March 19, 2012

கன்னுக்குட்டி




அலுவலக வளாகத்தின் முன் அவ்வப்போது மாடுகள் கூட்டமாய் போவதை பார்ப்போம் .


'புது ஸ்டாப் போல இருக்கு ' என்று மொக்கையுடன்.


கட்டிடங்கள்.. நடு நடுவே மரங்கள் புதர்கள் .. இப்படித்தான் எங்கள் அலுவலகம்.


யார் கவனித்தார்களோ ..


பிறந்து ஓரிரு நாட்களே ஆன கன்றுக் குட்டி..


விட்டுவிட்டு போய் விட்ட தாய்ப் பசு...


'தலைச்சன் கிடேரி.. அதான் விட்டுட்டு போயிருச்சு'


'அப்படின்னா'


'மொதக் கன்னு .. கிராமத்துல என்ன செய்வாங்கன்னா பசு குட்டி ரெண்டையும் ஒரே கொட்டில்ல வச்சு அடைச்சிருவாங்க.. மொதல்ல மிரண்டாலும் அப்புறம் குட்டியை சேர்த்துக்கும்.. பால் ஊட்ட ஆரம்பிச்சிரும்.. இந்த மாதிரி தெரு மாடுங்க இப்படித்தான் குட்டியை போட்டுட்டு போயிரும்..'


கால்கள் பிடிமானம் இல்லாமல் தள்ளாட்டமாய் நின்றது.


ஜக்கில் நீர் கொண்டு வந்து மெதுவாய் ஊற்றியதும் விழுங்கியது. மேலே தண்ணீர் தெளித்ததும் மூத்திரம் பெய்தது.


அதை தூக்கி வந்தவர் முகத்தில் நிம்மதி.


'எங்க வீட்டுக்கு கொண்டு போறேன்.. மாடு வச்சிருக்கேன்.. அதுவும் இப்பதான் குட்டி ஈனுச்சு.. இதுவும் அது கிட்ட பால் குடிக்கட்டும்.. '


மிக சுலபமாய் தத்து !




23 comments:

CS. Mohan Kumar said...

நல்லது செய்தார் உங்கள் நண்பர் !!

சாந்தி மாரியப்பன் said...

தத்துப்பிள்ளை நல்லாயிருக்கட்டும்..

கே. பி. ஜனா... said...

மிக மென்மையாக ஒரு பதிவு!

இராஜராஜேஸ்வரி said...

மிக சுலபமாய் தத்து !

G.M Balasubramaniam said...

அவ்வளவு சுலபமா தத்து.? யாராவது உரிமை கொண்டாடி வரப் போகிறார்கள்
நெகிழ்ச்சியான செய்கை. .

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா!

”கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி”

என்று சொல்லி சுலபமாகத் தத்து எடுத்துச் சென்றவருக்கு என் நன்றிகள்.

அருமையான சுவையான பதிவு.

சுகமான உணர்வுகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

arasan said...

இனிமை செய்தி ..
எவ்வளவு எளிதில் தத்து ..
உணமைதான் .. பகிர்வுக்கு என் வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

நல்ல ஒரு இடத்துக்கு தான் சென்றது.

தன்னுடைய குட்டியை பார்த்து தாய் மிரண்டு போகுமா!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேலை செய்திருக்கிறார் உங்கள் நண்பர்....

கோமதி அரசு said...

'எங்க வீட்டுக்கு கொண்டு போறேன்.. மாடு வச்சிருக்கேன்.. அதுவும் இப்பதான் குட்டி ஈனுச்சு.. இதுவும் அது கிட்ட பால் குடிக்கட்டும்.. '


மிக சுலபமாய் தத்து !//

இப்படியும் நல்ல மனிதர்கள்!

கீதமஞ்சரி said...

நிறைய யோசிக்கவைத்த நிகழ்வு. சுலபத் தத்து, கிடாவாயிருந்தால் எடுபட்டிருக்குமா? கிடேரி என்பதால்தானா? அதுவே பெண்சிசு என்றால்? இப்போதுதான் என் மனைவிக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தக் குழந்தையும் அவளிடம் பால் குடிக்கட்டும் என்று எந்தக் குப்பைத்தொட்டிக் குழந்தையையாவது எவர் உத்தரவோ அனுமதியோ எதிர்பாராது எடுத்துச் செல்வோர் நம்மில் எவரேனும் உண்டா?

எதுவும் சொல்லாமலேயே என்னென்னவோ எண்ணச் செய்துவிடுகிறீர்கள்.

ஷைலஜா said...

பெரிய விஷயத்தை மிக சுலபமாய் மனதில் பதிகிறமாதிரி எழுத உங்களால்தான் முடியும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

REALLY FANTASTIC!!

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி அவர்களைப் போலத்தான்
எனக்கும் எண்ணம் விரிந்தது
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

...αηαη∂.... said...

ரொம்ப நல்ல விஷயம் .. குட் :)

அப்பாதுரை said...

இலவச நெகிழ்ச்சி

மோகன்ஜி said...

ஈரமான மனங்கள் தான் உலகைத் தாங்குகின்றன. உங்கள் விவரிப்பில் சம்பவம் கண்முன் விரியும் அழகு.

ஸாதிகா said...

பெரிய விச்டயம்.சிறிய இடுகை.நன்று!

Matangi Mawley said...

ஹா! கன்னுக்குட்டி கண் முன்னாடி நிக்கறது!
Beautiful!

மனோ சாமிநாதன் said...

அந்த மனிதரின் ஈரமும் கருணையும் அவ்வப்போது வந்து பெய்யும் மழைத்தூறல் போல் மனதுக்கு இதமாக இருக்கிறது!
இந்த குட்டிக்கதை மனதை கனக்க வைத்தது!

KParthasarathi said...

மனம் நிறைவு அடைந்தது

க.பாலாசி said...

நெகிழ்ச்சியான விசயம்..

மாதேவி said...

கன்னுக் குட்டிக்கு அம்மா கிடைத்துவிட்டது.