நதியில்
கால் நனைத்துத்
திரும்பினேன்..
மனசுக்குள் கசிந்தது
ஈரம் !
புதிதாய்த்தான்
ஒவ்வொரு முறையும்
கூடு கட்டுகிறது
எந்தப் பறவையும்..
ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொரித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!
ஜன்னல் திறந்து
பிஞ்சு விரல்
நீட்டியது மனசு..
முதுகில் அடி வைத்து
உள்ளே இழுத்துப் போனது
புத்தி !
23 comments:
//ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொறித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!//
கூடு ஒன்றே எனினும் குஞ்சு அழகாகவே ஆரோக்யமாகவே
பிரஸவம் ஆகிறதே ;))))
அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள், சார்.
முதல் கவிதை: கண் முன் படமாய் விரிகிறது
இரண்டாவது: அப்படி ஓர் கவிதை மனது வைப்பதும் கடினம் தானே சார்?
சிந்தனையின் ஆழமும்
படைப்பின் நேர்த்தியும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
Tha.ma 3
அருமையான கவிதை..அழகான வரிகள்..நன்றிகள் நண்பரே.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
முதல் கவிதையும், மூன்றாம் கவிதையும் கை தட்டி ரசிக்க வைத்தன. அருமை... அருமை..!
மூன்றும் அருமை.... சற்றே இடைவெளிக்குப் பின் உங்களது கவிதைகள்.... ரசித்தேன்.....
மனதினைத் தைத்த கவிதைகள்!
பகிர்விற்கு நன்றி!
இரண்டம் கவிதையும்...மூன்றாம் கவிதையும் ரசித்தேன்...
மூன்றாம் ஆம் கவிதை நச்.
இரண்டாம் கவிதை... :)) என்னத்த சொல்ல!!
கவிதையை படித்து ரசிக்க
மனதுக்கு மிகவும்
நன்றாக இருந்தது
ஆனால் இப்படி நேர்த்தியாக
எழுத என் இயலாமையை
மனம் வருந்தியது
அழகிய உருவகங்கள். மூன்றாம் கவிதையில் முதுகில் அடிபோட்டு இழுத்துப் போன புத்தியைக் கண்டு வியக்கிறேன். அபாரம்... வாழ்த்துக்கள் ரிஷபன் சார்.
//ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொரித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!//
அந்த மென் கவிதைகளை எங்கள் நெஞ்சில்
பொறித்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.
//ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொறித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!//அருமைவாழ்த்துக்கள்
கவிதை நன்றாக இருக்கிறது.
அருமையான கவிதைகள்.மூன்றாவதை நான் மிகவும் ரசித்தேன்.
ஒரு கவிதை பொரித்தலை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷபன் !
அடிக்கும் வெயிலில் வேண்டியிருக்கிறது இப்படியான ஈரம்!
அருமையான வரிகள்.
மகிழ்ச்சியாய் இருக்கிறது. எதார்த்தம் கூடுகட்டி பறவைகளாய்ப் பறக்கிறது ரிஷபன்.
விருது கொடுத்திருக்கிறேன்
http://lksthoughts.blogspot.in/2012/03/blog-post.html
நாமும் கவிதை பொரிக்கலாம்
என மனக்கூட்டில் அமர்ந்தால்
"ஏங்க, முட்டையை அவிக்கவா
பொரிக்கவா'வென்ற அம்மணியின் எறிச்சலில்,
எண்ணப் பறவை சிறகடித்து விடுகிறது.
ஒரே கூட்டில்
வெகு காலமாய்
பொறித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதைக் குஞ்சுகளை!//
அழகாய் கொஞ்சுகிறது வரிகள்..
ஜன்னல் திறந்து
பிஞ்சு விரல்
நீட்டியது மனசு..
முதுகில் அடி வைத்து
உள்ளே இழுத்துப் போனது
புத்தி !
புத்தி அப்படித்தான், இங்கிதம் தெரியாதது.
மூன்று கவிதைகள், சுவைக்கத்தந்த முக்கனிகள்.
ருசிக்கிறது ரிஷபன் ஜி.. அன்பு வாழ்த்துகள்!
Post a Comment