June 13, 2010

உனக்கும் எனக்கும்


எனக்கு பிடித்ததை
எல்லாம் உன்னிடம் சொன்னேன்
உனக்குப் பிடித்ததை எல்லாம்
என்னிடம் சொன்னாய்
நானும் சொல்லவில்லை
நீயும் சொல்லவில்லை
நமக்குப் பிடிக்காததை...
மணமான முப்பதே நாட்களில்
பிடிக்காததை கண்டுபிடிப்பதே
நம் வேலையாகி விட்டது!
உனக்கும் எனக்குமான பிணக்கை
வார்த்தைகளிட்டு நிரப்ப முயன்றேன் என் புத்தியால்
கூடுதலாகிப் போனது இடைவெளி
சின்னதாய் ஒரு முத்தம்
சரி செய்திருக்கும் சுலபமாய் என்று
என் குழந்தை மனசு
கேலி செய்தது அப்போது !



(நன்றி : ஆனந்த விகடன் - இந்த வாரம்)










27 comments:

அன்புடன் நான் said...

அய்யோ அய்யோ... கேலி செய்றவரைக்கும் காத்திருக்கலாமா?

கவிதை அருமை.

தமிழ் மீரான் said...

எளிமையான எதார்த்தமான அர்த்தம் நிறைந்த கவிதை. நன்றி.! அருமை

vasu balaji said...

கொள்ளையழகு. :)

அண்ணாமலை..!! said...

கவிதை..
அழகு..
அருமை..
ரிஷபன்!

பத்மா said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு .கண்ணை உறுத்தா நிறமும் .
அது சரி குழந்தை மனம் சொன்னதை கேட்டீங்க தானே ? :)

vasan said...

புத்திசாலிக‌ளைத் தானே புடிக்கிற‌து,
குழ‌ந்தை ம‌ன‌தை "சைல்டிஸ்" என‌
ம‌ட்ட‌ம் த‌ட்டி விடுகிறார்க‌ளே!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்கள் கவிதை மனதுக்கு ஹிதத்தைத் தந்தது!!

வசந்தமுல்லை said...

கொள்ளை அழகு !
கவிதை வடித்த விதம்
கவிதை கண்டு நான் பூரித்த விதம்!
உம்மைக் கண்டு பெருமிதம் அடைந்தவிதம் !
கவிதைக்கு ஒரு சொட்டு!
உமக்கும் என் மோதிரக்கையால் ஒரு சொட்டு !!

பனித்துளி சங்கர் said...

உண்மையுடன் கூடிய எதார்த்தங்கள் வார்த்தைகளில் .வாழ்த்துக்கள் .

கே. பி. ஜனா... said...

புதிய பேக் ரவுண்டில் இனிய கவிதை!

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள். ரசித்தேன்.

Chitra said...

(நன்றி : ஆனந்த விகடன் - இந்த வாரம்)

.....wow! வாழ்த்துக்கள்! அழகிய கவிதை!

Madumitha said...

வாழ்த்துக்கள்
ரிஷபன்.

குட்டிப்பையா|Kutipaiya said...

சின்ன விஷயங்களில் தான் வாழ்கையின் பெரிய சந்தோஷங்கள் ‍‍
அருமை ரிஷபன்..
வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தம் பொதிந்த கவிதை. பகிர்வுக்கு நன்றி.

VELU.G said...

கவிதை அழகு

வாழ்த்துக்கள்

ஹேமா said...

சின்ன விஷயத்தில முடிக்கிற விஷயத்தை எல்லாம் இப்பிடித்தான் பெரிசாக்கிறோம் !
கவிதை உணர வைக்கிறது.
என்னையும் யோசிக்க வைக்கிறது.

ரிஷபன் தளம்-வண்ணம் அழகு.

கமலேஷ் said...

ஆனந்த விகடன்லேயே படிட்சேன் ரொம்ப நல்லா இருந்திட்சி...வாழ்த்துக்கள் நண்பரே...

கமலேஷ் said...

ஆனந்த விகடன்லேயே படிட்சேன் ரொம்ப நல்லா இருந்திட்சி...வாழ்த்துக்கள் நண்பரே...

ஹுஸைனம்மா said...

//மணமான முப்பதே நாட்களில்
பிடிக்காததை கண்டுபிடிப்பதே
நம் வேலையாகி விட்டது//

இதென்ன ‘முப்பதே நாளில் ஹிந்தி’ மாதிரியா? வாழ்நாள் முழுசும் படிச்சாலும் இந்தக் கண்டுபிடிப்பு முடிவடையாது!!

:-))))

க ரா said...

அழகு ரிஷபன். விகடன்லயே படிச்சுட்டேன் :-).

சுந்தர்ஜி said...

இந்தக் குழந்தை மனசு ரொம்பப் பொல்லாதது ரிஷபன்.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க ரிஷபன்.. விகடனிலும் வாசித்தேன்...வாழ்த்துக்கள்...

விஜய் said...

விகட வாழ்த்துக்கள்

விஜய்

Matangi Mawley said...

அருமை.. மிக எளிமையான, அழகான கவிதை.. ரசித்தேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆக, சின்னதாய் ஒரு முத்தம் இருவருக்குமே பிடித்த ஒரு விஷயம் என்று புரிகிறது.

எனக்குப் பிடித்ததாக கவிதை எழுதியுள்ள உங்கள் விரல்களுக்கு சின்னதாய் ஒரு முத்தம் தரத் தோணுது.

பா.ராஜாராம் said...

ரிஷபன்,

ரெண்டு வாரம் கழித்தே இங்கு விகடன் கிடைக்கிறது. அப்படி, இன்று ரிஷபன் பெயர் பார்த்த போது,"நம்ம ரிஷபனா?" என்றும் கேள்வி.

வந்து, புரட்டி பார்க்கிற போது, 'நம்ம ரிஷபன்தான்' என்கிற சந்தோசம்.

மிக்க சந்தோசம்!