January 30, 2010

ஒவ்வொரு மழை நாளிலும்

ஒவ்வொரு மழை நாளிலும்
தவறாமல் உன் நினைப்பு.
ஒவ்வொரு சொட்டாய் உதிர்க்கும்
என் வீட்டு முற்றம்
மழை விட்ட பின்னும்.
ஜன்னல்களை மூடிவைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்தவமிருக்கும்.
உன்னைக் காதலித்து இழந்த பின்னும்
தேற்றும் முற்றம்!
எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ
என்றேனும் ஜன்னலைத் திற!
என்னைப் போலவே
மழை நாளில் உனக்கும் வரும்
என் நினைப்பு!.

13 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி... இப்பல்லாம் முற்றம் எந்த வீட்டில் இருக்கிறது? கவிதை ஜோர்!!

அண்ணாமலையான் said...

gud post

கண்மணி/kanmani said...

//உன்னைக் காதலித்து இழந்த பின்னும்
தேற்றும் முற்றம்!//
நல்லாருக்கு

payapulla said...

ரொம்ப நல்ல இருக்கு ரிஷபன் .
ரசிச்சி எழுதி இருக்கீங்க . அது சரி இது உங்கள் கதை தானா ?

Rekha raghavan said...

அருமையான கவிதை.

ரேகா ராகவன்.

ஜீவன்சிவம் said...

கவிதை அருமை

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை

Paleo God said...

ஜன்னல்களை மூடிவைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்தவமிருக்கும்.//

அழகா சொல்லிட்டீங்க ரிஷபன்..:))

கும்மாச்சி said...

நன்றாக இருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

அருமை ரிஷபன்.

கே. பி. ஜனா... said...

முற்றத்துக்கு முற்றும் போட்டுட்டாய்ங்க! ஜன்னலிலும் வலைப் பின்னல் இப்போ!

வசந்தமுல்லை said...

super!!!!!!!!!!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உன்னைக் காதலித்து இழந்த பின்னும்
தேற்றும் முற்றம்!

உணர்வுகளை உணர்த்தும் உன்னத உண்மையான வரிகள்