என் ப்ரியங்களைச் சுமந்து
நிற்கிறேன்
கால நதியில்..
ஒற்றைக் கொம்பனாய்.
வழித்தடமெங்கும்
ஆளரவமற்று.
பகிர்தலற்ற நேசம்
பூபாரமாய்க் கனக்கிறது..
உருவம் கண்டு மிரண்டு
ஓடுகிறார்கள்..
உள்ளே கசிவது
ஜீவிதத் தேன்..
வனம் விடுத்து
ஓரிரு கரும்புக்கும்
ஒரு சீப்பு வாழைக்கும்
பெருங்கவளத்திற்கும்
அன்பின் முத்தங்களுடன்..
எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !
19 comments:
நல்ல கவிதை.
//உருவம் கண்டு மிரண்டு
ஓடுகிறார்கள்..
உள்ளே கசிவது
ஜீவிதத் தேன்..//
ஒற்றைக்கொம்பனின் ஏக்கம் நியாயமானதே. அருமை.
>>>>
//எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !//
மனிதம் இருக்க வேண்டிய மனிதர்களுக்குத்தான் அடிக்கடி மதம் பிடித்து வருகிறது.
அதுவும் ’மதம்’ என்றால் பெயராலேயே ’மத்ம்’ பிடித்து விடுகிறது.
இததகைய மனிதர்களுடன் ஒப்பிடுகையில், இயற்கையாகவே ஒருசில உந்துதல்களால் யானைகளுக்கு மதம் பிடிப்பது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
மிகச்சிறந்த படைப்புக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்தலற்ற நேசம் பூபாரமாய் ...!
மதம் பிடிப்பதைவிடக் கொடூரமாய் மனிதமற்ற மனிதர்கள்...
உள்ளே கசியும் ஜீவிதத் தேன் வெகு இனிமை.
/எனக்கு மதம் பிடிக்க வில்லை. மனிதம் தான்..../.பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா. ? மனிதம் பிடித்திருந்தாலும் சரிதானே. .....!
மனிதம்தான் பிடிக்கிறது.. அதிலென்ன சந்தேகம் GMB ஸார்..
மனிதனுக்கும் ஒரு கவளம் சோறும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் இருந்தவரை மனிதம் நிறைந்திருந்தது , தேவைக்கு அதிகமாக கிடைக்க தொடங்கியபொது மனிதம் மறைந்து ,மதம் பிடித்து விட்டது .
தங்களின் கவிதையை வாசித்து புரிந்து கொண்டு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவில்லை , எனக்கு புரிந்தது வைத்து சொல்லி இருக்கிறேன், மன்னிக்கவும் .
மனிதத்தில் மதம் பிடிக்கும் போது தான் பேரழிவு ஆரம்பமாகிறது.
அழகிய கவிதை
எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !//
குழந்தை போல் பழகும் ஒற்றை கொம்பன் சொல்வது நிஜம்.
அதற்கு மதம் பிடிப்பது இல்லை மனிதம் தான் பிடிக்கிறது . நாம் கொடுக்கும் வாழைபழம், அரிசியை அன்புடன் வாங்கி சாப்பிட்டு போவதைப்பார்த்தால் அதுவும் ஒரு குழந்தை தான். தன் பாகனுடன் விளையாடுவதை பார்த்தவர்கள் சொல்வார்கள் அது குழந்தைதான் என்று. என்ன ! வளர்ந்த குழந்தை.
அருமையான கவிதை.
/எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !/
அருமையான வரிகள்.
இயல்பான வரிகள். அருமை.
//எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !//
அருமை. சிறப்பான கவிதை.
எனக்கு மதம் பிடிக்கவில்லை..
மனிதம்தான் !
யானைக்கு மனிதம் பிடிக்கிறத்து ..
மனிதனுக்கோ மதம் பிடித்து வாட்டுகிறது ..!!!
அற்புதமான கவிதை!
அற்புதமான கவிதை!
சிறகாட்டம் வருடும் சின்னக்கத்தி.
அற்புதம் ரிஷபன்...இதைவிட வேற சொல் தோன்றவில்லை
உருவம் கண்டு மிரண்டு
ஓடுகிறார்கள்..
>>
அவ்வளவு அசிங்கமாவா இருப்பீங்க?!
பகிர்தலற்ற நேசம் பாரமாய்....
என்னவொரு சொல் அடுக்கு!
Post a Comment