இந்த வாரம் அதாவது இன்று திருவெள்ளறைப் பெருமாள் - புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன் - கொள்ளிடக் கரைக்கு விஜயம்.
திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதால் ஆதிவெள்ளறை என்று அழைக்கப்படுகிறது. தாயார் உற்சவருக்கு பங்கஜவல்லி என்று திருநாமம்.
உற்சவர் - பெருமாள், தாயார் இருவரும் சேர்த்தியாய் இன்று கொள்ளிடக்கரைக்கு காட்சி கொடுத்தார்கள்.
ஆற்றில் இறங்கி மக்கள் பெருமாளைச் சேவிக்க வருகிறார்கள்.
எதிரே தெரிகிற மண்டபம், படித்துறைதான் திருமங்கை மன்னன் படித்துறை.
புண்டரிகாக்ஷனை தாயாருடன் சேவித்து வலம் வந்தோம்.
இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார், சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய், அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்
என்று ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார் !
அந்தியம்போதில் தரிசித்துத் திரும்பியபோது மனசும் நிறைந்து போயிருந்தது !
10 comments:
திருவெள்ளறைப் பெருமாள் தரிசனம் எங்களுக்கும் தில்லியில் இருந்தபடியே....
மிக்க நன்றி.
அந்தியம்போதில் தரிசித்துத் திரும்பியபோது மனசும் நிறைந்து போயிருந்தது !
படங்களும் பகிர்வுகளும் மனதை நிறைவாக்குகின்றன்,,,பாராட்டுக்கள்..
//உற்சவர் - பெருமாள், தாயார் இருவரும் சேர்த்தியாய் இன்று கொள்ளிடக்கரைக்கு காட்சி கொடுத்தார்கள்.//
திவ்ய தரிஸனம். தங்களின் படங்களால் எங்களுக்கும்.
thanks for sharing sir
பதிவு அருமை. இன்னும் கொஞ்சம் தகவல்களுடன் அளித்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் மனம் நிறைந்தந்து போல எங்கள் கண்கள் காட்சிகளை பார்த்து திருப்தி அடைந்தன..மிக்க நன்றி
திருவெள்ளறைப் பெருமாளின் திவ்ய தரிசனத்தை பெற்றோம்.
இன்றுதான் கேள்விப்படுகிறேன். திருவரங்கத்திற்கும் பழமையானதா?
ஆற்றில் எல்லாம் தண்ணீர் இருக்கிறது.
பெருமாள் தர்சனம் காணக்கிடைத்தது. எங்கள் மனமும் குளிர்ந்தது.
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
Post a Comment