May 03, 2010

நன்றி நன்றி நன்றி !



விளையாட்டாய்த்தான் ஆரம்பித்தேன் ..
இதோ 100 வது பதிவு!
எனது கிறுக்கல்களை ரசித்து என்னை பின் தொடரும் 70 அன்புள்ளங்களுக்கும் மனப்பூர்வமான
நன்றி!
எனது எல்லாப் பதிவுகளையும் படித்து ... பின்னூட்டமிட்ட .. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !
சிலர் வலைத்தளங்களில் என் வலைத்தள முகவரியும் முகப்பில் வைத்திருக்கிறார்கள்.. என்னவென்று சொல்ல .. அந்த ஒற்றை சொல்லை தவிர..
தனக்குக் கிடைத்த பாராட்டை என்னோடும் பகிர்ந்த "பத்மா" அவர்களுக்கு விசேஷ நன்றி.
மிகச் சிறந்த படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். வாசிப்பு ருசியை பரிபூர்ணமாய் அனுபவிக்கிறேன். திகட்டாத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களை கை குலுக்கி மகிழ்ந்த எனக்கு என் எழுத்துத் திறமையும்(!) சற்றே மெருகேற வாய்ப்பு கிட்டியது.
இந்த எழுத்து சாகரத்தில் என்னை முதன் முதலில் அமிழ்த்திய.. எனக்கு ஆலோசனைகள், தெளிவூட்டல்கள் தந்த ரேகா ராகவன், கே.பி.ஜனா ஆகியோரை சொல்லாமல் என் நன்றி பூர்த்தி ஆகாது.

வாழ்க்கை புரிதலுக்கானது

தவறாகவேனும்..

பின்பு சரிபார்த்தல் நிகழக் கூடும்..

தெருவில் காலடி வைக்காமல் எந்தப் பயணமும் பூர்த்தி ஆவதில்லை..

நீரில் கால் நனைக்காமல் நீச்சல் இல்லை..

வறண்ட பூமிக்குள்ளும்

அடி ஆழத்தில் நீரோட்டம் ஓடுகிறது..

மனிதரின் இதயங்களிலும் நேசம்..

ப்ரியம் சொல்லாமல் எதுவும் இல்லை..

எந்தப் படைப்பும் பிரியத்திற்கு பிறகே..

ஈரமற்ற எழுத்தை அக்னியும் நிராகரிக்கும்..

முதலில் கை குலுக்குவோம்..

பிறகு பேசிக் கொள்ளலாம்..

பேதங்களைப் பற்றி..

ஏனென்றால் கை குலுக்கியதும்

நாம் சமமாகி விடுகிறோம்..

எப்போதும் ப்ரியங்களுடன்..



ரிஷபன்.





29 comments:

கமலேஷ் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழரே...வெற்றி பயணத்தை தொடருங்கள்...

ரிஷபன் said...

முதல் வாழ்த்திற்கு நன்றி!

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாழ்த்துகள்!!

கை குலுக்குகிறேன்!!

பத்மா said...

ஆயிரம் ஆக வாழ்த்துக்கள் .

cheena (சீனா) said...

அன்பின் ரிஷபன்

நூறுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்

ஆயிரமாக வாழ்த்துகள்

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வரண்ட பூமிக்குள்லூம் அடி ஆழத்தில் தெளிந்த நீரோட்டம் ஓடுகிறது. மனிதரின் இதயத்தின் ஆழத்திலும் நேசம் உண்டு - தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்த முயலும்.

முதலில் கை குலுக்கலாம் - பிறகு பேசிக் கொள்வோம் பேதங்களைப் பற்றி.

அன்பின் ரிஷபன் - மிகவும் இரசித்த வரிகள் - ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வரிகள் - சொற்கள்

நல்வாழ்த்துகள் ரிஷபன்
நட்புடன் சீனா

மாதவராஜ் said...

அதற்குள்ளா!
வாழ்த்துக்கள் நண்பனே.
நுட்பமான உணர்வுகளை, எளிதாகச் சொல்லும் எழுத்து தங்களுடையது. தொடருங்கள்.....

Chitra said...

100....... Congratulations!
Keep rocking! :-)

Santhini said...

அது ஏன் ஐம்பது, நூறு , ஆயிரம் என எண்கள் நம்மைத் தொடும்போது மட்டும் , கொண்டாடுவதைப் பற்றி யோசிக்கிறோம்?
அதனால் என்ன .......கொண்டாடிவிட்டே போவோம். ஏதேனும் ஒரு காரணம் தான் நமக்கு வேண்டும்.
வாழ்த்துக்கள் ரிஷபன், நிற்காமல், தயங்காமல் ஓடுகிற ஓட்டத்துக்கு. :-))

Paleo God said...

