மூன்றாவது காலாண்டு கணக்கு முடிப்பு.. தணிக்கை.. தாமதமாய் வீடு திரும்பல்.. நாள் குழப்பம்.. கிழமை குழப்பம்..
எல்லாம் முடிந்து ஹாய்யாய் கனுப் பண்டிகை கொண்டாட கிராமத்துக்குப் போனோம்.
அன்று கோவிலில் எங்கள் முறை.
பட்டுக்கோட்டை.. மதுக்கூர் தாண்டி அந்த கிராமம். காரப்பங்காடு!
எட்டரை மணிக்கே போயாச்சு. இன்னும் நாகரிக பாதிப்புக்கு உள்ளாகாமல்.. அமைதிப் பூங்கா.
பாதிரி மரம் ஸ்தல விருட்சம். அதில் ஓர் அதிசயம்.. வெகு நாட்களாய் இருக்கிற நெடிதுயர்ந்த மரம் அப்படியே பலகை போல மாறிப் போக.. புதிதாய் ஒன்று வைத்தார்கள்.
அது நடந்து பல ஆண்டுகள் ஆச்சு. இப்போதோ புதிதாய் வைத்ததும் பெரிய மரமாகி நிற்க.. பழசும் இன்னும் துளிர்த்துக் கொண்டு அப்படியே உயிரோடு..
பெருந்தேவித் தாயார். திருமஞ்சனம் கண்டருளி.. பல்லக்கில் புறப்பாடு.. கனு வைத்த அழகுக் காட்சி..
பிரசாதங்கள் தான் உணவு.. மிளகு தூக்கலாய் வெண்பொங்கல்.. சர்க்கரைப் பொங்கல்.. எண்ணைப்பழையது (சாதம் வடித்து நல்லெண்ணை, எலுமிச்சம் சாறு, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வைப்பார்கள். இந்தப் பக்கம் மட்டுமே இது பேமஸ்)
ஒரு நாள் மிக உற்சாகமாய் பொழுதைக் கழித்து விட்டு திரும்பும்போது மன்னார்குடி வழியே..
கோபிநாதப் பெருமாள் கோவிலில் (அப்படிக் கேட்டால் உள்ளூர்காரர்கள் முழிப்பார்கள். இந்த தடவையும் அதே கதைதான். அப்புறம் கோணப்பெருமா கோவில் என்றதும் மலர்ச்சியாய் ‘இதா.. இப்படிப் போங்க’ என்று வழி காட்டினார்கள்)
அங்கே தன்னந்தனியே ஸ்ரீவித்யா ராஜகோபாலன்..
ஒற்றை வஸ்திரத்தை அவர் சுற்றிக் கொண்டு நிற்கும் அழகைக் கண்டாலே மனசு கொள்ளை போகும்.
உங்களுக்காக.. இதோ..
ஹப்பாடி.. மனசு எவ்வளவு லேசாச்சு..
இன்று மீண்டும் அலுவலகம் போகும்போது பழைய படபடப்பு இல்லை..
22 comments:
ஆஹா அற்புத தரிசனம்! நன்றி! பயண விவரமும் பளிச்!
சார் நீங்களும் என்னை மாதிரி தஞ்சை மாவட்டமா? மகிழ்ச்சி
தமிழ் மணம் & இன்ட்லியில் இணைத்து விட்டேன்
மன்னார்குடி பெருமாளை இங்கிருந்தே தரிசிக்கும் பாக்கியத்தை அளித்த ஸ்ரீரங்கம் சீனிவாசனுக்கு(பெருமாள்) நன்றி.
ஒற்றை வஸ்திரத்தை அவர் சுற்றிக் கொண்டு நிற்கும் அழகைக் கண்டாலே மனசு கொள்ளை போகும்.//
ஆம், மனசு கொள்ளைதான் போகிறது.
ஆரவாரம் இல்லாத சொந்த ஊருக்கு போய் வந்த பின் மனம் லேசாக ஆகிவிட்டதா?
அந்த ஊரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது.
ஸ்ரீ வித்யா ராஜகோபால தரிஸனம் உங்களால் எங்களுக்கும் இன்று கிடைத்தது, மகிழ்ச்சி.
//பெருந்தேவித் தாயார். திருமஞ்சனம் கண்டருளி.. பல்லக்கில் புறப்பாடு.. கனு வைத்த அழகுக் காட்சி..//
கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது அருமை.
