June 18, 2010

மேகம்


ஜன்னல் வழி பார்க்க

வானம் இருட்டிக் கொண்டு

வருகிறது..

எங்கிருந்துதான் கிளம்பியதோ

அத்தனை மேகங்களும்..

என் வீட்டு மாடி தாண்டி

அவை போகும்போது

நின்று கையசைக்கத்தான்

தோன்றுகிறது..

அதன் அன்பும் என் மீது

தூறலாக..

சற்றே பெருமழை எனப்

பொழிந்து

நனைத்து விட்டுப் போகும் பொழுதில்

விலகி விலகிப் போகும்

மேகங்களை

விட்டுப் பிரிய மனமின்றி

அண்ணாந்து பார்த்து

ஏங்குகிறேன் ..

வீடெனும் கூண்டில்

என்னை அடைத்து விட்டு

எத்தனை சுதந்திரமாய்

உலா வருகின்றன

இந்த மேகங்கள் !




19 comments:

Chitra said...

வீடெனும் கூண்டில்

என்னை அடைத்து விட்டு

எத்தனை சுதந்திரமாய்

உலா வருகின்றன

இந்த மேகங்கள் !


...... அருமையான வரிகள்! :-)

பனித்துளி சங்கர் said...

அருமையான எதார்த்தங்கள்

Rekha raghavan said...

//என் வீட்டு மாடி தாண்டி

அவை போகும்போது
நின்று கையசைக்கத்தான்
தோன்றுகிறது..//

அருமையான சிந்தனை. நல்ல கவிதை.

ரேகா ராகவன்.
(now at Los Angeles)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

யதார்த்தம் உங்கள் கவிதையில் ததும்பி வழிகிறது!!

சிவாஜி சங்கர் said...

அருமை நண்பரே..

VELU.G said...

ரசிக்கும்படியான வரிகள் அருமை

vasu balaji said...

/என்னை அடைத்து விட்டு
எத்தனை சுதந்திரமாய்
உலா வருகின்றன
இந்த மேகங்கள் !/

எனக்கும் இந்த வரிகள் பிடித்திருக்கிறது.

ஹேமா said...

எத்தனை சுதந்திரம்.
பொறாமையாய்த்தான்
இருக்கிறது ரிஷபன்.

சாந்தி மாரியப்பன் said...

//வீடெனும் கூண்டில்

என்னை அடைத்து விட்டு

எத்தனை சுதந்திரமாய்

உலா வருகின்றன

இந்த மேகங்கள்//

அருமை..

க ரா said...

அருமை ரிஷபன்.

கே. பி. ஜனா... said...

மேக உலா பிரமாதம்!

அண்ணாமலை..!! said...

ரொம்ப ரசனையான கவிதைங்க!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது என்ன ஸார்? மேகத்தின் மீது உங்களுக்கு ஒரு மோகம்!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

விண்ணைத்தாண்டி வருவாயோ! பாடல் போல உங்கள் கற்பனையும் பரந்து விரிந்த விண்ணையும், மழை தரும் மேகங்களையும் நோக்கி உயர்ந்து சென்று எங்களையும் கவிதை மழைச்சாரலில் நனைத்துவிட்டது. வீடெனும் கூட்டினிலே அடைந்திருந்தாலும், ரிஷபன் சார் என்னும் மேகம், ப்ளாக் என்னும் கவிதை மழைச்சாரல் மூலம் எங்களுக்கு அவ்வப்போது குளிர்ச்சியும் குதூகுலமும்
அளித்து மகிழ்விக்கிறது. பாராட்டுக்கள்.

Madumitha said...

கரு மேகங்கள் திரண்டு வந்து
தலைக்கு மேல் பொழிந்தது போல்
சில்லென்று இருக்கிறது உங்கள்
கவிதையும்.

அம்பிகா said...

\\அதன் அன்பும் என் மீது


தூறலாக..


சற்றே பெருமழை எனப்


பொழிந்து


நனைத்து விட்டுப் போகும்

பொழுதில்\

அசத்தல்.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு ரிசபன்..

வெங்கட் நாகராஜ் said...

மேகங்கள் நம்மை விட்டு வெகு தூரம் செல்லும்போது மனதில் தோன்றும் ஏக்கத்தை மிக அழகாக கவிதையாக்கி இருக்கீங்க சார். அற்புதம். சுதந்திரமாய் உலா வரும் மேகங்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருப்பது நிஜம்.

Santhini said...

Very cute.