January 21, 2010

கவிதை பிடிச்சிருக்கு


1. ஏதேனும் ஒரு மூலையில் நின்று
எதிர்க்கப் போகிறேன் என்றாலும்
ஓடுவது எனக்கும்
துரத்துவது அவர்களுக்கும்
பிடித்துதானிருக்கிறது இப்போது!


2. பூக்களோடு நிற்கிறது
செடி..
கிளைகளைமுறித்துப்
போகிறார்கள்
வழிப் போக்கர்கள் !


3. மின் கம்பத்தில்தொங்கும்
ஒவ்வொரு பட்டமும்
சொல்கிறது
ஏதோ ஒரு சிறுவனின்
விண்ணைத் தொடும்
முயற்சியை !


4. என்ன பெயரிட்டு அழைப்பது
என்று யோசித்து முடிப்பதற்குள்
பறந்து போய்விட்டது
அந்தக் குருவி.

12 comments:

Rekha raghavan said...

முத்தான நான்கு கவிதைகள். அருமை.

ரேகா ராகவன்.

மாதவராஜ் said...

தொடர்ந்து சில நாட்களாக உங்கள் வலைப்பக்கம் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். இன்று அப்படியே சிலிர்த்துப் போக வைத்து விட்டீர்கள். அனைத்துமே அழகு. ரசித்தேன். தொடருங்கள் நண்பரே..... வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

யாவும் மிக அருமை, குறிப்பாய் பட்டம் மிக மிக....

பிரபாகர்.

CS. Mohan Kumar said...

அருமை சார். அசத்திடீங்க. இப்படி நாலும் அருமையா அமைவது ரொம்ப அரிது. மாதவராஜ் அவர்களே பாராட்டிட்டாரே அப்புறம் என்ன வேணும் சொல்லுங்க

Thenammai Lakshmanan said...

நான் நாப்பது போட்டு இருக்கேன் நீங்க நச்சுன்னு நாலு போட்டு அசத்திட்டீங்களே ரிஷபன்

கமலேஷ் said...

அட்டகாசம் தொடருங்கள்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

4 கவிதைகளும் சூப்பர்!!

kovai sathish said...

எல்லாம் வெவ்வேறு சிந்தனைகள்...நன்று நண்பா..?!

Chitra said...

3. மின் கம்பத்தில்தொங்கும்
ஒவ்வொரு பட்டமும்
சொல்கிறது
ஏதோ ஒரு சிறுவனின்
விண்ணைத் தொடும்
முயற்சியை ! ..........நண்பனே, எப்பொழுதும் போல உங்கள் கவிதைகள் அருமை.

கே. பி. ஜனா... said...

''ஏதேனும் ஒரு மூலையில் நின்று
எதிர்க்கப் போகிறேன் என்றாலும் ...''
பிடித்த வரி!

குட்டிப்பையா|Kutipaiya said...

முதலாதவதும் பட்டமும் மிக அழகிய வரிகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

All the words & all the four paragraphs are superb.