ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சில முகங்களை
முதன் முறையாய் பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலை பேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!
13 comments:
ஏனென்று சொல்ல தெரியவில்லை ......தொலைபேசி அழைப்பில் நட்பின் கரம் நீளும் என்பதை ..
.இடுக்கண் களைவதாம் நட்பு என்பார்கள்.சிறந்த நட்பை பெற்ற் உங்களுக்குபாராட்டு............
//*ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!*//
அட... இப்போ தான் இத பத்தி நெனச்சேன்... அதுக்குள்ளே எழுதிடீங்க...
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.
.........ம்ம்மம்மம்ம்ம்ம்...... சரிதான். ஏன் என்று புரியாத விஷயங்கள் எத்தனை இந்த உலகில்?
ரிஷபன் சார், போன வாரம் நீங்க போட்ட பதிவின் same route la நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் என்று சொன்னேன் இல்லையா? நேத்து ஒரு பதிவு போட்டுருக்கேன். படிச்சி பாத்துட்டு சொல்லுங்க.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை//
இது எனக்காகவே...:)) அசத்தல் ரிஷபன்..:)
ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் பிடிக்கிறது...
எப்படி என்று தெரியவில்லை?
ஒவ்வொரு பதிவிலையும் கலக்குறீங்க.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
ரசித்தேன் நண்பரே!
இந்த கவிதையைப் படித்தேன் என்று
சொல்வதை விட அனுபவித்தேன் என்று
சொல்வதே மிகப் பொருத்தமானது!
ஏனென்று தெரியவில்லை இந்த கவிதையை நீங்கள் போட்ட மறு வினாடியே நான் எப்படி படிக்காமல் விட்டேனென்று. அருமையான கவிதை சார். தூள்!
ரேகா ராகவன்.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை! இந்த ரிஷபன் எப்போதும் மற்றவர்களை கவரும் விதமாகவே கவிதைகள் எழுதுவார் என்பதை சொல்லாமல் விட்டேன். யு ஆர் கிரேட்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உண்மைதான் ரிஷபன்.ஏனென்று தெரியமாலே பிடிக்கிறது சிலரை !
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
இந்த கவிதை
ஏமாற்ற்றதுக்காக ...ஏங்குகிற ....மனதின் பிரதிபலிப்பு
ஏனென்று சொல்லத் தெரியவில்லை, இந்தக் கவிதை மிகவும் பிடிக்கிறது...
அதே அதே !
[கே பி ஜனார்த்தனன அவர்களுக்கு நன்றி]
Post a Comment