January 15, 2010

கோபம் வராமல் இருக்க என்ன வழி ?

கோபம் வராமல் இருக்க..

நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..

அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'

எனக்கு ஆச்சர்யம்.

"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"

"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.

"அப்புறம் பிரச்னை இருக்காதே"

"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"

என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.

ஒரு எம்டிகிட்ட போனேன்.

"ஏன் கோபம் வருது"

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."

கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.

"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"

"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"

"உங்களை அமைதிப்படுத்தத்தான்"

"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"

"சொல்லுங்க"

"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"

டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.

நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..

நற,,நற..

ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..

10 comments:

goma said...

நல்ல ஆள் பார்த்து கேட்டீங்க..

goma said...

கோபத்தை அடக்க முடியாதுன்னு தெரிஞ்சு கோபம் கோபமா வருது

vasu balaji said...

அது சரி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி.. அந்த டாக்டர் என்ன ஆனார் ?
அவர் தனக்குத் தானே ஊசி போட்டுகிட்டாரா ?

Chitra said...

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு" ................
.................."புரியலை, என்ன சொல்றீங்க?" ...........நற நற, .....

கே. பி. ஜனா... said...

எல்லாருக்குமே ஏதோ ஒரு கோபம்... அப்புறம் வழி சொல்லறது யாரு? நற நற...

கமலேஷ் said...

/// கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க ///

ஒரு வழி சொன்னா உங்க கோபம் அடங்கிருமில்ல...

சரி கேட்டுக்குங்க......

" ஒரு வழி "

போதுமா ஒரு வழி சொல்ல சொன்னீங்க சொல்லியாச்சு,
கோபம் அடங்கிரிட்சா.... (அஹா அண்ண திரும்பவும் பல்ல கடிக்கிறாரே விடு ஜுட்... )

வை.கோபாலகிருஷ்ணன் said...

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா

Very Interesting words. Paaraattukkal.

Thenammai Lakshmanan said...

hahaha

RIshaban do u ve hypertension..?

plz check that........:-)

ஹேமா said...

அடிக்கடி கோபப்படுகிற ஒருத்தருக்கு இந்தப் பதிவை அனுப்பிட்டேன்.