//பிரசாதங்கள் தான் உணவு.. மிளகு தூக்கலாய் வெண்பொங்கல்.. சர்க்கரைப் பொங்கல்.. எண்ணைப்பழையது (சாதம் வடித்து நல்லெண்ணை, எலுமிச்சம் சாறு, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வைப்பார்கள். இந்தப் பக்கம் மட்டுமே இது பேமஸ்)//
என் நாக்கில் இப்போது நீர் நிறைந்து விட்டது. ஆஹா! வர்ணிப்பு மிகவும் ஜோர் ஜோர்!
//மூன்றாவது காலாண்டு கணக்கு முடிப்பு.. தணிக்கை.. தாமதமாய் வீடு திரும்பல்.. நாள் குழப்பம்.. கிழமை குழப்பம்..//
இது நமக்கே பிரத்யேகமான, அடிக்கடி நடைபெறும், ஓயாத குழப்பங்கள் தான். பலமுறை நானும் அனுபவித்துள்ளேன்.
//ஹப்பாடி.. மனசு எவ்வளவு லேசாச்சு..
இன்று மீண்டும் அலுவலகம் போகும்போது பழைய படபடப்பு இல்லை.. //
சரியாகச் சொன்னீர்கள். நம்மை நாமே REFRESH செய்து கொள்ள இதுபோன்ற மனதுக்குப்பிடித்தமான பயணங்கள் மிகமிகத்தேவையே.
நல்லதொரு அனுபவப்பகிர்வுக்கு
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
படிக்க மனதுக்கு இதமாக இருந்து.எண்ணெய் பழையது சாப்பிட்ட அனுபவம் உண்டு.காரப்பங்காடு என்று கிராமத்தின் பெயரை குறிப்பிட்டீர்களே. தாங்கள் யாரென்று எனக்கு எழுதவும்.
kpartha12@gmail.com
அலுவலக படபடப்பைக் குறைக்க இப்படி ஏதாவது தான் சார்ஜ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறஊ..அந்த ஸ்வாமி படம் அருமை..உம்ம நடையும் தான்!
ரிஷபன் ஸார்.. உங்களின் எழுத்து நடையில் ஆலயம் சென்ற அனுபவமும், ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் படமும் மிக ரசிக்க வைத்தன. என்ன காரணத்தால் கோபிநாதப் பெருமாள் ‘கோணப் பெருமாள்’ ஆனார்? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கு. சொல்லுங்களேன், ப்ளீஸ்!
உங்களால ராஜகோபாலனை சேவிச்சாச்சு.
நல்ல பயண அனுபவம்.
ஸ்வாமி அழகு. உங்கள் எழுத்தைப் போலவே:)
ஆஹா... அற்புதம். நானும் மன்னை போய்வந்தாற்போலொரு பரவசம். (மன்னார்குடி என் அம்மாச்சி ஊராக்கும்)
நகரப் படபடப்பு அடங்க அல்லது அடக்க இது போன்ற கிராமப் படையெடுப்பு அவசியமாகிறது. அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது.
எங்களைப் போன்ற வெளிநாட்டு வாசிகளுக்கு அப்பயணங்களைப் பற்றிய வாசிப்பே மனநிறைவைத் தருகிறது. மிகுந்த நன்றியும் பாராட்டும் ரிஷபன் சார்.
எங்களுக்கும் சுவாமியின் அருமையான தரிசனம் கிடைத்தது.......தங்களின் எழுத்து நடையாலும், படத்தின் மூலமாகவும்....
பகிர்வுக்கு நன்றி சார்.
அப்படி ஓர் ஊர் எனக்கு வாய்க்கவில்லை ரிஷபன்.
என்ன காரணத்தால் கோபிநாதப் பெருமாள் ‘கோணப் பெருமாள்’ ஆனார்?
கணேஷ்.. கிருஷ்ணனே திரிபங்கி.. மூன்று நிலையில் வளைந்த கோலம். கோணலாய் நிற்பதால் கோணப் பெருமாள்..
அல்லது வாயில நுழையாம கோபிநாதப் பெருமாள் கோணப் பெருமாள் ஆயிட்டார் போல.
எங்களவரை உங்களால் தரிசித்தேன்
நன்றி மிக்க நன்றி.
மனதை கொள்ளை கொள்ளும் பெருமாள்! எழுதினவிதம் வழக்கம்போல ரி டச்! அதென்னவோ தஞ்சை மாவட்டக்காரங்களுக்கே ஒரு தனி ‘இது;தான்!!!(என் புகுந்தவீடு தஞ்சை!))
ஆஹா.. எங்க ஊர் கோபாலன் தரிசனம்!! அற்புதம்...
ரொம்ப நாளா உங்களைக் காணோமே சார்! என்னாச்சு? :-)
அருமையான தரிசனம்..
உப்பெண்ணை சாதம் எங்களுக்கும் தெரியுமாக்கும்
Post a Comment