July 18, 2011

ரெஜினா ப்ரெட்






ரெஜினா ப்ரெட் - 90 வயசு - எப்பவோ எழுதின 45 புத்திக் கொள்முதல்களை மறுபடி சொல்லியிருக்காங்க.
எனக்குப் பிடிச்சிருந்தது..படிக்க!

1. வாழ்க்கைல அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்ல இல்ல. ஆனாலும் வாழறதுக்கு நல்லாத்தான் இருக்கு.
2. இதுவா அதுவான்னு குழப்பத்துல இருக்கறப்ப.. சின்ன ரிஸ்க்கா தோணற ஒரு முடிவை எடுங்க..
3. ரொம்ப குட்டியான வாழ்க்கை.. இதுல வெறுப்புல நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
4. உங்களுக்கு முடியாம போகறப்ப உங்க வேலை ஹெல்ப் பண்ணாது.. நட்பும் சுற்றமும்தான். எப்பவும் அவங்க தொடர்புலயே இருங்க
5. கிரடிட் கார்ட் அப்பப்ப செட்டில் பண்ணிருங்க
6. எப்பவும் ஜெயிக்க முயற்சிக்க வேணாம்.. 'ஒரு வேளை நீங்க சொல்றாப்லயும் இருக்கலாம்' அப்பிடினு விட்டுக் கொடுங்க
7. தனியா போய் அழறதை விட, பெட்டர் யார்கிட்டயாவது சொல்லி அழறது மேல். துக்கம் ஆறும்.
8. கட்டாயமா கடவுள்கிட்ட கோவிச்சுக்குங்க. அவருக்கு அதுல ஒண்ணும் பிரச்னையே இல்ல
9. முதல் சம்பளத்துலயே ஓய்வுக்கு சேமிக்க ஆரம்பிச்சிருங்க
10. சாக்லேட்ட பார்த்தா 'வேணாம்' மழுப்பாதீங்க. அதாவது பிடிச்சதை சாப்பிடுங்க.
11. கடந்த காலத்தோட அமைதியா கைகுலுக்குங்க. அப்பதான் அது நிகழ்காலத்தை நாசம் பண்ணாது.
12. நீங்க அழறதை உங்க புள்ளைங்க தாராளமா பார்க்கலாம். தப்பில்ல. மறைச்சுக்க வேணாம்
13. அடுத்தவனோட உங்க வாழ்க்கைய ஒப்பிடாதீங்க.. அவனோட 'நாளை' என்னன்னு இப்ப உங்களுக்குத் தெரியாது
14. ஏதாச்சும் ஒரு உறவை ரகசியமா பண்ணனும்னா.. அதைப் பண்ணவே வேண்டாம்.
15. கண் சிமிட்டற நேரத்துல எல்லாம் மாறிப் போயிடும். கவலைப்படாதீங்க. கடவுள் கண் சிமிட்டுவதே இல்லை!
16. ஆழ்ந்த மூச்சு விடுங்க. அமைதி தன்னால வரும்.
17. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சி தராத எதுவா இருந்தாலும் தூக்கி எறிங்க.
18. உங்களுக்கு சாவைத் தராத எதுவும் பலத்தைத் தான் தரும். துணிஞ்சு எடுத்துக்குங்க..


மீதி அடுத்த பதிவுல..


15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பயனுள்ள அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லாத் தான் இருக்கு..அந்த அஞ்சும்,பதினாலும் தான் கொஞ்சம் இடிக்குது..!!

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள உரைகள். அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

ஷர்புதீன் said...

அறிவுரை???!

மனோ சாமிநாதன் said...

அனைத்துமே பயனுள்ள கருத்துக்கள்தான் என்றாலும், 11, 17 இரன்டும் அருமை!

ஹேமா said...

எல்லாமே வாழ்வியலோடு பொருந்தி வருது !

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே நல்லாருக்குது...

நிலாமகள் said...

அட‌... ந‌ல்லாயிருக்கு சார்... ப‌டிக்க‌. நினைவில் வெச்சுக்க‌லாம்...

இராஜராஜேஸ்வரி said...

புத்திகொள்முத்ல் பயனுள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உபயோகமான பதிவு, நன்றி

சிவகுமாரன் said...

அத்தனையும் அருமை. மிகவும் பயனுள்ளவை.

arasan said...

வாழ்வியலோடு ஒன்றி போகும் கருத்துக்கள்

ஹ ர ணி said...

Excellent.Excellent. Excellent.

Simple. useful. fruitful for fruitful life. Harani. Thank you rishaban.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பயனுள்ள அறிவுரைகள்... பகிர்வுக்கு நன்றி...!

RVS said...

ரெஜினா ப்ரெட்-டின் ஜாம் தடவிய அறிவுரைகள் சூப்பர். :-)