எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன் ..
சலசலத்தோடும் ஆற்றின் கரையில்
மரங்கள் வீசும் பலத்த காற்றில்
உள் மனம் ஆடிக் கொண்டிருக்கிறது ..
ஒரு குழந்தையின் புன்னகை கூட
என்னை ஈர்ப்பதில்லை அப்போது ..
எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்
எனக்கான நிச்சலனத்தை ..
கற்றுக் கொண்ட ஆசனங்கள் வழியே
உடல் மடங்கிக் கிடந்தாலும்
பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்
மனசின் சாளரம் திறந்து கிடக்கிறது ..
ஒரு பூகம்பம் வருமென
எதிர்பார்த்து
அனலடிக்கும் புத்திக்குத் தெரியாது ..
கைக்கெட்டும் தூரத்தில் தான்
இருந்து கொண்டே இருக்கிறது
எனக்கான அமைதி என்று !
9 comments:
//பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்//
அருமையான வார்த்தைகள். நல்ல சிந்தனை.நல்ல கவிதை.பாராட்டுகள்.
ரேகா ராகவன்
நல்ல கவிதை. அமைதி உள்ளேயே அமைந்திருக்கிறது, அதனால்தான் வெளியே கிடைப்பதில்லை.
- கே.பி. ஜனா
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் எமது அறிவீனத்தை நாசூக்காக கூறியிருக்கிறீர்கள். அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்.
சலனப்படுத்தும் கவிதை..
பூங்கோதை,
முனைவர் இரா. குணசீலன்
அன்புடையீர்
மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் கருத்திற்கும்
அமைதி எப்போதும் மனம் மட்டுமே எட்டுகிறதென்று நினைக்கிறேன், கைகளுக்கு கிடைப்பதெல்லாம் உடைவதாகவே உள்ளன பிழையிருந்தால் மன்னிக்கவும்
தேடி கிடைக்கும் என்று தொடங்கினேன்
வாடினேன் ஓடினேன் வருந்தினேன்
இளைத்தேன் வலித்தேன் நொந்தேன்
அமைதி இதுவா அமைதி அதுவா
அமைதி இங்கா அமைதி அங்கா
அயர்ந்து அமர்ந்து ஒரு மூச்சு விட்டேன்
அப்பாடா அமைதி மூச்சில் தான்
கூடவே இருப்பது கண்ணுக்கு தெரிவது இல்லை
உலகெல்லாம் பார்க்கும் கண்ணை
என்னைப் பார்க்க வைக்க முடியவில்லை அதனால்
ஹை ஒரு கவிஞர் கிடைச்சாச்சு
அற்புதமான கவிதை. எந்த வரியை பாராட்டுவது எதை விடுவது. முடிவு ரொம்ப அருமை. நல்ல கவிதை படித்த நிறைவு.
மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
Post a Comment