October 01, 2010

இருப்பிடம்


வீடு ஒரு அடையாளமா அல்லது
மறைவிடமா..
வெளியே அல்லது உள்ளே
பூட்டிக் கிடப்பதுதான்
வீட்டின் லட்சணமா ..
திறந்திருக்கும் வீடுகளை
காண அரிதாய்..
வாசல் திண்ணை தொலைத்த
வீடுகளின் தெருவாய்..
தொலை பேசியிலேயே
காலம் கழித்து ..
பூட்டுக்களுக்காகவே
வாழும் மனிதராகிப் போனோம் ..
அவ்வப்போது தொலைக்கிற
சாவிகளால் புலனாகிறது
திறந்திருக்கும் வீடுகளும்
உள்ளிருக்கும் மனிதர்களும்.

13 comments:

Rekha raghavan said...

//தொலை பேசியிலேயே
காலம் கழித்து ..
பூட்டுக்களுக்காகவே
வாழும் மனிதராகிப் போனோம்//

யதார்த்தம். கவிதை அருமை.

ரேகா ராகவன்.

க.பாலாசி said...

எல்லாமே தொலைஞ்சிப்போச்சுங்க ரிஷபன்.. எங்கப்போயி தேடுறது..

நல்ல கவிதை..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்..எல்லாமே தொலைந்து போய் விட்டது? நமக்கு தேடுவதற்கும் நேரமில்லை..தேடினாலும் கிடைக்காது...

பத்மநாபன் said...

///வாசல் திண்ணை தொலைத்த
வீடுகளின் தெருவாய்..///
வரிகளின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்....

கட்டிடங்கள் வீடாக மாறாமலே இருக்கிறது ...

எப்பொழுது இனிய இல்லமாகி,லயமிகு ஆலயமாக மாறுமோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான வரிகள். காரைக்குடியிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களிலும் (நகரத்தார் வீடுகள்) + காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பக்கமுள்ள ஒரு சில பகுதிகளிலும், பெரிய பெரிய வீடுகள், மிகப்பெரிய திண்ணைகளும், தலைப்பகுதிக்கு சாய்வாக திண்டுபோல கற்களால் ஆன தலையணி அமைப்புக்களும் இன்றும் உள்ளன. வழிப்போக்கர்களும், ஊர் விட்டு ஊர் நடை பயணமாகவே அந்த நாட்களில் செல்ல வேண்டியிருந்த யாத்திரிகர்களுக்கும் ஓய்வெடுக்க வசதியாக இவை கட்டப்பட்டிருக்கும். பரந்த மனப்பான்மையுடனும், பொது நல நோக்குடனும் வாழ்ந்த மக்கள் இருந்ததற்கான சான்றாக இன்றும் அவை உள்ளன. இன்று திண்ணையுடன் வீடு கட்டினால், நிரந்தரமாக சிலர் அதில் படுத்து, உரிமை கொண்டாடி விடக்கூடும் என்பதால் யாரும் அது போல கட்டுவதில்லையோ என்னவோ?

virutcham said...

கவிதை நல்லா இருக்கு

வசந்தமுல்லை said...

நாம் இரண்டுக் கண்ணால்
காண்பது அல்லாது
மூன்றாவது கண்ணிலும்
காண்கிறோம்
ஞான கண்ணா?
இல்லை! இல்லை !
மொபைல் கண்ணால் மட்டுமே!!!!!

தக்குடு said...

எங்க ஊர்ல(கல்லிடை) எல்லா வீட்டுக்கு முன்னாடியும் ஒரு பெரிய திண்ணை உண்டு. ஊருக்கு போய் ஒரு மாசம் திண்ணைல ஆசை தீர ஒக்காந்து அரட்டை அடிச்சுட்டு வந்தாச்சு...:))

கமலேஷ் said...

உண்மைதான் பூட்டும் சாவியும் மனிதரை பூட்டின.

rvelkannan said...

நல்ல இருக்கு ரிஷபன்

கே. பி. ஜனா... said...

வீடும் ஒரு கவிதைக் கூடு உங்கள் பேனாவில்...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.. ... தொலைபேசியில் நாம் தொலைப்பது ஏராளம்....

ஹ ர ணி said...

என் மனசுள் இருக்கும் பல வீடுகளை நினைவுபடுத்திவிட்டது இந்தக் கவிதை. அருமை. அசைபோடுகிறேன் என்னுள் இருக்கும் வீடுகளின் நினைவுகளை...