July 31, 2011

காலம்


ஒரு மரணக் கிணற்றில்
தள்ளி விட்டு
வேடிக்கை பார்க்கிறது
காலம்..
கை தூக்கி விடும்
ஒரு கவிதையை
எதிர் நோக்கி
அதன் விளிம்பில்
என் விரல்கள்!


ஒவ்வொரு இரவிலும்
வந்து
எல்லாக் கனவுகளுக்கும்
வர்ணம் பூசிப் போகிறான்
அவன்..
கொண்டு செல்லும்
காலி டப்பாக்களில்
நிரம்பி இருக்கிறது
இன்னொரு நாளுக்கான
நம்பிக்கைகள்..
வெண்ணிறம் அப்பிக் கொண்டு!



16 comments:

கவி அழகன் said...

நிசமா கலக்கலா இருக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கொண்டு செல்லும்
காலி டப்பாக்களில்
நிரம்பி இருக்கிறது
இன்னொரு நாளுக்கான
நம்பிக்கைகள்.//

வெண்ணிறம் பூசிக்கொண்டுள்ள தூய்மையான நம்பிக்கைகள்.

ஹேமா said...

நம்பிக்கையோடு காத்திருப்பதால்தான் காலத்தோடு ஓட முடிகிறது.
இல்லையேல் சோர்ந்து படுத்துவிடுவோம்.காலம் தன்பாட்டில்...!

நிரூபன் said...

வணக்கம் சகோ, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே, சீரழிகின்ற நிலமையினை, நம்பிக்கையோடு அடுத்த நாளில் திருந்தி விடுவேன் என்று இருக்கின்ற குடிகாரனின் உணர்வினை உங்கள் பதிவு சொல்லி நிற்கிறது.

ராமலக்ஷ்மி said...

/இன்னொரு நாளுக்கானநம்பிக்கைகள்./

இதுதானே வாழ்க்கை. மிக நன்று.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காலம் தான் நம்மை என்னமாய் நடத்திச் செல்கிறது?

நிலாமகள் said...

கொண்டு செல்லும்
காலி டப்பாக்களில்
நிரம்பி இருக்கிறது
இன்னொரு நாளுக்கான
நம்பிக்கைகள்.//

வ‌ள‌ரும் வாழ்விற்கான‌ உர‌மாய்...!

vasu balaji said...

Class.

இராஜராஜேஸ்வரி said...

கொண்டு செல்லும்
காலி டப்பாக்களில்
நிரம்பி இருக்கிறது
இன்னொரு நாளுக்கான
நம்பிக்கைகள்..
வெண்ணிறம் அப்பிக் கொண்டு!//

எங்கள் பாராட்டுக்களும் நிரம்பி இருக்கிறதே.

Chitra said...

அருமையான கவிதை. super!

கிருஷ்ணப்ரியா said...

"கை தூக்கி விடும்
ஒரு கவிதையை
எதிர் நோக்கி
அதன் விளிம்பில்
என் விரல்கள்!"

மனசொடிந்து போகிற எத்தனையோ தருணங்களில் காயத்துக்கு மருந்தாய் இருப்பதும் கவிதை தான், மனசு மகிழ்வால் துள்ளும் போது சேர்ந்து குதியாட்டம் போடுவதும் கவிதை தான்..... அசத்தலான வரிகள் ரிஷபன். மிகவும் ரசித்தேன்........

Anonymous said...

நம்பிக்கைதானே வாழ்க்கை.. வாழ்த்துக்கள் நண்பரே!

vetha (kovaikkavi) said...

''...கை தூக்கி விடும்
ஒரு கவிதையை
எதிர் நோக்கி
அதன் விளிம்பில்
என் விரல்கள்!..''...இந்த எதிர்பார்ப்பில் தானே வாழ்க்கையும்.....
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

கதம்ப உணர்வுகள் said...

காலத்தின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஆனால் நாம் நம்பிக்கையின் விரல் பற்றி நாட்களை நகர்த்துவோம்னு அருமையாக சொன்ன வரிகள் தந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் ரிஷபன்....சிறப்பான வரிகள்....

ADHI VENKAT said...

நல்ல கவிதை.

vidivelli said...

/ஒரு மரணக் கிணற்றில்
தள்ளி விட்டு
வேடிக்கை பார்க்கிறது
காலம்..
கை தூக்கி விடும்
ஒரு கவிதையை
எதிர் நோக்கி
அதன் விளிம்பில்
என் விரல்கள்!/

ஆகா அருமையான படம்..
கவிதையோ அருமையிலும் அருமை..
மனித வாழ்க்கையினை நகர்த்தும் காலம் அங்க இங்கயெல்லாம் கொண்டுபோகும் ,,
நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

நல்ல கவிதைக்கு அன்புடன் பாராட்டுக்கள்,,,