வாழ்க்கை ஒரு சவால்..
அல்லது பந்தயம்..
அல்லது விளையாட்டு..
நேருக்கு நேர்
மோதும்
வீரர்களைத்தான்
அது கொண்டாடுகிறது..
விலகிப் போகும் மனிதரிடம்
அது சுவாரசியம்
காட்டுவதில்லை..
தோற்றுப் போகும் போது
இன்னொரு சான்சும்
தருகிறது..
கடைசி வரை
விளையாடிக் கொண்டிருப்பவர்கள்
கை நிறைய மெடல்கள்..
அல்லது பாராட்டு பத்திரங்கள்..
குறைந்த பட்சம் கை குலுக்கல்கள் உடன்
திரும்புகிறார்கள்..
எல்லைகளற்ற மைதானமாய்
வாழ்க்கை..
அடையாளங்களுக்குள் அகப்படாமல்
ஆடலாம் நமக்கான ஆட்டத்தை..
ஜெயித்தாலும் தோற்றாலும்
ஆட்டக்காரன் அழைக்கப்படுவது
இறுதி வரை
"ஆட்டக்காரன்" என்கிற பெயரில்தான்!
16 comments:
வாழ்க்கையின் போராட்டங்களை, நம்பிக்கையுடன் சந்தித்து, முன்னேறுவதை அருமையாக சொல்லும் கவிதை. பாராட்டுக்கள்!
good one again rishaban
ரசித்தேன்.
‘ஆட்டக்காரன்’ என்பதும் ஒரு அடையாளம் தானே! :-))))
தமிழ்மணப்பட்டை இணைக்கவில்லையா?
போராட்டமில்லாமல் வாழ்க்கை ஏது?.. அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் ரிஷபன்.
//கடைசி வரை
விளையாடிக் கொண்டிருப்பவர்கள்
கை நிறைய மெடல்கள்.. //
யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வரிகள். நல்ல கவிதை.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
சில வேளைகளில் அந்தக் கை குலுக்கல் கூட கிடைக்காமல் போய்விடுகிறது .
உங்கள் கவிதை, ப்ளாகில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். எழுதுவதில் சோர்வுறாமல் இருந்தால் உங்களைப் போல நூறுவரை, இல்லை இல்லை, ஆயிரம் வரை எழுதி மெடல்கலாக வாங்கி குவிக்கலாம். நிறைய பாராட்டுக்களும் பெறலாம்.
\\அடையாளங்களுக்குள் அகப்படாமல்
ஆடலாம் நமக்கான ஆட்டத்தை..\\
நிச்சயமாக...
நல்ல கவிதை ரிஷபன். நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். நன்றி.
நல்லதொரு கவிதை ரிஷபன்.
வாழ்க்கையையும் விளையாட்டையும் ஒப்பிட்டுக் கவிதையாக்கியிருக்கிறீர்கள்.
விளையாட்டா வாழ்க்கையா என்கிறமாதிரி வரிகள் அருமை.
//ஜெயித்தாலும் தோற்றாலும்
ஆட்டக்காரன் அழைக்கப்படுவது
இறுதி வரை
"ஆட்டக்காரன்" என்கிற பெயரில்தான்!//
அருமையான வரிகள். ரசித்தேன்.
வெங்கட் நாகராஜ்
ஆட்டக்காரர் மட்டுமல்ல, கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என அனைத்துத் துறையினருக்குமே வாழ்க்கையில் பொருந்தும் அருமையான தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.
புரிகிறது ரிஷபன்.
ஆட்டக்காரன் என்றும்
ஆட்டத்தை நிறுத்தக்
கூடாதென்பதே
ஆட்டத்தின் முக்கிய விதி.
எக்ஸாட்லி இதேதான் ஆனா வேற விதமா எழுதி இருந்தேன் தோழரே! :)) என்னுடையதை விட நீங்கள் எழுதிய விதம் அருமை.
அருமை.:))
நல்லா இருக்குங்க.. நெசமாவே!!
இன்று மற்றொரு கவிதை படித்தேன் ஆட்டம் பற்றியது .சிதறல்கள் . எது எப்படி இருந்தாலும் நம் வாழ்கையை நாம் தான் அடங்கும் வரை ஆட வேண்டும் .
ஒரு தீர்மானமா என்னவோ சொல்ல வரீங்க .all in the game
Post a Comment