January 09, 2010

மனப் பறவை

என்னைப் பார்த்திராதவர்களுக்கு
என் பெயர்
ஒரு அடையாளம் மட்டுமே..
என்னை அறிந்தவர்களுக்கு
அப்படித்தான்
என் மனசு!
எதற்கும் கலங்க வேண்டாம் என்று
சொல்லி வைத்திருக்கிறேன்
ஆனாலும் அவ்வப்போது
தவித்துக் கொண்டுதானிருக்கிறேன்..
பழகியவர்கள்
முகந்திருப்பிப் போகும் போதெல்லாம்..
ஒவ்வொரு கனவிற்குப் பின்னும்
நிஜம் தேடும் புத்தியை போல்
பார்க்கும் மனிதரிடம்
சிநேகம் தேடும்
என் மனப் பறவை ..
அதன் இரு சிறகுகளாய்
எல்லையற்ற நேசமும்..
பழகுபவரிடம் சமத்துவமும்..
பூமிக்கு வந்ததின் பலன்
நேசிக்க கற்றுக் கொள்வதும்
இறுதி வரை
நேசிப்பதுமே ..

11 comments:

Thenammai Lakshmanan said...

//பூமிக்கு வந்ததின் பலன் நேசிக்க கற்றுக் கொள்வதும் இறுதி வரை நேசிப்பதுமே ..//

அருமை ரிஷபன் நல்லா இருக்கு

Chitra said...

ிஜம் தேடும் புத்தியை போல்
பார்க்கும் மனிதரிடம்
சிநேகம் தேடும்
என் மனப் பறவை .. ...............நண்பனே, உங்கள் தேடல் என்றும் வீணாகி போகாமல் இருக்கட்டும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நேசிப்போம்...நேசிப்போம்..
நேசிப்பே நம் சுவாசிப்பாய்
இருக்கும் வரை நாம்
நேசிப்போம்.


அன்புடன் ஆர்.ஆர்

வசந்தமுல்லை said...

இந்த அருமையான நேசிப்புக்கு, என்னுடைய நெஞ்சார்ந்த, சிரந்தாழ்ந்த வணக்கத்துடன் வாழ்த்துக்கள்!!!!

அண்ணாமலையான் said...

ஓஹோ தேனு வந்துருக்காங்களா? அப்ப வேலை மிச்சம். ரீப்பீட்டேய்..(கருத்து)

Paleo God said...

அருமை ரிஷபன்..))

என் நடை பாதையில்(ராம்) said...

/*ஒவ்வொரு கனவிற்குப் பின்னும்
நிஜம் தேடும் புத்தியை போல்*/

வார்த்தைஜாலம்...

Rekha raghavan said...

//ஆனாலும் அவ்வப்போது
தவித்துக் கொண்டுதானிருக்கிறேன்..
பழகியவர்கள்
முகந்திருப்பிப் போகும் போதெல்லாம்..//

மனதை நெகிழ வைத்த வரிகள். ஒரு நல்ல கவிதையை படித்த திருப்தி.

ரேகா ராகவன்

vasu balaji said...

அபாரம்.பாராட்டுகள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

நிலாமதி said...

நிஜம் தேடும் புத்தியை போல்
பார்க்கும் மனிதரிடம்
சிநேகம் தேடும்
என் மனப் பறவை .

அருமை நல்லா இருக்கு. ரிஷபன் நல்லா இருக்கு.