January 03, 2010

மீட்டெடுப்போம்

உங்கள் விமர்சனங்களை
நிச்சயம்
வரவேற்கிறேன் ..
எதிரில் நின்று
என்னோடு பேசி
கை குலுக்கி பின்
விடை பெற்றுப் போகும்
ஆரோக்கியமான
எதிர் வினைகளை..
என் முகத்தில்
உங்கள் குத்து
என் சம்மதத்துடன்
நிகழட்டும்..
ஆனால்
என் முதுகின் பின்
கேலி செய்யும்
உங்கள் சுபாவம்
உண்மையாய்
உங்களுக்கே பிடித்திருக்கிறதா ?
எல்லா விமர்சனங்களையும் மீறி
நம்முள் நிலவும்
நமக்கான நம் நேசம்
காயப்பட்டு போவதில்
யாருக்கென்ன லாபம் ?
எதையும் கடந்து
ஜீவிக்கப் போவது
நான் உங்கள் மீதும்
நீங்கள் என் மீதும்
வைத்திருக்கும்...
நமது முதல் சந்திப்பில்
கண்டுபிடித்த
அந்த பிரியம் மட்டுமே அல்லவா?!
ஒரு குத்தில் தொலைந்து போன
அந்த பிரியத்தை
மீட்டெடுப்போம் வாருங்கள்..!





7 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

கொஞ்சம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்....!

Thenammai Lakshmanan said...

ஆஹாஹா ...!!!அட்டகாசம் ...!!!ரிஷபன் அசத்துறீங்க ...!!!

வசந்தமுல்லை said...

நல்ல பாடம் கற்பித்தீர்கள். புரியவேன்டியவர்களுக்கு புரியும். சூப்பர்.

Chitra said...

நட்பின் காயம் ஆறட்டும். இந்த புத்தாண்டு நேசம் மிகுந்த நட்பில் அனைவரையும் குளிர்விக்கட்டும்.
நல்ல கருத்துள்ள கவிதை.

angel said...

nala iruku nice and continue writing such poems

ஹேமா said...

புத்தாண்டு எல்லோர் மனங்களையும் புதுப்பிக்கும் ரிஷபன்.

ரோஸ்விக் said...

அன்பரே, பிரியத்தை மீட்டெடுக்க எங்க வந்து நான் குத்தட்டும்?? :-))

//நமது முதல் சந்திப்பில்
கண்டுபிடித்த
அந்த பிரியம்//

இது தான் வாழ்வில் எப்போதும் முக்கியம்....