a Comment