January 13, 2010

காதல் வெல்லட்டும்


தன் கண்ணீரைக் காணக்கூடாது என்று
மழையில் அழுவதாய்
ஒரு சிரிப்புக் கலைஞன் சொன்னான் ..
என் அழுகையை நீ பார்க்கக் கூடாது என்று
இப்போதெல்லாம் வானம் பார்க்கிறேன்..
பன்னிரண்டு மாதங்களும்
மழை பொழிந்தால்தான்
அது சாத்தியம் என்று
புத்தி சொல்கிறது..
காதலில் அழாதவர் யார் என்றும்
அதுவே கேட்கிறது..
கடற்கரை மணலில்
சிரித்துக் கொண்டிருக்கும் ஜோடிகளைப்
பார்க்கும் போதெல்லாம் ஏன்
என் மனம்துவள்கிறது..
உன் சிரிப்பைப் பார்த்துத்தான்
உன் மீதான
என் காதல் உதயமானது..
இன்றோ முகந்திருப்பிப் போகும் உன்னால்
என் சிரிப்பே தொலைந்து போனது..
பரிவுக்கும் பிரிவுக்கும்
ஒரு எழுத்துதான் பெண்ணேவித்தியாசம்..
கனவுகளைக் கொடுத்தாய் அப்போது
காதலின் ஜாடை காட்டி..
நினைவுகளைக் கலைக்கிறாய் இன்று
நேரில் வராமல்..
நேசிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த என்
மனசுக்கு சோகத்தைக் கற்றுக் கொடுத்தது போதும்..
நம் காதலும் காலத்தை வெல்லட்டும்..
அன்பை அங்கீகரிக்க வா...

11 comments:

Rekha raghavan said...

//பரிவுக்கும் பிரிவுக்கும்
ஒரு எழுத்துதான் பெண்ணேவித்தியாசம்..
கனவுகளைக் கொடுத்தாய் அப்போது
காதலின் ஜாடை காட்டி..
நினைவுகளைக் கலைக்கிறாய் இன்று
நேரில் வராமல்..//

அருமை..அருமை..எவ்வளவு அழகான வரிகள். காதலின் வலியை உணர்த்தும் கவிதை.

ரேகா ராகவன்.

Rekha raghavan said...
This comment has been removed by the author.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை மிக அருமை

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Paleo God said...

நல்லாருக்குங்க ரிஷபன்..வாழ்த்துக்கள்.::))

கே. பி. ஜனா... said...

அந்த 'சிரிப்புக் கலைஞன்' சார்லி சாப்ளின் படத்தைப் போலவே அட்டகாசம் கவிதை! காதலி வெகு தூரம் போய்விட முடியாது!

கே. பி. ஜனா... said...

அந்த 'சிரிப்புக் கலைஞன்' சார்லி சாப்ளின் படத்தைப் போலவே அட்டகாசம் கவிதை! காதலி வெகு தூரம் போய்விட முடியாது!

வசந்தமுல்லை said...

பரிவுக்கும் பிரிவுக்கும்
ஒரு எழுத்துதான் பெண்ணேவித்தியாசம்..
கனவுகளைக் கொடுத்தாய் அப்போது
காதலின் ஜாடை காட்டி..
நினைவுகளைக் கலைக்கிறாய் இன்று
நேரில் வராமல்..// இந்த வழியை பயங்கரமாக அனுபவித்து கொண்டிருப்பவன் நான். அனுபவித்து எழுதிய வார்த்தைகள்தான் இப்படி அமையமுடியும்.

Chitra said...

நேசிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த என்
மனசுக்கு சோகத்தைக் கற்றுக் கொடுத்தது போதும்............போன பதிவில் சிரிக்க வைத்தீர்கள். இந்த பதிவில், மனதின் வலியை உணர வைத்து இருக்கிறீர்கள்.

நிலாமதி said...

நம் காதலும் காலத்தை வெல்லட்டும்..
அன்பை அங்கீகரிக்க வா...அனுபவித்து எழுதிய வார்த்தைகள்தான் இப்படி அமையமுடியும்.

Sinthu said...

சில உண்மைகள் போதிந்துள்ளனவோ?

Thenammai Lakshmanan said...

//பரிவுக்கும் பிரிவுக்கும்
ஒரு எழுத்துதான் பெண்ணேவித்தியாசம்..//

excellent RISHABAN