October 22, 2010

வானம் பார்த்து..

தகர்த்தெறிய எப்போதும்
சில தடைகள்..
உடைத்தெறிய அவ்வப்போது
சில பழக்கங்கள் ..
கைவசம் கொஞ்சம் புன்னகைகள்
ஆளற்ற தனிமையிலும்
உதட்டில்
அணிந்து கொள்ள ..
நினைத்துப் பார்க்க
நட்பு வட்டம்..
நிழலாய் கூடவே
சின்ன சின்ன கவலைகள் ..
எனக்கான பாதையில்
இடறாமல் பயணிக்கும் போது
அடி மனசில் ஒரு தவிப்பு..
'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '
கை உயர்த்தி
விண்ணைப் பார்க்க
கீழே விழுகிறது
ஒரு நட்சத்திரம்.

25 comments:

Rekha raghavan said...

//'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '
கை உயர்த்தி
விண்ணைப் பார்க்க
கீழே விழுகிறது
ஒரு நட்சத்திரம்.//

எல்லோருக்கும் வருமா இந்த எண்ணம்? அருமை சார்.அனுபவித்து ரசித்தேன் கவிதை வரிகளை.

ரேகா ராகவன்.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பெருந்தன்மை எல்லோருக்கும் வருவதில்லை! வணங்குகிறேன்.

vasu balaji said...

ஹ்ம்ம்ம். கிடைச்சா சொர்க்கம்:). அருமை சார்.

Anonymous said...

உங்க மனசு பிடிச்சிருக்கு

அன்பரசன் said...

////'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா ..//

நச் கவிதை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கைவசம் கொஞ்சம் புன்னகைகள்
ஆளற்ற தனிமையிலும்
உதட்டில்
அணிந்து கொள்ள ..
நினைத்துப் பார்க்க
நட்பு வட்டம்..//

ஆஹா !! மிகவும் ரசித்தேன்.

//இந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் எல்லோருக்கும் தா//

என்று நினைக்கும் அருமையான சிந்தனைகள், தங்களுக்கு!

தங்களின் உயர்வுக்கான உண்மைக் காரணங்கள் பளிச்செனப் புரிந்தது எனக்கு இப்போது. நன்றியுடன், vgk

மதுரை சரவணன் said...

'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '//

naala sinthanai. vaalththukkal.

மோகன்ஜி said...

நல்ல கவிஞனின் பெருந்தன்மை உங்கள் வரிகளில் மின்னுகிறது ரிஷபன்!

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

பத்மா said...

நன்றி ரிஷபன் சார் நட்பு என்ற வகையில் அந்த பிரார்த்தனை எனக்கும் தானே ..
பிறர்க்காக வேண்டும் மனது ..great

Anonymous said...

நல்லாயிருக்கு ரிஷபன் :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பிறருக்காய்ப் ப்ரார்த்திக்கும் இந்த நக்ஷத்திரத்தைப் பார்க்கத் தரையிறங்கிற்றோ வான் நக்ஷத்திரம்? நல்ல மனம் வாழ்க....நாடு போற்ற வாழ்க.

vasan said...

இந்த‌ ம‌ன‌சு இருக்கிற‌தால‌தான், எல்லார் ம‌ன‌சுக்கும் பிடிச்ச‌ எழுத்து உங்க‌ளுடைய‌த‌ இருக்கு.
சுந்த‌ர்ஜி சொன்ன‌து போல், இரு "நட்ச‌த்திர‌ ச‌ந்திப்பு".‌

நிலாமகள் said...

தனிமையிலும் புன்னகை அணிந்திருக்க வரம் பெற்ற நீங்கள், உங்களுக்கான பாதையில் இடறாமல் பயணிக்க அருள் புரிவாய் எம் இறையே!

ADHI VENKAT said...

உங்கள் உயர்ந்த சிந்தனைகளுக்கு, உயர்ந்த மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

நல்லாருக்கு! எல்லாருக்கும் வேண்டும் இது போலவே...

Matangi Mawley said...

nalla praarthanai.. azhagaagavum irukkirathu..

பத்மநாபன் said...

இந்த பட்டியலில் உச்சம்...அனைவர்க்குமாய் மகிழ்ச்சியும் நிம்மதியும் கேட்கும் தருணம்

Thanglish Payan said...

Superb Kavithai.

Thara ketpathu mattum kaviyin velai illai.
Tharuvathum kaviye....

thiyaa said...

nice poem

Priya said...

மிக அருமையான வரிகள்....வாழ்த்துக்கள்!

தக்குடு said...

//'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '
கை உயர்த்தி
விண்ணைப் பார்க்க
கீழே விழுகிறது
ஒரு நட்சத்திரம்//

மஹோன்னதமான எண்ணம். வாழ்க உங்கள் எண்ணம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லாவே இருக்கு!!!

Aathira mullai said...

//'இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும்
எல்லோருக்கும் தா .. '
கை உயர்த்தி
விண்ணைப் பார்க்க
கீழே விழுகிறது
ஒரு நட்சத்திரம்.//

கணியனின் கொள்ளுப்பேரர் தாங்களாக இருக்க வேண்டும். இதுவல்லவோ உண்மைக் கவிஞனின் மனம். அருமை.

Chitra said...

அருமைங்க.... !