May 07, 2010

வேஷம்


ஒப்பனைகளை மீறி
சுயம் வெளிப்பட்டு
விடுகிறது..
என்ன முயன்றாலும்
மறக்க முடிவதில்லை
சில இழப்புகளை ..
கவலைகளை புறந்தள்ளி
போராடும் குணம்
எல்லோருக்குமா
வாய்த்துவிட்டது?
ஆனாலும்
இப்போதும் தொடர்கிறது
தினசரி ஒப்பனைகளும்
உள்ளே புதைத்திருக்கும்
ஆசாபாசங்களும் ..

17 comments:

பத்மா said...

ஆஹா ரிஷபன் நீங்களும் சுயம் பற்றி .!!!!!
ஆனால் மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்

சில இழப்புகளை .. கவலைகளை புறந்தள்ளி போராடும் குணம் எல்லோருக்குமா வாய்த்துவிட்டது?

??????

அதே தான் நானும் கேட்கிறேன்

நன்று

பனித்துளி சங்கர் said...

மிகவும் அழகான கவிதை நிஜத்தையும் ,ஒப்பனைகளையும் அழகா சொல்லி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Good One... :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்..இழப்புகள் மறக்க முடியாதவை ஆஆ1

vasu balaji said...

ஒன்னாங்க்ளாஸாணு!

Chitra said...

சரியாக சொல்லி இருக்கீங்க... உண்மை.

Unknown said...

அருமையான வரிகள். :)

கே. பி. ஜனா... said...

//சில இழப்புகளை .. //

சில கசப்புகளையும்...
நல்ல கவிதை!

ஹேமா said...

அதானே அழகா சிரிக்கக் கத்துக் குடுத்திருக்கான் கடவுள்.
வெளில ஒண்ணுமே தெரியாம சிரிச்சிடலாம் ரிஷபன்.
கவிதை சொன்ன விஷயம் அருமை.

Thenammai Lakshmanan said...

ஒப்பனைகளும் மறைக்க முடியாத ஆசாபாசங்கள் வெளிப்பட்டு விடுகின்றன ரிஷபன்

அம்பிகா said...

\\என்ன முயன்றாலும்
மறக்க முடிவதில்லை
சில இழப்புகளை .. \\
அருமையா சொல்லியிருக்கீங்க.

கமலேஷ் said...

உண்மைதான்....நல்லா இருக்கு...

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க ரிஷபன்... ஆசாபாசங்களுக்கான ஒப்பனை தேவையோ இல்லையோ...ஆயினும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது....

vasan said...

புலி வேஷ‌ம் போட்டாலும்
பூனை க‌த்துவ‌தென்ன‌வோ
மியாவ்...மியாவ் தானே.
ரிஷ்ப‌னின்,
எழுத்துச் சுருக்க‌ம் க‌விதை
நெஞ்சில் சுருக்..எனில் க‌தை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வேஷம் போடாமல் கோஷம் போட்டுச் சொல்கிறேன் தங்களின் “வேஷம்” மிகப் பொருத்தமாகவே உள்ளது.

சுந்தர்ஜி said...

வேஷங்கள் தரிக்கும்போதே கலையப்போகும் உறுதியும் ஊர்ஜிதம்.இல்லையா ரிஷபன்?

Priya said...

//என்ன முயன்றாலும்
மறக்க முடிவதில்லை
சில இழப்புகளை .. //.....உண்மைதான்!


//தினசரி ஒப்பனைகளும் உள்ளே புதைத்திருக்கும் ஆசாபாசங்களும் ..//...என்ன செய்வது, தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது வேஷங்கள்!