April 14, 2010

சிரிப்பு


கைதட்டி சிரிக்கிறது

குழந்தை

தடுக்கி

விழுவதை

நான் நடித்துக்

காட்டியபோதெல்லாம்

என் விழுந்த மனதை
அதன் சிரிப்புதான்

தூக்கி நிறுத்துகிறது

அவ்வப்போது !


மழை பெய்து

ஓய்ந்தபின்

பார்த்தேன்

நேற்று

வரையப்பட்டிருந்த

ஓவியம்

கரையாமல்

என் மனதினுள் !

16 comments:

settaikkaran said...

சிரிப்பு கவிதை- பல உண்மைகளை தெரிவித்தது. பாராட்டுக்கள்.

க.பாலாசி said...

அருமையா இருக்குங்க... முதல் கவிதை தூக்கலாவே இருக்கு....

Madumitha said...

குழந்தையின் சிரிப்பு
மிக வலிமையானதுதான்.

நல்ல ஒவியங்களின்
சிறப்பே
என்றும் மனசுக்குள்
ஆடுவதுதான்.

புத்தாண்டு பரிசு
எங்களுக்கு.

Chitra said...

குழந்தையின் குதூகல சிரிப்பு தரும் சந்தோஷத்துடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குழந்தையின் சிரிப்பே குதூகலம் தான்!

கே. பி. ஜனா... said...

சில சமயம் உங்கள் கவிதையும் தூக்கி நிறுத்துகிறது விழுந்த மனதை.

அம்பிகா said...

\\அருமையா இருக்குங்க... முதல் கவிதை தூக்கலாவே இருக்கு....\\
:-))

வசந்தமுல்லை said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இப்போதெல்லாம்
வேப்பம பூ போல் கசப்பதில்லை.....இனிக்கிறது!!
உங்களுடைய கவிதைகளை வாசிப்பதால் !!!!!!
சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

Ahamed irshad said...

கவிதை அருமையா இருக்குங்க.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

முதல் கவிதை முத்து..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ரிஷபன்

vasan said...

கீழே விழுவ‌தை ந‌டித்துக் காட்டும் போது

கைதட்டி சிரிக்கிறது குழந்தை, ஆனால்,

ந‌ட‌க்கும் போது தடிக்கி விழ‌ `வேண்டி`

நிற்கிற‌து நேற்றைய‌ குழ‌ந்தைக‌ள்.

பனித்துளி சங்கர் said...

//////கைதட்டி சிரிக்கிறது
குழந்தை
தடுக்கி
விழுவதை
நான் நடித்துக்
காட்டியபோதெல்லாம்
என் விழுந்த மனதை
அதன் சிரிப்புதான்
தூக்கி நிறுத்துகிறது
அவ்வப்போது !////////


எதார்த்ததின் நிஜம் நிழலாடுகிறது வரிகளில் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஸ்ரீராம். said...

கலையாத ஓவியம்...கரைந்த மனம்

பத்மா said...

இங்கு வந்து வந்து படிச்சுட்டு போறேன் .நெஜம்மா முதல் கவிதைக்கு என்ன எழுதறதுன்னு தெரில்ல .அதனால திரும்ப வந்து படிக்கிறேன் .என்னவோ போங்க

vasu balaji said...

முதல் கவிதை அபாரம். இரண்டாவது அதைவிட கொஞ்சமே கொஞ்சம் தூக்கல்:)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான கவிதை
வாழ்த்துக்கள் நண்பரே