November 16, 2009

என் உடல் மீது உன் தேடல்கள்


முகம் மட்டுமே என்
அடையாளம்உன்னிடம் என்று
பல நாட்களாய் நினைத்திருந்தேன்.
என் கண்களை மட்டுமே
நீ பார்க்கிறாய் பேசும்போது
என்று நம்பினேன்.
உன்னருகில் நான் இருக்கையில்
இரு கை குவிப்பில்
பாதுகாப்பு கவசம்
எப்போதும் இருப்பதாய் உணர்ந்தேன்.
புலனாகாத எதிரிகள்
உன் அருகாமையில் நான் என்பதால்
விலகி ஓடிப் போவதாய்
என்னுள் கர்வம்.
என்னை ஏசிய அண்ணன்,
தம்பிகளிடம் குரல் உயர்த்திச் சொன்னேன்.
'ஒரு உண்மையானஆண்மகனைஎன்னுலகம் கண்டு விட்டது'
அப்பாவின் கோபம் பாதித்த அம்மா கூட
என்னை அதிசயமாய்ப் பார்த்தாள்.
தனக்குக் கிட்டாத ஒன்று
எனக்கு வாய்த்து விட்டதான பொறாமையுடன்.
ஆனால் என் நண்பா..
எப்போதிலிருந்து உன் முகமூடியைக் கழற்றி வைத்தாய்..
இப்போதெல்லாம் தெரிகிறதே, உன் பார்வையில்..
என் உடல் மீது உன் தேடல்கள்!

5 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"அப்பாவின் கோபம் பாதித்த
அம்மா கூட என்னைப் பார்த்தாள்.."
என்ன ஒரு யதார்த்தமான வார்த்தைகள்...
ரிஷபன்57 க்கே அது சாத்யம்...!

Ananthasayanam T said...

(முகம் மட்டுமே என்
அடையாளம்உன்னிடம் என்று
பல நாட்களாய் நினைத்திருந்தேன்.
என் கண்களை மட்டுமே
நீ பார்க்கிறாய் பேசும்போது
என்று நம்பினேன்.
உன்னருகில் நான் இருக்கையில்
இரு கை குவிப்பில்
பாதுகாப்பு கவசம்
எப்போதும் இருப்பதாய் உணர்ந்தேன்.
புலனாகாத எதிரிகள்
உன் அருகாமையில் நான் என்பதால்
விலகி ஓடிப் போவதாய்
என்னுள் கர்வம்.
என்னை ஏசிய அண்ணன்,
தம்பிகளிடம் குரல் உயர்த்திச் சொன்னேன்.
'ஒரு உண்மையானஆண்மகனைஎன்னுலகம் கண்டு விட்டது'
அப்பாவின் கோபம் பாதித்த அம்மா கூட
என்னை அதிசயமாய்ப் பார்த்தாள்.
தனக்குக் கிட்டாத ஒன்று
எனக்கு வாய்த்து விட்டதான பொறாமையுடன்.
ஆனால் என் நண்பா..
எப்போதிலிருந்து உன் முகமூடியைக் கழற்றி வைத்தாய்..
இப்போதெல்லாம் தெரிகிறதே, உன் பார்வையில்..
என் உடல் மீது உன் தேடல்கள்! )

ஏனோ தெரியவில்லை எனக்குள்ளும்
தொடங்கிவிட்டன தேடலும் தேடலுக்கான தேடலும்
ஒரு நாள் உன் கரம் பற்றுகையில்
இயற்கைக்கும் நமக்கும் தூரம் இல்லை என்று
சொல்லப் போகிறவர்களை நினைத்தால்
சற்றே பயமாக இருக்கிறது
என்றாலும்
எண்ணங்கள் தரும் உற்சாகத்தையும்
சொந்தம் கொண்டாடும்போது வரும்
சின்னத் தயக்கத்தையும்
என்னால் தவிர்க்கவே முடியவில்லை...
நண்பனே
நீயும் அப்படித்தானா..
முகமூடியை நீ கழற்றியது என்
முகத்தை எனக்குக் காட்டத் தானா ....

((கண்டுக்காதீங்க அண்ணா, நானும் என் கற்பனை கழுதையை அப்பப்ப கொஞ்சம் ஓட வைக்க முயற்சி செய்கிறேன்))

கே. பி. ஜனா... said...

வலிமையான வரிகள்!

CS. Mohan Kumar said...

நல்ல கவிதை. இயல்பாய் உள்ளது.

ஒரு விதத்தில் பார்த்தால் எந்த காதலும் கட்டிலை நோக்கி செல்ல தானே செய்கிறது?

krishna said...

valimaiyana varigal. padithu mudikkum podhu unmai sudukirathu
krishna