என் வீட்டை கடந்து தான்
போகின்றன..
பொழிவது எப்போதாவது
என்றாகி விட்டது..
இருந்தாலும்
வானம் பார்க்கும் ஆவலும்
மேகம் தொடும் ஆசையும்
இப்போதும் மாறாமல்
மனசுக்குள்..
வீட்டு வாசலில்
நாலைந்து ஆடுகள் கூடி
இடைவிடாமல்
'மே .. மே ..' சத்தம்..
ஒன்று கேட்க
இன்னொன்றின் பதில் போல ..
தூக்கம் தொலைந்த
எதிர்வீட்டுக் காரன்
வெளியே வந்து விரட்டி
விட்டான்..
பாதி சம்பாஷணையில்
அவைகள் கிளம்பிப் போனதும்
மீதி என்னவாக இருக்கும் ?
இதுவே இப்போது
என் மண்டை குடைச்சல்..
18 comments:
ஒரு ஆடு ஏப்ரலுக்கு அடுத்த மாசம் என்னன்னு கேக்கும்.இன்னொண்ணு ’மே’ன்னு கத்தும்.அது இல்லாட்டா..ஜூனுக்கு அடுத்த மாசம் என்னன்னு கேடக், இன்னொரு ஆடு, ’மே’ன்னு கத்தப் போறது. இதுக்கா,
ரிஷபனுக்கு மண்டை குடைச்சல்?
//ஒன்று கேட்க
இன்னொன்றின் பதில் போல//
ஏதாவது சீரியலைப்பத்தி பேசுமாயிருக்கலா'மே' :-)))))
//இடைவிடாமல்
'மே .. மே ..' சத்தம்..
ஒன்று கேட்க
இன்னொன்றின் பதில் போல ..//
ஒரு வேலை மே மாதம் பிறந்துவிட்டதை சொல்லிக் கொண்டிருந்திருக்குமோ? இப்போது இதுவே என் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.
இரண்டு கவிதைகளும் அபாரம். பாராட்டுகள்.
ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)
மீதி என் காதில் விழுந்தது. ''இந்த ரிஷபன் இப்படி வெளுத்து வாங்குகிறாரே, சூப்பர், மெய்யாலுமே!மே! மே! ''
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ரிஷபன். முதல் கவிதை அபாரம்னா ரெண்டாவது சூப்பர்ப்:))
வானம் பார்க்கும் ஆசையும்
மேகம் தொடும் ஆசையும் தான்
நம்மை இன்னமும் எழுத
வைத்துக் கொண்டிருக்கிறது.
மிருகங்களின் பாஷைத்
தெரிந்தால் நன்றாகத்தானிருக்கும்
ரிஷபன்.
ரசனையுள்ள கவிதை ரிஷபன்.. நல்லாயிருக்கு...
ரிஷபன்..அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ரெண்டையும்.
ஆனால் இரண்டாவது சிந்தனை அபாரம்.உண்மையா சிரிக்கணும்ன்னு சிரிக்கல.தானாச் சிரிப்பு வந்திடிச்சு !
தமிழ்மணம் பரிந்துரை இல்லையா ?ஓட்டுப் போடமுடில.
காட்டில் ஓநாய்த் தொல்லை.
நாட்டில் கசாப்புக்க்கடைக்காரர் தொல்லை.
வீட்டில் என்றாவது விருந்துக்கு உதவும் என்று போலிப் பாசத்துடன் பராமரிப்பு.
எல்ல உயிர்களிடத்தும் அன்பு காட்டும் எண்ணம் இந்த மனிதர்களுக்கு ஏற்படட்டும் எண்ட்ரு கோவிலுக்குச் சென்று முறையிட நினைத்தன அந்த ஆடுகள். மேய்ச்சலுக்குப்போனவை கோவில் பக்கம் சென்றன. “இறைவன் குட்டி குடித்தலைப் பார்க்க திரளாக வாருங்கள் பக்தர்களே!” என்ற மிகப்பெரிய விளம்பரப்பலகை. அதன் கீழ் கழுத்தில் மாலையுடன், மஞ்சள் பூசிய உடன் பிறப்புகளின் கூட்டம்.
இதைப்பற்றித்தான் பயத்துடன் மே மே என்று பேசிக்கொண்டிருந்தன உங்கள் வீட்டு வாசலில் அந்த ஆடுகள். அவைகளின் சம்பாஷணையின் தொடர்ச்சி, வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ஜீவகாருண்யத்தைப் போதித்த அந்த வடலூர் வள்ளலாரைப்பற்றியதாகத்தான் இருக்கும். மண்டைக்குடைச்சலை மறந்து தூங்குங்கள். நம்மால் பெரியதாக என்ன செய்துவிட முடியும்?
\\வானம் பார்க்கும் ஆவலும்
மேகம் தொடும் ஆசையும்
இப்போதும் மாறாமல்
மனசுக்குள்.. \\
இந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும் போல.
இரண்டாவது கவிதையும் நல்லாயிருக்கு.
உங்களின் கவிதை மழையில் நானும் நனைந்தேன் மிகவும் அருமை . நண்பரே .
நல்லாயிருக்கு
ரொம்ப நல்லா இருக்கு தோழரே....
நல்லா இருக்குங்க. :-)
மே மாசத்தை அழகா "மே"ன்னு வரவேற்கிறீங்க
''மே"கங்களின் கவிதையும் அழகு .
(செல்லும் மேகம் பொழிந்திருக்குமே எதிர்பாராமல் !)
ஆடுகளின் பாஷை அதனினும் அழகு
ரிஷபன்.நேற்றுத்தான் ஆடுகளின் மொழி குறித்து யோசித்தபடி இருந்தேன்.அற்புதமான கவிதை.மற்றவர்களின் உலகம் குறித்து நாம் யோசிப்பதும் இல்லை.அதற்கான ஈடுபாடும் பொறுமையும் இல்லை.செடிகொடிகளின் மொழியும் இப்படித்தான் நாம் புரிந்துகொள்வதில்லை.
I liked the second one Rishaban.
First one wasn't exactly your style. There was a little touch of blame in the first one.
Post a Comment