March 16, 2012

உயிர்ப் பறவை




தாகத்திற்கு நீர்


அகன்ற வாளியில்


மொட்டை மாடியில்


வைத்து


திரும்பிப் பார்த்தபோது


வாளியின் விளிம்பில்


அமர்ந்திருந்தது


என் உயிர்ப் பறவை !








12 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Kavithai super

வை.கோபாலகிருஷ்ணன் said...

உயிருள்ள கவிதை. பாராட்டுக்கள்.

CS. Mohan Kumar said...

நல்லாருக்கு.

இந்த முறை ஒரு கவிதை மட்டும் தானா

கே. பி. ஜனா... said...

உயிர்த் (தி)யாகம்!

G.M Balasubramaniam said...

அவரவர் உயிர்ப் பறவையை அவரவர் காண முடிந்தால், எத்தனையோ கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். கவிதையில் மறைந்த பொருள் இருந்தால் இவனுக்குப் புரியவில்லை.

ADHI VENKAT said...

அழகான கவிதை.

கீதமஞ்சரி said...

உயிர்ப்பறவையினை சற்று நேரம் அதில் உல்லாசமாய் நீந்திக்களித்தும், முங்கி நனைத்தும், சிறகுதறி நீர்தெளித்தும் விளையாட அனுமதித்து வாருங்கள். புத்துணர்வுடன் வந்து கூடடைந்துவிடும்.

அழகான மனம் தொட்ட கவிதை ரிஷபன் சார்.

arasan said...

எனக்கு கவிதையின் கரு விளங்கவில்லை ,.
சார் .. நேரம் இருப்பின் கொஞ்சம் விளக்குக ..

பால கணேஷ் said...

உயிர்ப் பறவை மனதையும் கவர்ந்தது. நன்று.

ஷைலஜா said...

கவிதையின் உட்பொருளை மனசில் பதித்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். சுமாராகத்தான் இப்போது புரிகிறது மறுபடி வரேன் ரிஷபன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை....

Unknown said...

என் உயிர்ப்பறவை _ என்னுயிர்ப்பறவையானது ரிஷபன் ஜி.
அழகான கவிதை!