மகிழ்ச்சி!

வாழ்த்துகள் நண்பரே. :))

வெங்கட் நாகராஜ் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தங்களது எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் சார்; தொடர்ந்து பின்னூட்டம் இடா விடினும் தங்களை தொடர்கிறேன் வாசிக்கிறேன்; மேலும் பல ஆயிரம் எழுத வாழ்த்துக்கள்

எல் கே said...

congrats

சுந்தர்ஜி said...

எனக்கும் எண்களில் நாட்டமில்லை ரிஷபன்.இருந்தாலும் எண்களைக் கடந்த வசீகரம் உங்கள் எழுத்து.இறுதி வரை எழுத என் வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

பனித்துளி சங்கர் said...

இன்னும் உங்களின் எழுத்துக்கள் பல இதயங்களில் இடம் பெற என் வாழ்த்துக்கள் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 100 வது பதிவான “நன்றி நன்றி நன்றி” யின் ஒவ்வொரு வார்த்தைகளும் பிரியம், நட்பு, நம்பிக்கை, நல்லெண்ணம் இவற்றை மற்றவர்கள் மனதிலும் விதைக்கும் வண்ணம் சிறப்பாக, மிகவும் கவனமாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். [முதலில் கைகுலுக்குவோம் - எழுதுவதில் என்றும் சமமாக முடியாது என்ற போதிலும் - எழுத்தை ரசிப்பதிலும், பாராட்டுவதிலும், ஊக்கு வித்து உற்சாகப்படுத்துவதிலும் போட்டிபோட்டுக்கொண்டு ரிஷபன் சாரின் ரசிகர் என்பதில் பெருமை கொள்வோம், என்றும் பிரியத்துடன். ]

ஹுஸைனம்மா said...

மனம்நிறைந்த வாழ்த்துக்கள் ரிஷபன் சார்!!

வசந்தமுல்லை said...

அன்பு ரிஷபனுக்கு, நூறாவது வந்ததே தெரியவில்லை!அவ்வளவும் முத்துக்கள் என சொல்லவா, இல்லை வைடூரியம் என சொல்லவா என தெரியவில்லை!!! எல்லாம் கிரேட்!!!!!!!!!!!!!!!!!!!!! ஆயிரத்துக்கு, என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் சகோதரரே.. வசீகரமான உங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள்.

க ரா said...

வாழ்த்துக்கள் ரிஷபன்.

Madumitha said...

வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள்.
காத்திருக்கிறோம்.

கே. பி. ஜனா... said...

இப்பதான் தொடங்கின மாதிரி இருக்கு, அதற்குள் நூறா? வேகமான எழுத்து! விவேகமான கருத்துக்களுடன்! அப்புறம் எப்படி நகர்வது தெரியும்? ஓகே, இப்ப இருநூறுக்கு ரெடியாயிட்டோம்!

'பரிவை' சே.குமார் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழரே...வெற்றி பயணத்தை தொடருங்கள்...

Thenammai Lakshmanan said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரிஷபன்...

ஏனென்றால் கை குலுக்கியதும்

நாம் சமமாகி விடுகிறோம்..//

உண்மை., உண்மை., உண்மை., என்ன சொல்ல ரிஷபன்

நூறு ஆயிரமாகப் பெருக வாழ்த்துக்கள்

Rekha raghavan said...

நூறாவது பதிவுக்கு பாராட்டுகள். நாடு கடந்து இங்கே வந்தாலும் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருக்கும் தோட்டத்தில் உங்களுடன் நானும் அங்கே இருப்பது போலவே உணர்கிறேன்.

//வறண்ட பூமிக்குள்ளும்
அடி ஆழத்தில் நீரோட்டம் ஓடுகிறது..
மனிதரின் இதயங்களிலும் நேசம்.."

எப்பேர்ப்பட்ட வரிகள். படிக்கப் படிக்க திகட்டாத கவிதைகள் உங்களுடையது. மேலும் பல நல்ல கவிதைகளை உங்கள் கைகள் படைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

ஹேமா said...

இன்னும் இன்னும் பலநூறுகள் படைக்க வாழ்த்துகள் ரிஷபன்.

அம்பிகா said...

வாழ்த்துக்கள்,
இன்னும் நிறைய எழுதவும், சாதனை படைக்கவும்...

ஸ்ரீ.... said...

ரிஷபன்,

100 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....