January 14, 2010

அம்மா

உலர்ந்த துணிகளை
மடிக்கும் போதெல்லாம்
நினைவில் வந்து
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்..
அம்மாவின் மறைவு!
எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மாவிடம் விடை இருந்தது..
அம்மா இல்லாமல் போனதும்..
இருப்பதெல்லாம்
ஒரே கேள்விதான்..
எங்களை விட்டு
எங்கே போனாய்..?
இப்போதெல்லாம் சுலபமாய்
மற்ற பெண்களை
'அம்மா' என்றழைக்க முடிகிறது..
இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!

( 50 வது பதிவு.. உற்சாகப்படுத்தும் அன்பு நண்பர்களுக்கு நன்றி கலந்த கண்ணீர்த் துளிகள் சமர்ப்பணம் ! )

15 comments:

Sinthu said...

வாழ்த்துக்கள்.
அம்மாவைப் பற்றி ஆழகாக சொன்னீர்கள். இல்லாத வேதனை கொடுமையானது.

vasu balaji said...

/இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்/

அருமையாகச் சொன்னீர்கள். பெரிய ஏக்கம் அது. வந்திச்சோ ஓய்ச்சலாக்கிடும். 50வது இடுகைக்கு வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஐம்பதாவது பதிவு.. மிக மிக அருமையான
பதிவு... வாழ்த்துக்கள், ரிஷபன். இலக்கிய
பூங்காவில் உங்கள் படைப்புகள் ஒரு
நறுமணமிக்க ரோஜாப் பூவாக மலரட்டும்...
மலரவேண்டும் என்கிற ஆசையில்....



அன்புடன் ஆர்.ஆர்.

சாந்தி மாரியப்பன் said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

அம்மா.... என்ன சொல்ல.

Rekha raghavan said...

அம்மாவைப் பற்றிய கவிதை அருமை. ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துகள் சார்,

ரேகா ராகவன்.

Chitra said...

இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு! ...........ஐம்பதாவது இடுகை, அம்மாவுக்கு உரியது. மனதை தொடும் அருமையான கவிதை பதிவு.
வாழ்த்துக்கள்.

வசந்தமுல்லை said...

அம்மாவை பற்றிய பதிவு அருமை........ எதுவும் இல்லாதபோதுதான் அதன் அருமை அதன் அருமை தெரியும்.

உங்கள் தொண்டு வலை பதிவில் மிகவும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். பாராட்டுக்கள் உங்கள் ஐம்பதாவது பதிவுக்கு!!!!!

ஹேமா said...

வாழ்துக்கள் ரிஷபன்.

அம்மா...இருக்கும்போது
அருமை தெரிவதில்லை !
நல்லாச் சொல்லியிருக்கீங்க.

நிலாமதி said...

இல்லாத போது தெரியும் அருமை..........அம்மா பற்றிய பதிவு அருமை. ஐம்பதாவது பதிவு
போடும் உங்களுக்கு மேலும் வளர வாழ்த்துக்கள்

Paleo God said...

இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!//

அருமை..

வாழ்த்துக்கள் ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

/இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்/

அம்மாவைப் பற்றி அழகான பதிவு...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

Venkat Nagaraj,
New Delhi.

கே. பி. ஜனா... said...

விரைவில் நூறுக்கு வரவேற்கிறேன்!

குட்டிப்பையா|Kutipaiya said...

அருமை..

Thenammai Lakshmanan said...

//இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!//

ஐம்பதாவது பதிவா அருமையாய் இருக்கு ரிஷபன் ..பல நூறு பதிவு காண வாழ்த்துக்கள் ரிஷபன்

வசந்தமுல்லை said...

ரிஷபன், இந்த வீடியோவை, உங்கள் ரிஷபன் வலை பகுதியில்,அம்மா என்று நினைவு ஊட்டியதர்க்காக உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் !!!!!!!!